ஏழைகளுக்கு மின்சார மானியம்: விரைவில் அறிவிப்பு

பரம ஏழைகளுக்குப் புதிய மின்சார நிதியுதவித் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்கவிருப்பதாக எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், வானிலை மாற்றம், சுற்றுச் சூழல் அமைச்சர் இயோ பீ இன் இன்று கூறினார். “பரம ஏழைகளாக இருப்போருக்கு அடுத்த சில வாரங்களில் அரசாங்கம் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவிக்கும்”, என்றாரவர் . இத்திட்டத்தால்…

பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் 2 மாதத்துக்கு இடைநீக்கம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் குற்றஞ்சாட்ட மூத்த மருத்துவர் இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுச் சேவை ஆணையம் (பிஎஸ்சி) செப்டம்பர் 14ஆம் நாள் நடத்திய கூட்டத்தில் இடைநீக்கம் செய்யும் முடிவைச் செய்ததாக சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட்…

ஹனிபா: 1எம்டிபி விவகாரத்தில் எல்லாரும் மாசற்றவர் என்றால் யார்தான் குற்றவாளி?

1எம்டிபி விவகாரத்தில் தான் குற்றமே செய்யாத அப்பாவி என்று தொழிலதிபர் ஜோ லோ கூறிக்கொண்டிருக்கும் வேளையில், எல்லாருமே   குற்றம்   செய்யவில்லை   என்றால்   குற்றவாளிகள் யார், மக்களா என்று கிண்டலிக்கிறார் சட்டத் துணை அமைச்சர் முகம்மட் ஹனிபா மைடின். ஜோ லோவின் புதுப்பிக்கப்பட்ட வலைத்தளத்தில் அண்மையில் பதிவிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையை…

கைரி: முடிசூட்டு விழா மன்னர்களுக்கு, அன்வார் மன்னரல்ல

  பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு "முடிசூட்டு விழா" நடத்தப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்று கூறிய முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், அதற்காக போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட வேண்டும் என்பதை அவர் இன்று வலியுறுத்தினார். அம்னோ-பிஎன் போட்டியிட வேண்டும். போர்ட்டிக்சன் வெற்றிபெறக்கூடிய இருக்கையல்ல,…

பூனையை கொன்ற இருவருக்குக் காவல் நீட்டிப்பு, மூன்றாமவர் தேடப்படுகிறார்

சலவை இயந்திரத்தில் பூனையைச் சாகடித்ததாக நம்பப்படும் இருவருக்கான காவல் மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக அவர்களை மேலும் மூன்று நாள்களுக்குத் தடுத்து வைக்கும் ஆணையை செலாயாங் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் வழங்கியதாக கோம்பாக் போலீஸ் தலைவர் சம்சோர் மாரோவ் கூறினார். கடந்த வியாழக்கிழமை பூனையைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் மூவரின்…

செய்தி: ‘நன்கொடை தொடர்பான கடிதங்களில் அரபு இளவரசரின் கையெழுத்து இல்லை

நஜிப் அப்துல் ரசாக் தம் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்த கோடிக்கணக்கான ரிங்கிட் அத்தனையும் “நன்கொடைகள்” என்றுரைத்து அதற்கு ஆதாரமாக சவூதி இளவரசரிடமிருந்து வந்த கடிதங்களையும் வெளியிட்டிருந்தார். ஆனால், அக் கடிதங்களில் சவூதி இளவரசரின் கையெழுத்து இல்லை என்று எட்ஜ் வீக்லி-இல் வந்துள்ள ஒரு செய்தி கூறுகிறது. கடந்த…

பாஸ் தீர்மானம்: யுஇசி நிராகரிக்கப்பட வேண்டும், சமயப்பள்ளி சான்றிதழ் அங்கீகரிக்கப்பட…

  சீன சுயேட்சையான உயர்நிலைப்பள்ளிகளின் சான்றிதழை (யுஇசி) அங்கீகரிக்க புத்ரா ஜெயா அறிவித்துள்ள முன்மொழிதலை பாஸ் கட்சியின் 64-ஆவது முக்தாமார் இன்று ஏகமனதாக நிராகரித்துள்ளது. அம்மாநாடு அரசு சார்பற்ற சமயப்பள்ளிகள் - மாஹாட் தாபிஸ் - மற்றும் போன்டோக் பள்ளிகள் ஆகியவற்றின் சான்றிதழ்களை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்ற…

மா சியு கியோங் கெராக்கான் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

கெராக்கான் தலைவர் மா சியு கியோங் உடனடியாக பதவி விலகுவதாக அறிவித்தார். மா, இன்று காலை கட்சியின் நெகிரி செம்பிலான் மாநிலப் பேராளர் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று பெர்னாமா கூறியது. அதுவே கெராக்கான் தலைவர் என்ற முறையில் அவர் கலந்துகொண்ட இறுதி நிகழ்ச்சியாக அமைந்தது. “மூன்று, நான்கு…

இராணுவத்தினரின் சீருடைகளில் பாஸ் தொண்டர் படையா ? பெட்ரியோட் ஆவேசம்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், இராணுவத்தினர்போல் சீருடை அணிந்த பாஸ் தொண்டர் படையினரின் மரியாதை அணிவகுப்பைப் பார்வையிடும் படத்தைக் கண்டு முன்னாள் ஆயுதப் படை வீரர்களைக் கொண்டுள்ள பெட்ரியோட் அமைப்பு ஆத்திரமடைந்துள்ளது. “ஹாடி மலேசிய இராணுவத்தினரின் முதல்நிலை சீருடை அணிந்த மரியாதை அணிவகுப்பைப் பார்வையிடுவதைக் அண்டு முன்னாள்…

அஸ்மின்: சாபா கிழக்குக் கரைக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை

சாபாவின் கிழக்குக் கரையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைப்பான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்கிறார் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி. அண்மையில் அங்கு நிகழ்ந்த ஆள்கடத்தல் சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு மருட்டலாக அமைவதுடன் அம்மாநில பொருளாதார மேம்பாட்டுக்கும் தடங்கலாக விளங்குகிறது என அஸ்மின் கூறினார். “இன்ஷா அல்லாஹ், இது…

அமானா : அன்வார் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படவே ‘பிடி மூவ்’

பக்காத்தான் ஹராப்பான் முக்கியத் தலைவர்கள் அரசாங்கத்தில் இணைந்து செயல்படவே, போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அன்வார் இப்ராஹிம் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார் என அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபு கூறியுள்ளார். “14-வது பொதுத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டுமானால், ஹராப்பான் முக்கியத் தலைவர்கள் அரசாங்கத்தில் இருப்பது மிக…

ஷுரைடா : ரஃபிசியைப் புறக்கணியுங்கள், அவர் ‘முதிர்ச்சியற்றவர்’

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை விமர்சித்து வரும் ரஃபிசி ரம்லியைப் புறக்கணிக்கும்படி, கட்சியின் உதவித் தலைவர் வேட்பாளர் ஷுரைடா கமாரூடின் கூறியுள்ளார். “பரவாயில்லை, அது அவருடைய முறை. அதுதான் அவரது பிரச்சார முறை என்றால், அது முதிர்ச்சியற்றது. “நான் முதிர்ச்சியடைந்த அரசியலையே விரும்புகிறேன், ஆக பரவாயில்லை,…

மகாதிர் மாறி விட்டாரா?: ஆம், இல்லை என்கிறார் அன்வார்

  பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அவரது முன்னாள் எதிரியான பிரதமர் மகாதிர் முகமட்டை நம்புகிறாரா மற்றும் அவர் மாறி விட்டாரா என்று தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறார். இன்று மதியம் சிங்கப்பூர் வணிகர் சமூகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அன்வார், மகாதிரின் தனிமனிதப்பண்பு பெருமளவில் அதே மாதிரியாகத்தான் இருக்கிறது,…

பெர்சத்துவுடன் இணைய அம்னோ முயற்சிக்கிறதாம், காடிர் கூறுகிறார்

  பெர்சத்துவுடன் இணைவது பற்றி பேசுவதற்கு அம்னோ தலைவர்கள், அதன் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி உட்பட, பெர்சத்துவின் தலைவர் டாக்டர் மகாதிரை சந்தித்துளளனர் என்று பேசப்படுவதாக எ. காடிர் ஜாசின் கூறுகிறார். இப்போதெல்லாம் அவர்கள் அம்னோ பற்றி பேசுவதில்லை. பெகெம்பார் பற்றி பேசுகிறார்கள். அது அம்னோவின் மலாய்…

சந்தர்ப்பவாதி நஸ்ரி அளிக்க முன்வந்துள்ள ஆதரவை அன்வார் ஏற்றுக்கொள்ளக் கூடாது,…

  போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் அன்வாருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்ய முன்னாள் அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் முன்வந்துள்ளதை ஏற்றுக்கொண்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அன்வாரை டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் எச்சரித்துள்ளார். உதவி அளிக்க நஸ்ரி முன்வந்ததில் உள்நோக்கம் இருக்கிறது என்பது தெளிவு.…

பிடி பெர்சத்து அன்வாரை வரவேற்கிறது, ரபிசியை எதிர்க்கிறது

  எதிர்வரும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளில் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரமலியும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானியும் பங்கேற்கக்கூடாது என்று போர்ட்டிக்சன் பெர்சத்து பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அன்வார் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ரபிசியும் அப்துல்லாவும் பரப்புரையில் கலந்து…

நெகிரி மாநிலத்திற்குக் கிடைத்த அதிர்ஷ்டம், எதிர்காலப் பிரதமர்  போர்ட்டிக்சனில் போட்டியிடுவது,…

  கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்பதில் கட்சியில் இரண்டு விதக் கருத்துகள் இல்லை. கெஅடிலான் நாட்டில் பாகுபாடற்ற ஜனநாயகத்துக்கு, உண்மைக்கு, நேர்மைக்கு மட்டும் போராடவில்லை, தியாகத்தின் அர்த்தத்தையே மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் அதன்  இத்தொகுதியின் கெஅடிலான் நாடாளுமன்ற நடப்பு உறுப்பினர்…

விஸ்மா புத்ரா தயவில் ஷாபி தூதரகக் கடப்பிதழை வைத்துள்ளார்- குடிநுழைவுத்…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா தூதரகக் கடப்பிதழை வைத்திருக்கிறார். அதில்தான் அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வந்துள்ளார். அவருக்கு எப்படி தூதரகக் கடப்பிதழ் கிடைத்தது? அதற்குக் காரணம் விஸ்மா புத்ரா( வெளியுறவு அமைச்சு) என்கிறார் குடிநுழைவுத் துறைத் தலைவர் முஸ்டபார் அலி.…

‘60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஹரப்பான் அம்னோவைவிட மோசமான அரசாங்கமாக…

ஹரப்பான் 60 ஆண்டுகள் மலேசியாவை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டால் அது அம்னோ அரசாங்கத்தைவிட மோசமான அரசாங்கமாக விளங்கும் என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். நிதி அமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு அண்மையில் கைவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஹாடி, ஹரப்பான் நிர்வாகம் அமைந்த நான்கே மாதங்களில்…

அன்வாருக்காக வான் அசிசா அல்லது நூருல் அவர்களின் தொகுதியை விட்டுக்…

பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக போர்ட் டிக்சன் தொகுதி காலி செய்து கொடுக்கப்பட்டிருப்பதால் அதிருப்தி அடைந்திருப்போர் வரிசையில் முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும் சேர்ந்து கொண்டிருக்கிறார். அன்வாருக்காக அவரின் மனைவி அல்லது மகள் தொகுதியைக் காலி செய்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று…

தொலைக்காட்சி, திரைப்படப் புகழ் அச்சப்பன் காலமானார்

சாமிநாதன் இரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நகைச்சுவைக் க்கலைஞர் அச்சப்பன் காலமானார். அவருக்கு வயது 63. சிறுநீரகக் கோளாறினால் இன்று அதிகாலை 2.43 மணியளவில் அவர் காலமானதாக அவரின் மகள் யுவனேஸ்வரி தெரிவித்தார். அச்சப்பனின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் சிலாங்கூர், தாமான்…

போலீஸ்: நஜிப் கணக்கில் ரிம2.97 பில்லியன் சேர்க்கப்படுள்ளது, 132 சட்டவிரோத…

  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் எஎம்இஸ்லாமிக் (AmIslamic) வங்கிக் கணக்கிற்கு மொத்தம் யுஎஸ்$972 மில்லியன் (ரிம2.973 பில்லியன்) மாற்றப்பட்டுள்ளதை போலீஸ் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தொகை மூன்று கட்டங்களில் - கூட் ஸ்டார் (Good Star), ஆபார் (Aabar) மற்றும் தானோர் (Tanore) வழையாக வந்துள்ளன என்று…

“வெளியாள்கள்” ஜோகூர் இஸ்லாமிய விவகாரங்களில் சம்பந்தப்படக் கூடாது, சுல்தான் எச்சரிக்கை

  ஜோகூர் இஸ்லாமிய விவகாரங்களிலிருந்து "வெளியாள்கள்" விலகி இருக்க வேண்டும் என்று ஜோகூர் சுல்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனென்றால் அது மாநிலச் சட்டங்கள் சம்பந்தப்பட்டதாகும். ஷரியா சட்டங்கள், சமயப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆட்சியாளர் சார்பில் மாநில அரசு முடிவு செய்யும் என்று ஜோகூரில் 100 ஆண்டுகால இஸ்லாமியக் கல்வி…