கைபேசி Prepaid சேவைகளுக்கு எஸ்எஸ்டி-இலிருந்து விலக்கு

தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம்(டெல்கோ) முன்கட்டணம் செலுத்திப் பெறப்படும் அட்டைகளுக்குச் சேவை வரி விதிக்கப்படாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. டெல்கோ-கள் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி)க்கு மாறுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என அமைச்சு கூறியது. சேவை வரி(எஸ்எஸ்டி) 2018…

மஇகா கஹாங் இருக்கையைத் தக்கவைத்துக் கொண்டது

  கோலாலம்பூரில் தேர்தல் நீதிமன்றம் ஜோகூர் கஹாங் சட்டமன்ற இருக்கையை பிஎன் வேட்பாளர் ஆர். வித்தியநாதன் தன்வசம் வைத்துக்கொள்ள உத்தரவிட்டது. இந்த வழக்கில் வித்தியநாதன் தாக்கல் செய்திருந்த தொடக்க ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி முகமட் நாஸ்லான் முகமட் கஸாலி, பெர்சத்துவின் வேட்பாளர் நூர்லிகான் அரிப்பின் தாக்கல் செய்திருந்த மனுவை…

குவான் எங் விடுவிக்கப்பட்டது மீது ஒரு வழக்குரைஞர் விசாரணை கோருகிறார்

  நிதி அமைச்சர் லிம் குவான் எங் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிருந்து விடுவிக்கப்பட்டதற்கு சட்டத்துறை தலைவர் அலுவகம் அளித்திருந்த விளக்கத்தை நிராகரித்த ஒரு வழக்குரைஞர், இந்த வழக்கு கைவிடப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். குணமலர் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஜே. குணமலர் சட்டத்துறை தலைவர்…

அமைச்சர் : பல்கலைக்கழகம் , பல்கலைக்கழகக் கல்லூரி சட்டத்தின் ஒரு…

நாடாளுமன்றம் l பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் (AUKU) சட்டம் 1971, பிரிவு 15 மற்றும் 16 ஆகியவற்றை அகற்றுவதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் ஆராய்கிறது. இச்சட்டங்கள் வளாகத்தில் அரசியல் சுதந்திரத்தை தடுக்கிறது என்று கூறப்படுகிறது. கல்வி அமைச்சர், மஸ்லி மாலேக் இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான்…

அன்வார்: பெடரல் அரசாங்கம் மாநில ஷரியா சட்டங்களை மாற்ற முடியாது

  திரங்கானு மாநிலத்தின் ஷரியா சட்டங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அல்லது அவற்றை மாற்றும் நிலையில் பெடரல் அரசாங்கம் இல்லை, ஏனென்றால் அவை மாநில ஆளுமைக்கு உட்பட்டவை என்று பிகேஆரின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம் கூறினார். கடந்த திங்கள்கிழமை, ஓர் இனச் சேர்க்கையில் ஈடுபட்ட இரு…

போனஸ் கொடுப்பதற்காக அரசாங்கம் கடன்பட முடியாது

அரசாங்க அதிகாரிகளுக்குப் போனஸ், ஊக்கத் தொகை மற்றும் வெகுமதிகள் வழங்குவதில், நாட்டின் நிதியியல் திறன் மற்றும் நிலைப்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நாட்டின் வருவாய் அதிகரித்து இருந்தால் மட்டுமே அவை வழங்கப்படும் எனத் துணை நிதியமைச்சர் அமீருட்டின் ஹம்ஷா கூறினார். “வருவாய் அதிகம் இருந்தால், நாம் கொடுக்கலாம். “கடன்பட்டு…

குவான் எங் வழக்கு – நடுநிலை தவறாமல் சட்டத்தைக் கையாண்டேன்,…

  நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை கைவிடுவதற்கு எடுக்கப்பட்ட முடிவு அரசியல் நோக்கம் கொண்டது அல்லது அந்த முடிவில் சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுவதை சட்டத்துறை தலைவர் அலுவலகம் நிராகரித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள லிம் மற்றும் வணிகர்…

குவான் எங் விடுதலையானது எப்படி? விளக்கம் தேவை- சைட் சாதிக்

நிதி மைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்குக் கைவிடப்பட்டது ஏன் என்று விளக்கம் கேட்போர் கூட்டத்தில் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானும் சேர்ந்து கொண்டிருக்கிறார். இளைஞர், விளையாட்டு அமைச்சர் “எல்ஜிஇ(லிம்) மீதான வழக்கு ஏன் கைவிடப்பட்டது என்று ஏஜிசி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்”, என…

‘அம்னோ இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதை நிறுத்தாவிட்டால் அழிந்து போகும்’

அம்னோ தலைவர்கள், இழந்துவிட்ட நம்பிக்கையைத் திரும்பப் பெற விரும்பினால் இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதை நிறுத்திக்கொண்டு நடப்பு விவகாரங்களைக் கையிலெடுத்து தெளிவாக விவாதிக்க வேண்டும் என பெர்சத்துவான் பெட்ரியோட் கெபாங்சாஆன்(பெட்ரியோட்) கூறியது. கடந்த சனிக்கிழமை பாசிர் சாலாக் அம்னோ தலைவர்கள் ஏற்பாடு செய்த இன உணர்வுமிக்க ஹிம்புனான் மலாயு பாங்கிட்…

அமைச்சு: ஆங்கிலம் போதனா மொழியாகப் பயன்படுத்தப்படுவது சட்டப்படி குற்றம்

கல்வி அமைச்சு தேசிய பள்ளிகளில் ஆங்கிலம் போதனா மொழியாக பயன்படுத்துவதை அனுமதிக்காது. அவ்வாறு செய்வது கூட்டரசு அரசமைப்பின் சட்டப் பிரிவு 152(1)-ஐயும் 1963/67 தேசிய மொழிச் சட்டத்தையும் மீறுவதாகும் என்பதுடன் 1996 கல்விச் சட்டத்துக்கும் முரணானது என்று அமைச்சு கூறிற்று. ” எனவே அரசமைப்பு மற்றும் சட்டம் ஆகியவற்றின்…

இவ்வாண்டு 30,000 க்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டனர்

குடிநுழைவுத் துறை    ஜனவரி மாதம் தொடங்கி     முறையான ஆவணங்கள் வைத்திராத 30, 000 க்கும் மேற்பட்ட குடியேறிகளைத் தடுத்து வைத்ததாக    அதன் தலைமை இயக்குனர் முஸ்டபார் அலி    இன்று கூறினார். அவர்களோடு அவர்களை வேலைக்கு வைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாளிகளும் தடுத்து வைக்கப்பட்டதாக…

மஇகா-வின் தற்போதைய நிலை, ஓர் இருண்ட அத்தியாயம்!

மக்கள் நீதிக் கட்சி தன் பெயரை மாற்றிக் கொள்ளுமா என்று கேட்டிருக்கும் மஇகா தலைமை, அதற்கு முன் தனது பெயரை மாற்றிக் கொள்வதைப் பற்றி சிந்திக்க வேண்டும். மஇகா-வை விட மக்கள் நீதிக் கட்சியில்(பிகேஆர்) இந்தியர்கள் அதிகமாக உறுப்பியம் பெற்றுள்ளனர் என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்…

டாக்டர் எம்: எஸ்.எஸ்.தி.-க்கும் ஜி.எஸ்.தி.-க்கும் உண்மையில் அதிக வேறுபாடுகள் இல்லை

எஸ்.எஸ்.டி. மற்றும் ஜி.எஸ்.டி. இரண்டிலிருந்தும் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருவாயில் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏதும் இல்லை எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமத் தெரிவித்தார். ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தும் நிதியிலிருந்து, அரசாங்கத்திற்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுவிட்டது என அவர் தெரிவித்தார். "ஜிஎஸ்டி வருமானம்,…

பெர்சே: அரசியல் கட்சிகள் இ.ஆர்.சி.-யில் அதிகாரத்தைக் கொண்டிருக்கக் கூடாது

தேர்தல் சீர்திருத்தக் குழுவை (இ.ஆர்.சி.) அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக கட்டுப்படுத்தக்கூடாது, மாறாக அது சுதந்திரமாக, பாரபட்சமற்றதாகக் கருதப்பட வேண்டும் எனத் தேர்தல் சீர்திருத்த அமைப்பு, பெர்சே கூறியது. அரசியல் கட்சி உறுப்பினர்கள் இ.ஆர்.சி. தலைமை பொறுப்பை ஏற்கக்கூடாது, பெர்சத்து துணைத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான்…

குவான் எங் விடுவிக்கப்பட்ட செய்தியால் அதிர்ச்சி அடைந்ததாக மகாதிர் கூறுகிறார்

  ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விடுவிக்கப்பட்ட செய்தியால் தாமும்கூட அதிர்ச்சியடைந்ததாக பிரதமர் மகாதிர் கூறினார். அக்குற்றச்சாட்டுகள் நிலத்தின் தகுதியை மாற்றியது மற்றும் ஒரு வீட்டை சந்தை மதிப்பீட்டிற்கு குறைவாக வாங்கியது சார்ந்ததாகும். அரசு தரப்பு வழக்குரைஞர் இவ்விருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட்டதைத்…

சிலாங்கூர் முன்னாள் பெண் சட்டமன்ற உறுப்பினர் கைது

இன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), முன்னாள் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை, ரிம 50,000 ஊழல் விசாரணை தொடர்பில் கைது செய்தது. அந்த 56 வயது நிரம்பிய பெண் சட்டமன்ற உறுப்பினர், இன்று மாலை 5.50 மணியளவில், சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்திற்கு விளக்கம் அளிக்க வந்தபோது…

திரங்கானு ஆட்சிக்குழு: பிரம்படி மக்களுக்கு பாடம் புகட்டுவதற்கு, அவ்விரு பெண்களுக்கும்…

  பாலியல் உறவு கொண்டதற்காக இரண்டு பெண்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்படி தண்டனை மக்களுக்கு இஸ்லாமிய சட்டம் பற்றி போதிப்பதற்காகும் என்று ஷரியா அமலாக்கப்படுவதற்கு பொறுப்பான திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் சத்திபுல் பாரி மாமாட் கூறினார். நமது நோக்கம் மக்களுக்கு எப்படி பிரம்படி தண்டனை இஸ்லாமிய சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படுகிறது…

அஸ்மின், கேஎல் – சிங்கப்பூர் எச்எஸ்ஆர் காலைவரையின்றி தள்ளிப்போடப்பட்டுள்ளது

  கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் (எச்எஸ்ஆர்) திட்டம் காலைவரையின்றி தள்ளிப்போடப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமானது. இது சிங்கப்பூர் தரப்பு அதிகாரிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் முகமட் அஸ்மின் அலி இன்று செய்தியாளர்களிடம் கூறினார். இத்திட்டம் காலைவரையின்றி தள்ளிபோடப்பட வேண்டும் ஏனென்றால் மலேசியப் பொருளாதாரம் இறுதியில் மேம்பாடடையும் என்பதில்…

குவான் எங், பாங் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்

  இன்று பினாங்கு உயர்நீதிமன்றம் முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் வணிகர் பாங் லி கூன் ஆகியோரை அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த இரு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது. அவர்கள் மாநில நிலத்தின் தகுதியை மாற்றியது மற்றும் சந்தை விலைக்குக் குறைவாக ஒரு வீட்டை…

மகாதிர் ஒரு ‘மாமாக்’ ‘பேய்’, லோக்மான் கூறுகிறார்

  பேராக்கில் நேற்றிரவு நடந்த ஒரு மலாய் உரிமைகள் பேரணியில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் மலாய்க்காரர்களும் இஸ்லாமும் அச்சுறுத்துலக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற அச்ச உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதோடு அவர் பிரதமர் மகாதிரை ஒரு "மாமாக்" என்றும் "பேய்" என்றும் கூவினார். பாசிர் சாலாக்கில்…

சில்மிஷம் செய்த மருத்துவர் மீதான அறிக்கை தயார்

கிள்ளான் பள்ளத்தாக்கில் மருத்துவமனை ஒன்றில் மூத்த மருத்துவர் ஒருவர் இளநிலை மருத்துவர்களுக்குப் பாலியல் தொந்திரவு கொடுத்ததாகக் கூறப்படும் புகார்மீது விசாரணை நடத்திய சுயேச்சைக் குழு அடுத்த வாரம் அதன் அறிக்கையைச் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கும். “பாலியல் தொந்திரவு மீதான விசாரணை பற்றி எனக்கு விளக்கப்பட்டது”, என்று அமைச்சர் கூறினார்.…

அமைச்சர் : பிரதமரின் கட்டளை, அதிகபட்சம் 10 அதிகாரிகளை மட்டுமே…

ஒவ்வொரு அமைச்சிலும் 10 அதிகாரிகளுக்கு மேல் நியமிக்கக்கூடாது என்பது பிரதமர் துன் டாக்டர் மகாதிரின் கட்டளை என சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியது. தாங்கள் பிரதமரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்வதோடு, தற்போது இருக்கும் அதிகாரிகளை விவேகமாக பயன்படுத்த முனைந்துள்ளோம் என்று சுகாதார அமைச்சர், டாக்டர் ஜுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார். “பிரதமரின் அறிவுறுத்தலை…

‘அம்னோவிற்கு அன்வார் இப்ராஹிம் தேவையில்லை’

அதிகாரத்தில் இல்லை எனும் ஒரே காரணத்திற்காக, அன்வார் இப்ராஹிம்மின் ஆதரவு கட்சிக்குத் தேவையில்லை என அனுவார் முசா கூறியுள்ளார். “அண்மையில் அன்வார் இப்ராஹிம் அம்னோவுடன் ஒத்துழைக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். அன்வாருக்கு என் வாழ்த்துகள். “அம்னோவுக்கு அன்வார் தேவையில்லை,” என நேற்றிரவு, பேராக், பாசீர் சாலாக்கில் நடந்த மலாய்…