ரமலான் மாதத்தில் உணவகங்களை மூடுவது ஓர் ஆலோசனையே- கிளந்தான் எம்பி

கிளந்தானில் ரமலான் மாதத்தில் உணவகங்களை இரவு 8.30இலிருந்து 10 மணிவரை மூடுவது  ஓர் உத்தரவல்ல, வெறும் ஆலோசனைதான் என்கிறார் கிளந்தான் மந்திரி புசார் அஹமட் யாக்கூப். கடைகளை மூட வேண்டும் என்பதற்கு வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இந்த மாற்றம். இதன் தொடர்பில் ஊராட்சி மன்றங்களுக்குப் புதிய அறிவிக்கை…

அன்வாரை முன்னாள் கைதி என்பது தப்பா? தகியுடின் கேள்வி

பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை ஒரு முன்னாள் கைதி என்று குறிப்பிட்டதில் தவறில்லை என்கிறார். அது தவறு என்று சொல்வோர் நீதிமன்ற வழக்கைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றார். “என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்வோர் சட்டத்தையும் உண்மைகளையும் சரிபார்க்க வேண்டும் என்று…

சண்டாகானில் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன-பங்

நேற்றைய சண்டகான் இடைத் தேர்தலில் வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்பட்டனவாம். சாபா அம்னோ தலைவர் பங் மொக்தார் ரடின் கூறிக்கொள்கிறார். “சில வாக்காளர்கள் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகள் உணமையா என்று ஆராய்கிறோம்”, என்றவர் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. நேற்று நடந்த சண்டாகான் நாடாளுமன்றத் தொகுதி…

‘மகாதிரை விடுங்கள் ஐயா, அவர் எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து முடிக்கட்டும்’-…

டாக்டர் மகாதிர் முகம்மட் எவ்வளவு காலத்துக்குப் பிரதமராக இருப்பார் என்ற சர்ச்சையில் டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் ஈடுபடக்கூடாது என்று பார்டி பிரிபூமி மலேசியா(பெர்சத்து) உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினார். மகாதிர் விலகிக்கொள்ள விருப்பமில்லாமல் பிரதமர் பதவியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கும்…

சண்டாகான் இடைத் தேர்தல்: நண்பகல்வரை 32 விழுக்காட்டினர் வாக்களித்தனர்

சண்டாகான் இடைத் தேர்தலில் இன்று நண்பகல் வரை வாக்களித்தோர் எண்ணிக்கை 32 விழுக்காடு ஆகும். 39,684 வாக்காளர்களைக் கொண்ட அத்தொகுதியில் 70விழுக்காட்டினராவது வாக்களிக்க வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. காலையில் வானிலை நன்றாக இருந்தது. பிற்பகலில் பல இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வுத்…

சண்டாகான் தேர்தல் பரப்புரைமீது 13 புகார்கள்

சண்டாகான் இடைத் தேர்தல் பரப்புரைமீது போலீ ஸ் 12 புகார்களையும் எம்ஏசிசி ஒரு புகாரையும் பெற்றதாக தேர்தல் ஆணைய(இசி) தலைவர் அஸ்ஹார் ஹருன் தெரிவித்தார். “எனக்குத் தெரிந்து நேற்றுவரை 12 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. எல்லாமே சிறுசிறு புகார்கள், அனுமதி பெறாமல் பரப்புரை செய்தார்கள், போட்டியிடாத கட்சியின் சின்னங்கள்…

சிறுவர் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனிக்க தனி அமைப்பு

அரசாங்கம் சிறுவர் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனிக்க சிறுவருக்கான ஒரு அமைப்பை உருவாக்கத் திட்டமிடுகிறது என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார். இப்போது சமுக நலத் துறையில் சிறுவர் நலத் துறை ஒன்று இருக்கிறது. ஆனால், அதற்கு அளவுக்கு அதிகமான பொறுப்புகள் உள்ளன…

நஜிப், ரோஸ்மாவுக்கு சிலாங்கூர் கொடுத்த டத்தோ ஸ்ரீ பட்டங்கள் தற்காலிகமாக…

சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சூர் ஆகியோருக்கு வழங்கிய பட்டங்களை அவர்களின் நீதிமன்ற வழக்குகள் முடியும்வரை தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளார். மே 6 தொடங்கி அந்தத் தற்காலிக இரத்து அமலுக்கு வருவதாக சுல்தானின் செயலாளர்…

தீவுக்குச் செல்ல போலீஸ் படகைப் பயன்படுத்துவதா? வாரிசானைச் சாடியது பெர்சே

வாரிசான் கட்சி அதன் கட்சித் தொண்டர்களை ஒரு போலீஸ் படகில் பூலாவ் பெர்ஹாலாவுக்குக் கொண்டுசென்றதை பெர்சே கண்டித்துள்ளது. சாபா முதலமைச்சர் ஷாபி அப்டாலின் கட்சி உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரைக்காக சண்டாகானின் மேற்குக் கரைக்கு அப்பால் உள்ள தீவுக்குப் போலீஸ் படகு ஒன்றில் சென்றார்கள் என்றும் படகை ஒரு போலீஸ்…

அன்வாரைப் பிரதமராக்கும் வாக்குறுதியை நினைவுபடுத்துகிறார் பிகேஆர் தலைவர்

பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அமைக்கப்பட்டபோது அன்வார் இப்ராகிம் பிரதமராக்கப்படுவார் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நினைவுபடுத்தினார். முதிர்ந்த வயதிலும் நாட்டை வழிநடத்தும் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு நன்றி தெரிவித்த சைட் பாட்லி, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கும் திட்டமொன்றும்…

அமைச்சரவைப் பட்டியல் அரசு இதழில் வெளியிடப்படாதது ஏன்? விளக்கமளிப்பீர் அல்லது…

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் புத்ரா ஜெயாவில் ஆட்சி ஏற்று ஓராண்டு ஆகியும் அதன் அமைச்சர்களின் பட்டியல் இன்னமும் அரசிதழில் வெளியிடப்படாதிருப்பது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள பாஸ் விரும்புகிறது. இதற்குத் தக்க பதில் அளிக்கவில்லை என்றால் அதற்கு அமைச்சரவை “முழுப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்” என பாஸ்…

ஹரப்பான் சாதனைகளை ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மதிப்பிடுங்கள் -ரபிடா கோரிக்கை

பக்கத்தான் ஹரப்பான் சாதனைகளை இப்போது மதிப்பிடக்கூடாது ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மதிப்பிடுவதே முறையாகும் என்கிறார் முன்னாள் அமைச்சர் ரபிடா அசீஸ். “ஓராண்டு என்பது அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் 20 விழுக்காடுதான். “எனவே இப்போது மதிப்பீடு செய்வது அரசாங்கம் அதன் ஐந்தாண்டுப் பதவிக் காலத்தில் என்ன சாதித்தது என்பதைக் காண்பிக்கப் போவதில்லை”, என்றவர்…

இனவாதம் புதிய மலேசியாவைத் தடம்புரள வைத்து விடும் அன்வார் எச்சரிக்கை

  பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், இனவாதத்தை அடக்கி வைக்காவிட்டால் அது அரசாங்கத்தின் சீரமைப்புப் பணிகளைக் குலைத்துவிடும் என எச்சரிக்கிறார். “ஹரப்பான் மாற்றங்களையும் சீரமைப்புகளையும் கொண்டுவர முனைந்தாலும் இனத் தொடர்பு விவகாரங்கள் மோசமடைந்து வருவதுபோல் தெரிகிறது”, என்று அன்வார் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “இன, சமூக மருட்டல்களைச்…

பட்டத்திளவரசரையும் குடும்பத்தையும் இப்படியா அவமதிப்பது? வேண்டாமே ‘சாக்கடை அரசியல்’ –…

ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் ஒரு இளைஞர், பல்வேறு விவகாரங்களிலும் தன் கருத்தை வெளியிட விரும்புகிறவர் என முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம் கூறினார். இளவரசரின் கருத்துகள் சில தவறானவையாக இருக்கலாம், ஏறுமாறானவையாகக் கூட இருக்கலாம், ஆனால் அவற்றால் நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை…

ரமலான் மாதத்தில் உணவகங்களை இரவில் தற்காலிகமாக மூட மாநில அரசு…

கிளந்தானில் உள்ள உணவகங்கள் நோன்பு மாதத்தில் இரவு மணி 8.30-இலிருந்து 10மணிவரை தற்காலிகமாக மூடப்பட வேண்டும். மாநில அரசு, மாநிலச் செயலகம் வழி அதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தராவி தொழுகை செய்வதை ஊக்குவிக்கவே அவ்வாறு செய்யப்படுவதாக அரசின் அறிக்கை கூறியது. அப்படி ஒரு உத்தரவு…

அரசுப் பணியாளர்களை அரசாங்கம் நம்ப வேண்டும்-டயிம்

சில அரசாங்கப் பணியாளர்கள் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்குக் குழிபறிக்க முனைவதாக பிரதமர் கூறியிருந்தாலும் அவரின் அணுக்கமான ஆலோசகர் ஒருவர் அரசாங்கம் அரசியலில் நீடித்திருக்க விரும்பினால் அது அரசுப் பணியாளர்களை நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார். டயிம் சைனுடின், ஹாங்காங்கின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில்…

ஜோகூர் பட்டத்திளவரசர் சிறு பிள்ளை, பேசுவதை நிறுத்த வேண்டும்- மகாதிர்

ஜோகூர் பட்டத்திளவரசர்(டிஎம்ஜே) துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அவருக்குத் தெரியாத விசயங்கள் குறித்துப் பேசக் கூடாது என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். பிரதமர், ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் குறித்துக் கருத்துரைப்பதைத் தவிர்த்தார் ஆனால், பட்டத்திளவரசர் பற்றிக் கருத்துரைப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமுமில்லை. “சுல்தான்…

‘காபிர்கள்’ நாட்டை ஆண்டால் உய்குர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் இங்குள்ள முஸ்லிம்களுக்கும்

இந்நாட்டை முஸ்லிம்-அல்லாதார் ஆள அனுமதித்தால் சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலைதான் இங்குள்ள முஸ்லிம்களுக்கும் ஏற்படும் என்று பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் மொக்தார் செனிக் எச்சரித்துள்ளார். “எனக்குச் சீனாவில் உள்ள சக முஸ்லிம்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் நோன்பிருக்கவும் சமயத்தைப் பின்பற்றவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. மலேசிய முஸ்லிம்கள்…

‘முன்பு மசீச செய்ததைத்தானே இப்போது நீங்களும் செய்கிறீர்கள்’- கிட் சியாங்கைச்…

கடந்த ஆண்டு மசீச அதன் ஆண்டுக் கூட்டத்தை இரகசியமாக நடத்தியபோது லிம் கிட் சியாங் அதைச் சிறுமைப்படுத்திப் பேசியதை வீ கா சியோங் இன்று நினைவு கூர்ந்தார். 1எம்டிபி ஊழலில் முன்னாள் பிரதமரைத் தற்காத்துப் பேசிய கட்சித் தலைமையை உறுப்பினர்கள் ஆண்டுக் கூட்டத்தில் பிய்த்தெடுத்து விடுவார்கள் என்று அஞ்சியே…

ஹருஸ்சானி : பிஎச் அரசாங்கத்தின் கீழ், இஸ்லாம் மதம் அழுத்தப்படுவதாக…

நாட்டில், தற்போது இஸ்லாத்தின் நிலை மோசமாக உள்ளது எனும் பெர்லிஸ் முஃப்தியின் கருத்தோடு, பேராக் முஃப்தி ஹருஸ்சானி ஜக்காரியா ஒத்துபோகவில்லை. [caption id="attachment_175209" align="alignright" width="350"] அஸ்ரி[/caption] அரசாங்கம் மாறினாலும், மலேசியாவில் இஸ்லாம் மதத்தின் நிலை பாதுகாப்பாகவே உள்ளது என்றார் அவர். “புதிய அரசாங்கத்தின் கீழ், இஸ்லாம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக எனக்குத்…

ஆர்டிஎஸ் திட்டத்துக்குத் தேவையான நிலத்தை இலவசமாகவே கொடுக்க முன்வந்தார் ஜோகூர்…

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இஸ்கண்டார், புக்கிட் சாகாரில் தமக்குச் சொந்தமான நிலமொன்று உத்தேச ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு இரயில் திட்டத்துக்குத் (ஆர்சிஎஸ்) தேவைப்படுவது தமக்குத் தெரியாது என்றார். அந்த நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியிருப்பதால் ஆர்டிஎஸ் திட்டச் செலவு உயர்ந்து விட்டதாகக் கூறப்படுவதைக் கேட்டு சுல்தான் வருத்தமடைந்ததாகவும் நிலத்தை…

இந்து சமயத்தை அவமதித்தேனா? மறுக்கிறார் முகம்மட் ஜம்ரி

இந்து சமயத்தை அவமதித்ததற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட முகம்மட் ஜம்ரி வினோத் காளிமுத்து அப்படிப்பட்ட குற்றமெதனையும் தான் செய்யவில்லை என மறுக்கிறார். “நான் அவமதித்ததாக பலரும் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. யாரெல்லாம் என்னைக் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள்தான் உண்மையில் அவமதிக்கிறார்கள். “பொறுப்பற்ற கும்பல்களான இஸ்லாத்தின்…

இன்று வரலாற்றில் குறிப்பிட வேண்டிய நாளாகத் தமிழ்க்காப்பக அமைப்புநாள் அமைந்தது

இன்று வரலாற்றில் குறிப்பிட வேண்டிய நாளாகத் தமிழ்க்காப்பக அமைப்புநாள் அமைந்தது. மலேசியக் கல்வி அமைச்சின் அரசுப்படியான ஒப்புதலோடு முகாமையான அரசு அதிகாரிகளின் துணையோடும் அரசுசாரா அமைப்புகளின் துணையோடும் தமிழ்க் காப்பகம் அமைந்தது. இவ்வமைப்பு விழாவை மலேசியக் கல்வி அமைச்சின் துணையமைச்சர் மாண்புமிகு தியோ நீ சின் அதிகாரப்படியாகத் தொடக்கி…