இயோ : விவாகரத்துக்கான காரணங்களைச் சொல்ல சங்கடமாக இருக்கிறது

குடும்பம், மகளிர் மற்றும் சமூக மேம்பாடு அமைச்சின், துணை அமைச்சர் ஹன்னா இயோ, விவாகரத்துக்கான காரணங்களைச்  சொல்ல வெட்கமாக இருக்கிறது என்று இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக, மனைவிமார்கள் இரவில் துணி துவைத்தல், குழுவாக வெளியில் செல்ல விரும்புதல், மனைவி காரில் உண்பதை விரும்பாத கணவர், கணவர் குறைந்த…

சொஸ்மா, பொடா, பொக்கா சட்டங்களை இரு குழுக்கள் ஆராய்கின்றன- உள்துறை…

அரசாங்கம் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (சொஸ்மா) , பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2015(பொடா), குற்றச் செயல் தடுப்புச் சட்டம் 1959 (பொக்கா) ஆகியவற்றை விரிவாக ஆராய இரண்டு குழுக்களை அமைத்திருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. அக்குழுக்கள் தடுப்புக் காலம் மிகவும் நீண்டிருப்பதாகவும் கைது செய்வதற்கு…

மஸ்லீ: ஐஐயுஎம் தலைவர் பதவிக்குப் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மலேசிய அனைத்துலக இஸ்மாமியப் பல்கலைக்கழகத் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகியதும் அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவதற்குப் பலர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மஸ்லீ மாலிக் இன்று கூறினார். அவர்கள் அனைவரும் உலகப் புகழ்ப் பெற்றவர்கள் என்றும் அரசியல் பதவி வகிக்காதவர்கள் என்றும் கல்வி அமைச்சர் கூறினார். மஸ்லீ ஐஐயும் தலைவர் பதவியிலிருந்து…

‘மலேசியன் என்று சொல்லவே வெட்கப்பட்டேன்’, எம்ஏசிசி தலைவர்

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் முகம்மட் ஷுக்ரி அப்துல்லா, நாட்டில் ஊழல் மிக மோசமான நிலையை எட்டியிருந்ததால் தன்னை மலேசியன் என்று காட்டிக்கொள்ளவே வெட்கப்பட்டாராம். மலேசியாவில் ஊழல் வருத்தம் தரும் அளவுக்கு மோசமாக, மிக மோசமாக இருந்தது என்று புத்ரா ஜெயாவில் எம்ஏசிசியும் கல்வி அமைச்சும் கூட்டாக ஏற்பாடு…

‘ரைஸ், ரஃபிடா இருவரையும், அம்னோ மூத்தத் தலைவர்கள் என்று அழைக்க…

அம்னோ மூத்தத் தலைவர்களில் ஒருவரான முஸ்தபா யாக்குப், ரைஸ் யாத்திம் மற்றும் ரஃபீடா அஸீஸ் இருவரும், அம்னோ மூத்தத் தலைவர்கள் என்று அழைக்கும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை எனக் கூறியுள்ளார். ‘கொள்கை பிடிப்புகொண்ட’ மற்ற மூத்தத் தலைவர்கள் யாரும், கட்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் மூத்த அம்னோ தலைமைச்…

1மலேசியா பால் திட்டம் இவ்வாண்டு இல்லை

1மலேசியா பால் திட்டத்தை (பிஎஸ்1எம்) தொடர்வதற்கு, அரசாங்கம் தற்போது திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை. அத்திட்டத்தை மீண்டும் தொடர்வதற்கான அனைத்து முன்மொழிவுகளும், 2019 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டைப் பொறுத்தே அமையும் என, நேற்றிரவு நாடாளுமன்றத்தில், மலேசியாகினி  சந்தித்தபோது, துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ ச்சிங் தெரிவித்தார். பிஎஸ்1எம், சத்துணவு…

கே.ஜே.: 2019 வரவு செலவுத் திட்டம், B40 பிரிவினரை ஓரங்கட்டிவிட்டது

நாடாளுமன்றம் | ரெம்பாவ் எம்பி, கைரி ஜமாலுட்டின், 2019 பட்ஜெட் குறைந்த வருமானம்  பெறும் குழுவினரை (B40) ஓரங்கட்டிய ஒரு "கொடுமையான" திட்டம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். B40 குழுவினருக்கு முந்தைய பிஎன் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல உதவிகள், தற்போது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தால் மறக்கப்பட்டுள்ளது எனக் கைரி கூறியுள்ளார்.…

துணைப் பிரதமர்: மனிதத்தன்மையற்ற குற்றங்களுக்கு மட்டும் மரண தண்டனை கொடுக்கலாம்

மலேசிய நீதிமுறையில் மரண தண்டனையை வைத்துக்கொள்ளலாம்; வைத்துக்கொண்டு மனிதத்தன்மையற்ற கோடூரச் செயல் புரிவோருக்கு மட்டும் அத் தண்டனையைக் கொடுக்கலாம். “நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு” மனிதத்தன்மையற்ற கொடூரக் குற்றங்களுக்கு மட்டும் அதைக் கொடுக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசீஸ் வான் இஸ்மாயில் காலையில் செய்தியாளர்…

பாலியல் தொல்லை வழக்கு: ஷஹிடான் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சரும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாஹிடான் காசிம், பதின்ம வயதினருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். ஆராவ் எம்பியான அவர் இன்று காலை கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டார். குற்றத்தை மறுத்து விசாரணை கோரிய அவரை நீதிமன்றம் ரிம25,000…

அமைச்சரவை மாற்றமா? தெரியாது என்கிறார் குவான் எங்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அமைச்சரவையை மாற்றி அமைக்கப் போவதாக தாம் எதுவும் கேள்விப்படவில்லை என்கிறார் நிதி அமைச்சர் லிம் குவான் எங். “அமைச்சரவைக் கூட்டங்களிலோ பக்கத்தான் ஹரப்பான் கட்சிக் கூட்டங்களிலோ அது குறித்து எதுவும் கேள்விப்படவில்லை. அது வெறும் ஊகமாகக்கூட இருக்கலாம்”, என்றாரவர். “அப்படியே எதுவும் நடப்பதாக…

பணத்துக்கு வாக்குகள் வாங்கப்பட்டதை நிரூபிக்கும் “மறுக்கப்பட முடியாத” சான்று எம்ஏசிசியிடம்…

சரவாக் பிகேஆர் தொகுதித் தலைவர் ஒருவர் சனிக்கிழமை ஜூலாவ் பிகேஆர் தொகுதித் தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்டதை நிரூபிக்கும் “மறுக்கப்பட முடியாத சான்றை” மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்திருப்பதாகக் கூறுகிறார். அது குறித்து பெத்தோங் தொகுதித் தலைவர் வெர்னோன் அல்பர்ட் கெடிட் இன்று கூச்சிங்கில் புகார் செய்தார்.…

சைபுடின்: பிகேஆர் தேசிய காங்கிரசில் 2,700 பேராளர்கள் கலந்துகொள்வர்

ஷா ஆலம், ஐடீல் கான்வென்ஷன் செண்டரில் (ஐடிசிசி), நவம்பர் 16-இலிருந்து 18வரை நடைபெறும் பிகேஆர் தேசிய காங்கிரசில் மொத்தம் 2,735 பேராளர்கள் கலந்து கொள்வார்கள். இதைத் தெரிவித்த பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், அவர்கள் நாடு முழுவதுமுள்ள 217 தொகுதிகள் மற்றும் இளைஞர், மகளிர் பிரிவுகளின்…

மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியில்,  மாணவர் விடுதிக்கான கட்டுமானப் பணி தொடங்கியது!

எட்டு வருடங்களாக பேசப்பட்டு வந்த தமிழ்ப்பள்ளி மாணவர் விடுதியின் கட்டுமான பணி நேற்று துவங்கப்பட்டது. அதனை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி யும்  கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமாரும் மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியில் தொடக்கி வைத்தனர். 2010 ஆம் ஆண்டில்…

துணைப் பிரதமர் : இந்தியச் சமூகம் பின்தங்கி நிற்க விடமாட்டோம்

நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வடிவத்தையும் சமநிலையற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதால், இந்தியச் சமூகம் பின்தங்கிய நிலையில் விடப்பட மாட்டார்கள் எனத் துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளார். இந்தியர்கள் உட்பட, அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வளிக்கும் சமூகச் சீர்திருத்த செயற்பட்டியலை அமுல்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது.…

சரவாக்கில் முதல் சுற்று வாக்களிப்பில் அஸ்மின் வெற்றி

பிகேஆர் தேர்தல் |  சரவாக்கில் நடந்த முதல் சுற்று வாக்கெடுப்பில், ரஃபிஸி ரம்லியை விட, சற்று கூடுதல் வாக்குகள் பெற்று அஸ்மின் அலி முன்னணியில் இருக்கிறார். எனினும், அவரது வெற்றி, ‘இணையத் தாக்குதல்’களால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஜூலாவ் தேர்தல் முடிவுகளால் நடுநிலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த…

அன்வார் : பிகேஆர் தேர்தல் அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டதற்கு, ‘அவசர…

பிகேஆர் தேர்தல் |  ஜூலாவ்’வில் நடந்த கட்சித் தேர்தலில், அவசர கதியான "சைபர் தாக்குதல்" குற்றச்சாட்டுகளே, பிகேஆர் தேர்தல் அதிகாரிகள் கைதாக வழிவகுத்தன எனப் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார். அந்த அதிகாரி ஜூலாவ்வில் மின் வாக்களிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட ‘தேப்லட்’ –ஐ உசுப்பினார் என, பிகேஆர் துணைத்…

விரைவில் நஜிப், இரு முன்னாள் அமைச்சர்கள் மேலும் சிலர் மீது…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னாள் அமைச்சர்கள் இருவர், ஒரு துணை அமைச்சர் ஆகியோருடன் மேலும் மூவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்களாம். சரவாக் பள்ளிகளில் ரிம1.25 பில்லியன் செலவில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் திட்டங்களில் நிகழ்ந்துள்ள மோசடி தொடர்பில் நஜிப், அவரின் உதவியாளர், ஒரு முன்னாள் அமைச்சர் ஆகியோர்மீது…

பேச்சைக் குறைத்துச் செயலைப் பெருக்குங்கள் -பக்கத்தான் அரசுக்கு ரபிடா அறிவுறுத்து

பக்கத்தான் அரசாங்கம் நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவர பேச்சைக் குறைத்துச் செயலில் இறங்க வேண்டும் ரபிடா அசிஸ் கூறுகிறார். நாட்டை நிர்மாணிக்கும் மிகப் பெரிய பணி அரசாங்கத்துக்குக் காத்திருக்கிறது என முன்னாள் அனைத்துலக, வாணிக அமைச்சரான ரபிடா கூறினார். எடுத்ததற்கெல்லாம் 61ஆண்டுக் காலமாக நாட்டை ஆண்ட முன்னாள் அரசாங்கத்தையே…

அமைச்சர்: எச்ஆர்டிஎப் பணம் ஒரு சிலரின் நன்மைக்காக திருப்பி விடப்பட்டது

மனிதவள மேம்பாட்டு நிதி(எச்ஆர்டிஎப்)யின் பெரும்பகுதி ஒரு சில தனிப்பட்டவர்களின் நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார். ஒரு சிலர் சொத்துகள் வாங்கவும் அந்த ஒரு சிலருக்குச் சம்பளம், போனஸ் கொடுப்பதற்கும் அதிலிருந்த பணம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது என குலசேகரன் தெரிவித்ததாக மலேசியன் இன்சைட்…

பட்ஜெட் 2019, பணக்காரர் – ஏழை இடைவெளி அதிகரிக்கும் என்று…

2019 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகளில், வர்க்க குழுக்களுக்கிடையில் இருக்கும் செல்வ இடைவெளியைக் கையாளும் விவகாரங்களைக் குறிப்பிட்டு சொல்லவில்லை, இதனால் பணக்காரர் – ஏழை இடைவெளி இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என மலாய் ஆலோசனைக் குழு (எம்பிஎம்) கவலை தெரிவித்துள்ளது. 11-வது மலேசியத் திட்டத்தின் இடைக்கால மறுஆய்வின்…

சாபாவில் மூன்று பிகேஆர் தொகுதிகளில் மறுதேர்தல்

சாபாவில் நவம்பர் 3ஆம் 4ஆம் தேதிகளில் ஒத்திவைக்கப்பட்ட மூன்று பிகேஆர் தொகுதி தேர்தல்கள் இன்றும் நாளையும் நடைபெறும். கெனிங்காவில் மறுதேர்தல் இன்று நடைபெறும் வேளையில் தாவாவ், பென்சியாங்கான் ஆகிய இரு தொகுதிகளிலும் நாளை நடைபெறுகிறது. கெனிங்காவ் தொகுதிக்கு பெர்னாமா சென்று பார்த்தபோது அங்கு வாக்களிப்பு சுமூகமாக நடந்து கொண்டிருந்தது.…

அவ்கு சட்டங்களில் திருத்தம்: அமைச்சரவைப் பச்சைக் கொடி காட்டியது

அடுத்த மாதம், உயர்க் கல்வி கூடங்கள் சம்பந்தப்பட்ட சில சட்டங்களைத் திருத்தும் வகையில், நாடாளுமன்றத்தில் சில சட்டப் பிரிவுகள் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், அமைச்சரவை அதற்குப் பச்சை கொடி காட்டியுள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்…

டாக்டர் மகாதிர் : கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும்

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் பூர்த்தி செய்யும் எனத் துன் டாக்டர் மகாதிர் முகமட் வலியுறுத்தினார். மக்கள் தாங்கள் தேர்வு செய்த அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் வசதி, வாய்ப்பு, சலுகைகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியும் என்று பிரதமர் கூறினார். அந்தச் சமயத்தில், நான்கு எதிர்க்கட்சிகள்…