இந்தோனேசியாவில் 200க்கு மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் களைப்பு மிகுதியால் சாவு

இந்தோனேசியாவில் தேர்தல் முடிந்து வாக்கு-எண்ணும் பணி நடைபெறுகிறது. மே 22 வரை அது தொடரும். நீண்ட காலம் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் தேர்தல் அதிகாரிகள் களைத்துப் போகிறார்கள். இப்படிக் களைத்துப் போனவர்களில் கடந்த வியாழக்கிழமை வரை மொத்தம் 222 பேர் செத்துப் போனார்களாம். இதனால் கவலைகொண்ட பல தரப்பினரும்…

கட்டிடத்தில் விரிசல்: குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்

கோலாலும்பூர் தாமான் கிராமாட் அடுக்குமாடி வீட்டில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அதிலிருந்த 222 குடியிருப்பாளர்கள் இன்று நணபகல் அப்புறப்படுத்தபட்டார்கள். 37 குடும்பங்களைச் சேர்ந்த அந்த 222 பேரும் தாமான் கிராமாட் இடைநிலைப்பள்ளிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மை தலைவர் அஹ்மட் பைருஸ் முகம்மட் யூசுப் கூறினார்.…

சண்டகான் இடைத் தேர்தலில் ஐந்து-முனைப் போட்டி

சண்டகான் இடைத் தேர்தலில் ஐவர் களமிறங்குவார்கள் என்று தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டிஏபி-இன் விவியான் வொங், பார்டி பெர்சத்து சாபா(பிபிஎஸ்)-வின் லிண்டா ட்சென் ஆகியோருடன் மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதைத் தேர்தல் அதிகாரி முகம்மட் ஹம்சான் ஆவாங் சுபாய்ன் உறுதிப்படுத்தினார். ஹம்சா…

கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலையில் தரமுயர்த்தும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சிலாங்கூரின் ஆறு மாவட்டங்களில் நீரளிப்பு வழக்க நிலைக்குத் திரும்பியது. சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலையில் பழுதுபார்க்கும் வேலைகள் நடந்ததால் புதன்கிழமை தொடங்கி 86 மணி நேரத்துக்கு ஷா ஆலம், கிள்ளான், கோலாலும்பூர், பெட்டாலிங் ஜெயா,…

மெட்ரிகுலேசன் வாய்ப்பு இன பேதமின்றி தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கப்…

எந்த அரசு மாறினாலும், மாறாது தொடர்ந்து தொடர்கதையாகும் தமிழ் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் உயர்கல்வி வாய்ப்பு இன பேதமின்றி தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப் பட வேண்டும் என மலேசிய தமிழ்க் கல்வி ஒன்றியம் கோரிக்கை வைப்பதாக அதன் பொறுப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். மலேசிய திருநாட்டின்…

மக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர் ஆட்சியாளர்

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டர், பிரதமர் டாக்டர் மகாதிருக்குச் சமாதான தூது அனுப்பி இருப்பதுபோல் தோன்றுகிறது. பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள கலந்துரையாடல் நடத்துவதே நல்லது என சுல்தான் இன்று பிற்பகல் முகநூலில் பதிவிட்டிருந்தார். “மாறுபாடுகள் அல்லது கருத்துவேறுபாடுகள், குறிப்பாக ஜோகூர் மாநிலத்துக்கும் கூட்டரசு அரசாங்கத்துக்குமிடையில் அப்படி ஏதுமிருக்குமானால்,…

சட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப அரசு…

மலேசியாவுக்குள் கடத்திவரப்படும் நெகிழிக் கழிவுகளை அவை எங்கிருந்து வந்தனவோ அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்புவதென அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. பேசல் சட்டத்தைப் பயன்படுத்தி அவ்வாறு செய்யப்படும் என்று வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சுரைடா கமருடின் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். பேசல் சட்டம் அபாயமிக்கக் கழிவுப் பொருள்களை ஒரு நாட்டிலிருந்து…

எக்ஸ்கோ விவகாரத்தில் பதவி விலகும் நிலைக்குச் சென்று விட்டாராம் மகாதிர்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஜொகூர் ஆட்சிக்குழு மாற்றி அமைக்கப்பட்டதால் ஆத்திரமுற்று பதவி விலகும் நிலைக்குச் சென்று விட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது. பெர்சத்து தலைவருமான மகாதிர், திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அக்கட்சியின் உச்சநிலைக் கூட்டத்தில் இதைத் தெரிவித்தாராம். “ஆட்சிக்குழுவை அப்படியே வைத்துக்கொள்ளச் சொல்லித் தாம் கூறிய ஆலோசனையைப்…

மெட்ரிகுலேஷன் கல்வி: கோட்டா முறை தக்க வைத்துக்கொள்ளப்பட்டது ஏன்?

மெட்ரிகுலேஷன் வகுப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் பூமிபுத்ரா மாணவர்களுக்கு 90 விழுக்காடு இடம் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடம் என்ற கோட்டா முறை அப்படியே தக்க வைத்துக் கொள்ளப்பட்டிருப்பது பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்கு வியப்பளிக்கவில்லை. மலாய்- முஸ்லிம் சமூகத்தில் எதிர்ப்பு கிளம்பலாம் என்று அஞ்சியே பக்கத்தான்…

மோசமான காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் ஆவதை அன்வார் விரும்பவில்லை

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பொருளாதார நிலை மோசமாக உள்ள காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை. இதை அவரே தெரிவித்தார். அன்வார், இன்று அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் அபுசுலைமான் அறநிதியைத் தொடக்கி வைத்தார். “இப்போது என்னிடம் நிதி அமைச்சைக் கொடுத்தால், ஏற்க மாட்டேன். ஏனென்றால்…

‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’ எம்ஏசிசி-க்கு அறிவுறுத்து

முன்னாள் செபராங் பிறை கவுன்சிலர் ஒருவர், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) பினாங்கு ஆர்டிடி ஊழலில் தொடர்புள்ள “பெரிய சுறாவை”ப் பிடிக்க வேண்டுமே தவிர “சிறிய நெற்றிலிகளுக்கு” வலைவீசிக் கொண்டிருக்கக் கூடாது என்றார். புக்கிட் தாம்புன் டிஏபி கிளைத் தலைவருமான தியோ சியாங் ஹூய், ஏப்ரல் 20 தொடங்கி இதுவரை…

வழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

புக்கிட் அமான், ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களை அடுத்து தொழுகை இல்லங்கள் உள்பட நாடு முழுக்க பாதுகாப்பை முடுக்கி விட்டுள்ளது. நியு சிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு பள்ளிவாசல்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் கடந்த மாதம் கண்காணிப்புப் பணியை அதிகரித்ததாக இடைக்கால இன்ஸ்பெக்டர்-ஜெனரல்…

கல்வியாளர்களை அவமதிப்பதா? சைபுடின்மீது பாய்கிறார் ரீசால்

ரோம் சாசன விவகாரத்தில் புத்ரா ஜெயாவின் கருத்துடன் ஒத்துப்போகாத பேராசியர்களை வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா அவமதித்து விட்டதாக அம்னோ எம்பி ஒருவர் கடுமையாகச் சாடினார். அக்கல்வியாளர்களை “கங்கோங் பேராசிரியர்கள்” என்று கூறும் அளவுக்கு சைபுடின் தரம்தாழ்ந்து போயிருக்கக்கூடாது என்று கப்பளா பத்தாஸ் எம்பியான ரீசால் மரைக்கான் நயினா…

மலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து வலியுறுத்து

பெர்சத்து மலாய்க்காரர் உரிமைகளைத் தற்காப்பதற்காக அதை அம்னோவுடன் ஒப்பிடுவதோ இனவாதக் கட்சி என்று முத்திரை குத்துவதோ கூடாது என அதன் தலைமைச் செயலாளர் மர்சுகி யாஹ்யா கூறினார். இரண்டு கட்சிகளுக்கும் அடிப்படையில் பெருத்த வேறுபாடு உண்டு என்று கூறியவர் பெர்சத்து ஊழலை வெறுக்கிறது, ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைவரை…

மெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள்

டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பல்கலைக்கழகத்துக்கு முந்திய மெட்ரிகுலெஷன் கல்வித் திட்டத்தைச் சில தரப்பினர் அரசியலாக்குவதை நிறுத்திக் கொண்டு அதற்குத் தக்கதொரு தீர்வைக் காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சில தரப்பினர் இந்த விவகாரத்தை அரசியலாக்கி பூமிபுத்ரா- அல்லாதாருக்கு 10 விழுக்காடு இடங்களுக்குமேல் ஒதுக்கினால் அது மலாய்க்காரர்களுக்கு ஓர்…

உயர்க்குடி பிறந்தோரே தலைவர்களாக இருந்தது போதும்- அம்னோ உதவித் தலைவர்

ரந்தாவ் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முகம்மட் ஹசானே தொடர்ந்து அம்னோ தலைவராக இருக்க வேண்டும் என்கிறார் அக்கட்சியின் உதவித் தலைவர் முகம்மட் காலிட் நோர்டின். ஏனென்றால், வாக்காளர்களை மீண்டும் பிஎன்னுக்கே வாக்களிக்கும்படிச் செய்வதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று காலிட் ஓர் அறிக்கையில் கூறினார். ”அவரின் பண்புகள்…

ஜொகூர் சுல்தான் முன்னிலையில், 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்மாயில் முன்னிலையில் ஜொகூர் மாநில புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர் சத்தியப் பிரமாணம் எடுத்துகொண்டனர். இன்று காலை, ஜொகூர் பாரு புக்கிட் ஷெரின் அரண்மனையில் இந்தப் பதவியேற்பு வைபவம் இனிதே நடந்தேறியது. ஜொகூரின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பட்டியல் பின்வருமாறு…

போலீஸ் சிறப்புப் பிரிவினர் காட்டு முகாம்களில் மனித எலும்புக் கூடுகளைக்…

வாங் கெலியான் ஆர்சிஐ|| 2015-இல் தாய்- மலேசிய எல்லை அருகில் பெர்லிஸ், வாங் கெலியானில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆள்கள் தங்குவதற்கான முகாம்களையும் சவக்குழிகளையும் கண்டுபிடித்த போலீஸ் படையினர் மனித எலும்புக் கூடுகளையும் கண்டெடுத்தனர். இன்று வாங் கெலியான் அரச விசாரணை ஆணையத்தில் சாட்சியமளித்த முன்னாள் சிறப்புப் பிரிவு(எஸ்பி) அதிகாரி…

ஜோகூர் ஆட்சிக்குழுவில் மாற்றம் ஏன்? எம்பி விளக்கம்

ஜோகூரின் புதிய மந்திரி புசார் டாக்டர் ஷருடின் ஜமால், யாருடன் இணைந்து பணியாற்றுவது வசதியாக இருக்குமோ அப்படிப்பட்டவர்களை ஆட்சிக்குழுவில் வைத்திருப்பதாகக் கூறினார். பெர்சத்துவின் மஸ்லான் பூஜாங்கும் டிஏபி-இன் டான் ஹொங் பின்னும் ஆட்சிக்குழுவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பற்றி விளக்கியபோது அவர் இவ்வாறு கூறினார். “நான் ஏற்கனவே கூறியதுபோல், எந்தெந்த ஆட்சிகுழு…

டிஏபி முக்கிய விவகாரங்களில் கருத்துரைக்கத் தவறுவதில்லை- தெரேசா கொக்

டிஏபியை விமர்சிப்பவர்கள் குறைகூறுவதுபோல் முக்கிய விவகாரங்களில் அது வாயைப் பொத்திக்கொண்டிருப்பதில்லை என அக்கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் தெரேசா கொக் கூறினார். முக்கிய விவகாரங்களில் துணிச்சலாகக் கருத்துரைக்கும் கட்சியான டிஏபியால் அமைச்சரவையைக் கட்டுப்படுத்தி வைக்க முடிவதில்லை, கொள்கைகள் தடம் மாறும்போது தடுக்க முடிவதில்லை, கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற…

டிஏபி-யைக் கலைத்துவிட்டு பெர்சத்துவில் சேர்ந்து விடலாம்: முன்னாள் டிஏபி உறுப்பினர்…

டிஏபி தலைவர்கள் கட்சி உறுப்பினர்களைச் சந்திக்கும் கூட்டமொன்று விரைவில் நடைபெறவுள்ள வேளையில், அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் டிஏபியைக் கலைத்துவிட்டு எல்லாரும் பெர்சத்துக் கட்சியில் இணைவது மேல் எனக் கூறியுள்ளார். ஏனென்றால்,, டிஏபி கர்ப்பால் உயிருடனிருந்தபோது கடைப்பிடித்த கொள்கையை இப்போது கடைப்பிடிப்பதில்லையாம். அந்த ஆத்திரம்தான் சட்ட விரிவுரையாளர் ஷாம்ஷேர்…

ஜொகூர் ஆட்சிக்குழுவில் 3 புதிய முகங்கள் தோன்றலாம்

ஜொகூர் மாநிலப் புதிய ஆட்சிக்குழுவில், 3 புதிய முகங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் இருவர் தெனாங் சட்டமன்ற உறுப்பினர், முகமட் சோலிஹான் பட்ரி மற்றும் புக்கிட் பெர்மாய் சட்டமன்ற உறுப்பினர், தோஸ்ரின் ஜார்வாந்தி என ஜொகூர் அரண்மனைக்கு மிகவும் நெருக்கமான தரப்பு மலேசியாகினியிடம் தெரிவித்தது. பெர்சத்து கட்சியைச்…

குத்தகை தொழிலாளர்கள் பற்றி, சிவநேசனுக்கு விளக்கமளிக்க பி.எஸ்.எம். தயார்

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் அவர்களுக்கு, மலேசிய சோசலிசக் கட்சியின் தொழிலாளர் பிரிவு பொறுப்பாளர் சிவரஞ்சனி மாணிக்கம் எழுதிய திறந்த மடல். மாண்புமிகு சிவநேசன் அவர்களுக்கு, உங்கு ஓமார் போலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் பிரச்சனையில், மலேசியக் கல்வி அமைச்சுக்குப் பங்கிருப்பதாக,…