நெகிரி ஆட்சியாளர் முஸ்லிம் சமூகப் பிரச்சனைகள், குற்றச்செயல்கள் குறித்து கவலை…

  நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் சமூகப் பிரச்சனைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது பற்றி நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்த்துவான் பெசார் துவாங்கு முகிரிஸ் துவாங்கு முனாவிர் இன்று ஆழ்ந்த கவலை தெரிவித்தார். புள்ளிவிபரங்கள் அடிப்படையில், போதைப் பொருள் விவகாரங்கள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களில் 90…

பிரதமருக்குச் சுமையாக இல்லாமல் பதவி விலகுவதே நல்லது: வேதாவுக்கு காடிர்…

மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி பதவித் துறப்பதே நல்லது என்று வலியுறுத்தியுள்ளார் வேதமூர்த்தி தொடர்ந்து பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்று பெர்சத்து உச்சமன்ற உறுப்பினருமான காடிர் இன்று ஒரு வலைப்பதிவில் வலியுறுத்தினார். “அவர் பிரிவினையை உண்டாக்கும் மனிதராகி விட்டார்.…

தீயணைப்பு வீரர் அடிப்பின் மரணம் தொடர்பில் நால்வரிடம் மீண்டும் விசாரணை

தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் இறப்பு கொலை என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதால் அவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நால்வரிடம் மீண்டும் விசாரணை செய்யப்படும் என்று தெரிகிறது. அவ்வழக்கு தொடர்பில் மேலும் ஆதாரங்களைத் திரட்டும் பணியில் போலீஸ் இறங்கியிருப்பதாக துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப்…

அம்னோவிருந்து வெளியேறியவர்களிடம் மனமாற்றம்- பங் மொக்தார்

சாபா அம்னோவிலிருந்து வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர்களிடம்   இப்போது மனம் மாற்றம்   ஏற்பட்டிருக்கிறதாம். சாபா அம்னோ தலைவர் பங் மொக்தார் ராடின் கூறுகிறார். அம்னோவிலிருந்து வெளியேறிய பலர், மீண்டும் அம்னோவுக்குத் திரும்பிவர விரும்புகிறார்கள் என கினாபாத்தாங்கான் எம்பி கூறினார். பெர்சத்து கட்சி சாபாவுக்கு விரிவுபடுத்தப்படுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து…

லத்தீபா: அம்னோ-பாணி தந்திரங்கள் என்னிடம் பலிக்காது

பிகேஆர் உறுப்பினர் லத்தீபா கோயா, தனக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் புகாரைக் கண்டித்தார். “என் வாயைக் கட்டுவதற்குக் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோருவது ஒரு வெறுக்கத்தக்க அம்னோ தந்திரம்.அது வெற்றி பெறாது”, என்றவர் மலேசியாகினிக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் கூறினார். லத்தீபாமீது ஒழுங்கு…

லத்தீபா பகிரங்கமாக அன்வாரைக் குறைகூறியிருக்கக் கூடாது- பிகேஆர் அடிநிலை உறுப்பினர்கள்

வழக்குரைஞர் லத்தீபா கோயாவுக்கு எதிராக இன்று புகார் பதிவு செய்த பிகேஆர் அடிநிலை உறுப்பினர்கள், அவர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைப் பகிரங்கமாகக் குறைகூறி இருக்கக் கூடாது என்றனர். “கருத்துகளைத் துணிச்சலாக சொல்லும் உரிமை அவருக்கு உண்டு. பிகேஆரில் யார் வேண்டுமானாலும் தலைமையைக் குறை சொல்லலாம். ஆனால் அதை…

மகாதிரின் முடிவை எதிர்ப்பதா? சைட் சாதிக்கைச் சாடினார் ராமசாமி

பி.வேதமூர்த்தியை அமைச்சர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்று பெர்சத்து இளைஞர் பிரிவு கோரிக்கை விடுத்திருப்பதன் தொடர்பில் அதன் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானைச் சாடினார் பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி. அமைச்சர்களை நியமித்தவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அவர் செய்த முடிவையே சைட் சாதிக்…

முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் உடனே சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்- பெர்சத்து

பெர்சத்து தலைமைச் செயலாளர் மர்சுகி யாஹ்யா, அக்கட்சியில் சேர்வதற்கு மனுச் செய்யும் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் உடனே சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார். அவர்களைச் சேர்த்துக் கொள்வதா நிராகரிப்பதா என்பதை முடிவு செய்ய ஒரு…

பாஸ் எம்பி: குவான் எங்கைப் போல் குற்றங்களிலிருந்து விடுபட அம்னோ…

அம்னோ தலைவர்கள் பக்கத்தான் ஹரப்பானில் சேர்வதற்கு கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். எதற்கு என்றால், தங்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்குத்தான் என்கிறார் பாஸ் எம்பி சே அப்துல்லா மாட். அதே மூச்ச்சில் டிஏபி தலைவர் லிம் குவான் எங்கையும் ஜாடையாக சாடினார். “குற்றங்களிலிருந்து விடுபடவும் லிம் குவான் எங்கைப்…

ரபிசி: கேஜே-யையும் நுருல் இஸ்ஸாவையும் சந்தித்தது புதிய கட்சி அமைப்பதற்காக…

அண்மையில் தானும் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாரும் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின்னும் ஒரு புதிய கட்சியை அமைப்பதற்குச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுவதை ரபிசி ரம்லி மறுத்தார். சமூக வலைத்தளங்களில் தாங்கள் மூவரும் அடிக்கடி கருத்துப் பரிமாறிக் கொள்வதை வைத்து ஒரு புதிய கட்சியை,…

கேமரன் மலை இடைத் தேர்தல் ஜனவரி 26-இல்

தேர்தல் ஆணையத் தலைவர் அஸ்ஹார் அசிசான் ஹருன் கேமரன் மலை இடைத் தேர்தல் ஜனவரி 26-இல் என்று இன்று அறிவித்தார். தேர்தல் பரப்புரைக்கு 14 நாள்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனவரி 12 வேட்புமனு தாக்கல் செய்யும் நாள். வேட்புமனு தாக்கல் செய்யும் நாளும் வாக்களிப்பு நாளும் சனிக்கிழமையில் வருகின்றன. கேமரன்…

ஸாகிட் அம்னோ தலைவர் பொறுப்பை துணைத் தலைவரிடம் ஒப்படைத்தார்

  பாகன் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரான அஹமட் ஸாகிட் ஹமிடி கட்சியில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். தமது துணைத் தலைவர் முகமட் ஹசான் அம்னோ தலைவர் பொறுப்புகளை இப்போது ஏற்றுக்கொள்கிறார் என்று ஸாகிட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார். கட்சியில்…

ராம்கர்பால்: ஹரப்பானுக்கு மிரட்டல் விட்டுள்ள ரஹிமுடன் ஒத்துழைப்பது எப்படி?

கூட்டணியில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள மலாக்கா முன்னாள் முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக்குடன் பக்கத்தான் ஹரப்பான் எப்படி ஒத்துழைக்க முடியும் என்று ராம்கர்பால் கேட்கிறார். ரஹிம் ஒரு கறை படிந்த தலைவர் என்றும் பெர்சத்துவில் சேருவதற்கான அவரின் மனுவை கட்சி நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதற்காக…

அடிப் மற்றும் ஆலய கலவரம்மீது ஆர்சிஐ தேவை- ஜாஹிட்

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, தீயணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணத்தையும் அதற்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளையும் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இறந்து போன அவருக்கு நீதி கிடைக்க அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றாரவர். “அடிப் மரணத்தையும் ஆலயத்தில்…

நெகிரி எம்பி மாநில பிகேஆர் தலைவராவதற்குத் தொகுதிகள் எதிர்ப்பு

நெகிரி செம்பிலானில் பெரும்பாலான பிகேஆர் தொகுதித் தலைவர்கள் மந்திரி புசார் அமினுடின் ஹருன் மாநில பிகேஆர் தலைவராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். மலேசியாகினியின் பார்வைக்குக் கிடைத்த கடிதத்தில் மந்திரி புசார் “நிர்வாகத்தில் பலவீனமானவர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “எட்டுத் தொகுதிகளில் ஏழு…

காலஞ்சென்ற தீயணைப்பு வீரருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க சுமார் ஆயிரம்…

காலஞ்சென்ற தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் உடல் இன்று காலை மணி 10.30 வாக்கில் கோலா கெடா, ஸ்கோலா கெபாங்சான் தெபாங்காவுக்கு ஒரு ஹெலிகாப்டர் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பள்ளிக்கு உள்ளும் வெளியிலும் சுமார் ஆயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க காத்திருந்தனர்.…

முன்னாள் அம்னோ கட்சியினரைச் சேர்த்துக் கொள்ளும் விசயத்தில் கவனம் தேவை:…

மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின் அம்னோவின் முன்னாள் தலைவர்களைச் சேர்த்துக் கொள்வதில் அவசரம் கூடாது என்று பெர்சத்துவை எச்சரித்துள்ளார். அம்னோவில் செல்லாக்காசாகிவிட்ட அவர்களில் சிலரை பெர்சத்துவில் இணைத்துக் கொண்டது பெரிய வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது என்றவர் கூறினார். “அவர்கள் ஒரு நேரத்தில் நம் அரசியல் எதிரிகளாக இருந்தவர்கள் என்பதை மறந்து…

சீ ஃபீல்ட் ஆலய விவகாரம்: இந்து  சங்கம் விலகி நிற்க வேண்டும்- வேதமூர்த்தி

சுபாங் ஜெயா, சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயப் பிரச்சினையில்  மலேசிய இந்து  சங்கம் விலகிநிற்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர்  பொன்.வேத மூர்த்தி வலியுறுத்தி உள்ளார். தேசிய அளவில் பிரதிபலித்த இந்தப் பிரச்சினைக்கு அமைதியாகவும் அதேவேளை அனைத்துத்தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தேசிய சட்டத் துறைத்  தலைவர் (ஏ.ஜி.) ஒரு சுமுகமான தீர்வை கண்டுள்ள நிலையில், மலேசிய இந்து சங்கம் புதுக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீ ஃபீல்ட் ஆலயம்தற்பொழுது எட்டிவரும் ஒரு சுமூகமான சூழலைக் கெடுக்கவும் தேசிய சட்டத்துறைத் தலைவருக்கே வழிகாட்டவும் முயல்வதாகத் தெரிகிறது. அரச நடைமுறைச் சட்டம், 9-ஆவது பிரிவு, சட்டத் துறைத் தலைவருக்கு அளித்துள்ள அதிகாரவரம்பிற்குட்பட்டும் பொது அமைதியில் நாட்டம் கொண்டும் சட்டத்துறைத் தலைவர் எடுத்துள்ளமுடிவை இந்த ஆலயம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட சுமூகமான சூழலில், வெண்ணெய் திரண்டு வருகின்ற  நேரத்தில் தாழியை உடைக்கமுயல்வதைப்போல, மோகன் ஷான், கெடுக்கின்ற விதமாகவும் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கை விடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் சட்டத்துறைத் தலைவரின் ஒருங்கிணைப்பின்வழி எடுக்கப்பட்டுள்ள முடிவிற்கு அனைத்துத்தரப்பினரும் இசைவும் ஒப்புதலும் தெரிவித்துள்ள நிலையில், மோகன் ஷான் மட்டும் இந்த ஆலய சிக்கல் தொடர்பான தெளிவும் புரிதலும் இல்லாமல் அறிக்கை வெளியிட்டு பொதுமக்களுக்கு தவறாக வழிகாட்ட முயலக் கூடாதென்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் கூறினார். -நக்கீரன்

நுருல் பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகினார், அரசாங்கத்தில் பதவி…

நுருல் இஸ்ஸா அன்வார், பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிர்ச்சிதரும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் இனி, அரசாங்கப் பதவிகளிலும் இருக்கப் போவதில்லை. பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் மகளுமான நுருல் இஸ்ஸா இன்று பிற்பகல்…

உங்கள் கருத்து: ‘அந்த நல்லவர்கள்’ அடுத்த ஜிஇ-வரை ஹராப்பானுக்கு வெளியிலேயே…

அம்னோவில் நல்லவர்களும் உண்டு என்கிறார் மகாதிர்   டேவிட் தாஸ்: 70விழுக்காட்டு மலாய்க்காரர்கள் பக்கத்தான் ஹரப்பானை ஆதரிக்கவில்லை. அவர்கள் அம்னோ அல்லது பாஸை ஆதரித்தார்கள். அதற்காக அவர்களைக் கெட்டவர்கள் எனலாமா? பலருக்கு அவர்கள் காலங்காலமாக இருந்து வந்துள்ள ஒரு கட்சியைக் கைவிட்டு வர மனமில்லை. பாஸ் ஆதரவாளர்களில் ஒரு…

ஜாஹிட்: தொடர்ந்து பிளவுபட்டுக் கொண்டே போனால் அம்னோ அழிந்து விடும்

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, கட்சிக்குள் பிளவுகள் தொடர்வது அதன் அழிவுக்குத்தான் வழிகோலும் என்று எச்சரித்தார். கட்சித் தலைவர்கள் எது வரினும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும், தங்களை மட்டுமே காப்பாற்றிக் கொள்வது பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றவர் வலியுறுத்தினார். “தோல்விக் காலத்தில், கட்சி வீழ்ச்சி…

முன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு மனு செய்துள்ளார்

  மலாக்கா முன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு தமது மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று ஆயர் கெரோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரஹிம் தம்பி சிக் அவரது மனுவை மலாக்கா பெர்சத்து தலைவர் முகமட் ரெட்ஸுவான் யுசோப்பிடம் கொடுத்தார். மலாக்காவின் ஆறாவது முதலமைச்சராக 12 ஆண்டுகள்…

ஹரப்பான் அரசாங்கத்திற்கு ஐசெர்ட் தேவையில்லை, சுல்கெப்லி கூறுகிறார்

  பக்கத்தான் அரசாங்கத்திற்கு ஐநாவின் அனைத்துலக அனைத்து வகையான இனப் பாகுபாடுகளை அகற்றும் (ஐசெர்ட்) ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டிய தேவை இல்லை என்று டாக்டர் சுல்கெப்லி அஹமட் இன்று கூறினார். ஹரப்பான் நிருவாகம் கடந்த காலத்தில் சிறுபான்மை இனம் மற்றும் சமயத்தினரைக் கொடுமைப்படுத்திய அரசாங்கங்கள் போன்றதல்ல என்று அமனாவின்…