காலிட் சாமாட் குற்றவாளி என்ற தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது, அபராதம் குறைக்கப்பட்டது

  காலிட் சாமாட் முறையான சான்றுகள் இல்லாமல் இஸ்லாத்தை போதித்தார் என்ற குற்றசாட்டில் அவர் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பை ஷா அலாம் ஷரியா உயர்நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது. ஆனால், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரிம2,900 அபராதத்தை நீதிபதி ஷாலேஹான் யாத்திம் ரிம1,900 க்கு குறைத்தார். ரிம2,900 அபராதம் காலிட்டுக்கு…

முக்காடு போட எனக்கு தடை விதித்திருக்கிறார் என் கணவர், சித்தி…

  தாம் முக்காடு அணிவதற்கு தமது கணவர் மகாதிர் முகமட் தடை விதித்திருக்கிறார் என்று டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி கூறினார். சில தங்கும் விடுதிகள் முக்காடு அணிவதற்கு விதித்துள்ள தடை குறித்து கேட்கப்பட்ட போது, அவர் இவ்வாறு கூறினார். "நீங்கள் தவறான நபரிடம் கேட்கிறீர்கள் என்று…

‘மாஸ் விமானப் பணிபெண்கள் முக்காடு அணியும் திட்டத்தை விவாதிக்க வேண்டும்’

மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) விமானப் பணிப்பெண்கள் முக்காடு (ஹிஜாப்) அணிய அனுமதிக்கப்பட வேண்டும் எனும் அரசாங்கத்தின் முன்மொழிவு பற்றி, பல தரப்பினர்களுடன் விவாதங்கள் நடத்தியப் பின்னரே முடிவு செய்ய முடியுமென,  மலேசிய விமானப் போக்குவரத்து தேசிய ஒன்றியம் (நூஃபாம்) இன்று தெரிவித்துள்ளது. அதனை நடைமுறைபடுத்துவதற்கு முன்னர், பல அம்சங்களைக்…

ஆங்கிலமொழியை ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் ஒரு நாடல்ல, அம்னோ எம்பி உளறுகிறார்

  பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை ரோம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அரிப்பின் நிராகரித்தார். இதற்கான காரணம், ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக ஏற்றுக்கொண்ட நாடுகள் வெற்றி பெறவில்லை என்று நாடாளுமன்றத்தில் 2018 ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தின் போது அவர் கூறினார். ஆங்கிலத்தைப்…

ஃபாமா : காய்கறிகள் விலை ஏற்றம் தற்காலிகமானது

பினாங்கு, கெடா போன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், இலை வகை காய்கறிகள் தங்குத் தடையின்றி கிடைக்கும் என, மத்திய வேளாண்மை விற்பனை ஆணையம் (ஃபமா) உத்தரவாதம் அளித்துள்ளது. உண்மையில், காய்கறிகளின் விலை உயர்வைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள  ஃபாமா கடைகளுக்கு…

இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் விலையும் அதிகம், பயனற்றதும்கூட, என்கிறார்…

  கல்வி அமைச்சு உள்நாட்டில் வெளியீடு செய்யப்பட்ட ஆங்கிலமொழி பாடப்புத்தங்களுக்கு மாற்றாக இரண்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய திடீரென்று எடுத்த முடிவு கடும் கேள்விக்குரியதாகிறது என்று புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர் ஸைரில் கிர் ஜொஹாரி கூறுகிறார். இந்தத் திடீர் முடிவு கிலியூட்டுவதோடு கவலையும் அளிக்கிறது,…

சி.என்.ஏ: பிஎன் சிலாங்கூரைக் கைப்பற்ற முடியாது ஆய்வாளர்கள் ஆரூடம்

சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற பி.என். முயற்சி செய்தாலும், எதிர்க்கட்சி கூட்டணியிடமிருந்து அம்மாநிலத்தை எடுக்க முடியாது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, சிலாங்கூர் மாநில மக்கள் கல்வி கற்ற சமூகமாக உள்ளனர், நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகளை நன்கு உணர்ந்துள்ளனர் என்று சில அரசியல் ஆய்வாளர் சேனல் நியூஸ்ஏசியா-…

முதிர்ச்சியடையாத பகாங் மந்திரி பெசார், சாடினார் பினாங்கு முதல்வர்

  வெள்ளம் சம்பந்தமாக நேற்று பகாங் சட்டமன்றத்தில் பகாங் மந்திரி பெசார் அட்னான் யாக்கோப்புக்கும் டிஎபி சட்டமன்ற உறுப்பினர் தெங்கு ஸுல்புரிக்கும் இடையில் நடந்த விவாதத்தின் போது, தெங்குவை அட்னான் குத்துச் சண்டைக்கு வறுமாறு சவால் விட்டார். இது குறித்து கருத்துரைத்த பினாங்கு முதலமைச்சர் குவான் எங், இது…

இருமொழி திட்ட பெருநடைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை –  ஜோகூர் துன்…

வருகின்ற 25.11.2017-இல் நடைபெறவுள்ள 350 கிலோ மீட்டர் பெருநடை ஜோகூர் பாருவில் உள்ள துன் அமினா பள்ளியின் அருகாமையில் இருந்து தொடங்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர். இருமொழி திட்டத்தை அகற்ற கோரி இந்த ஆட்சேப பயணத்தை மே 19 இயக்கத்தின் தியாகு மேற்கொள்கிறார். இது சார்பாக துன் அமினா…

ஆறு வாரங்களில் முதல் முறையாக பெட்ரோல் விலை குறைகிறது

  இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை குறைகிறது. ஒரு லீட்டருக்கு 8 சென் விலை குறைந்து ரோன்95 ஒரு லீட்டர் ரிம2.30 க்கும் ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.58 க்கும் விற்கப்படும். டீசல் 2 சென் குறைந்து, 1லீட்டர் ரிம2.23 க்கு விற்கப்படும்.

இன்று எரி நெய்(பெட்ரோல்) விலை 8 சென் குறைந்தது!

இனி வாகனங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு பொது மக்களுக்கு அற்று விடுமோ என்று ஐயுறும் அளவிற்கு பன்னாட்டுச் சந்தையில் எரிணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 140 டாலர் வரை உயர்ந்தது. அப்போதுகூட மலேசியாவில் இந்த அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்தது இல்லை. இப்போது வெறும் அறுபது டாலர் என்ற அளவில்தான்…

யுஇசி விவாதம்: அந்த மூவரை மசீச ஏன் தட்டிக்கேட்கவில்லை?, டிஎபியின்…

  ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு சான்றிதழ் (யுஇசி) விவகாரத்தில் அப்போது அரசாங்கத்தில் இருந்த டாக்டர் மகாதிர், முகைதின் யாசின் மற்றும் அன்வார் இப்ராகிம் ஆகிய மூவரையும் கேள்வி கேட்க மசீச தவறி விட்டது ஏன் என்று டிஎபியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் மசீசவை கேட்கிறார். அந்த மூவரும்தான்…

நாடாளுமன்றத்திற்கு வராதிருந்த உறுப்பினர்களை ஸாகிட் கடுமையாகக் கண்டித்தார்

    நாடாளுமன்ற மக்களவையின் குழு அளவிலான 2018 ஆம் ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது பிஎன் உறுப்பினர்கள் அவைக்கு வராததால் அது கிட்டத்தட்ட ஏற்கொள்ளப்படாத நிலைக்குத் தள்ளப்படவிருந்தது. அவைக்கு வராதிருந்த பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களை துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹாடி கடுமையாகக் கண்டித்தார். மக்களவையின் அந்த…

மரியா சின் : வழக்கை போலிஸ் மூடியது, குற்றச்சாட்டு பொய்…

இன்று, பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லா அவருக்கு எதிரான போலிஸ் விசாரணை மூடப்பட்டதோடு, கைப்பற்றப்பட்ட அனைத்து பொருள்களும் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார். போலிசாரே வழக்கு விசாரணை மூடியது, அக்குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பதை நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். "சரியாக ஓராண்டு  4…

பாஸ்: மகாதிர் ஹரப்பானை பதிவுகூட செய்ய முடியாத போது, நாட்டை…

  எதிர்கட்சி கூட்டணியான ஹரப்பான் பதிவு செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை வைத்து பாஸ் கட்சி மகாதிரை தாக்கியுள்ளது. 22 வருடங்களாக பிரதமராக இருந்த மகாதிருக்கு ஹரப்பானை பதிவு செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்கக்கூடாது என்று பாஸ் உதவித் தலைவர் முகமட் அமர் நிக் அப்துல்லா கூறினார். இன்று கிளந்தான்…

இஸ்லாமிய அரசு முடிவுக்கு வந்ததாக ஈரான் அதிபர் பிரகடனம் செய்தார்

  ஈரானிய அதிபர் ஹசான் ருஹானி இஸ்லாமிய அரசு முடிவுக்கு வந்ததாக அறிவித்த பிரகடனத்தை செவ்வாய்க்கிழமை அரசு டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது. ஈரானிய புரட்சிப்படையின் மூத்த தலைவர் மேஜர் ஜெனரல் காஸெம் சோலிமனியும் இஸ்லாமிய அரசு முடிவுக்கு வந்ததை நாட்டின் உச்சத் தலைவருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய செய்தில்…

எண்ணெய் விலை உயர்வு : கனத்த மழையிலும் போராட்டம் தொடர்கிறது

நாடாளுமன்றத்திற்கு வெளியே, எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை எதிர்த்து, பக்காத்தான் ஹராப்பான் இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது என்று அமானா கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஷாஸ்னி முனிர் முகமட் இத்னின் கூறினார். "தற்போது கனத்த மழை, ஆனால் கூடாரங்கள் கூட இல்லாமல், நாங்கள் இன்னும் நாடாளுமன்றத்தின் முன்…

2018 பட்ஜெட் வாக்கெடுப்பில் அரசாங்கம் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்பட்டது

இன்றிரவு நாடாளுமன்ற மக்களவையில் 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்திற்குப் பின்னர் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக அளித்த வாக்காள் அரசாங்கம் கிட்டத்தட்ட தோல்வி கண்டது. 2018 ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவுகள் மற்றும் பயணீட்டாளர் அமைச்சின் பகுதிக்கான நாடாளுமன்ற குழு அளவிலான விவாதத்தை…

நஜிப் : முன்னாள் போலிஸ் தலைவர் ‘பிராசரானா’வுக்கு ஏற்றவர்

முன்னாள் காவல்துறைத் தலைவர், காலிட் அபு பக்கார், பிராசரானா மலேசிய பெர்ஹாட் குழுவுக்குத் தலைமை தாங்க தகுதியானவர், அவரிடம் அதற்கான அதிகாரம், அனுபவம் மற்றும் பணியை மேற்கொள்ளும் திறன் அனைத்தும் உள்ளதாக பிரதமர் நஜிப் சொன்னார். நாடாளுமன்றத்தில், காவல்துறைக்குத் தலைமை தாங்கிய அனுபவம் உள்ளதால் காலிட்டை நியமித்ததாக நஜிப்…

மலேசியா முகாபேயிக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது, ஹரப்பான் இளைஞர் பிரிவு கூறுகிறது

  முற்றுகையிடப்பட்டுள்ள ஜிம்பாப்வே அதிபர் ரோபர்ட் முகாபேயிக்கு மலேசியா அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்று ஹரப்பான் இளைஞர் தலைவர் நிக் நாஸ்மி நிக் அஹமட் கூறுகிறார். 93 வயதான அவர் மலேசியா அல்லது சிங்கப்பூரில் அடைக்கலம் தேடக்கூடும் என்ற ஓன்லைன் செய்திகள் மீது கருத்துரைத்த நிக் இவ்வாறு கூறினார்.…

யூனிசெஃப் : மலேசியக் குழந்தைகளில் பெரும்பான்மையினர் பகடிவதைக்கு அஞ்சுகின்றனர்

மலேசியாவில் ஒவ்வொரு 10 குழந்தைகளிலும், கிட்டத்தட்ட 7 பேர் பகடிவதைக்கு அஞ்சுவதாக  உலகளாவிய, புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இன்று, உலகக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஜப்பானில், ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் 3 பேர் மட்டுமே அதைப்பற்றி அஞ்சுவதாகவும்…

மூன்றாம் படிவ மாணவர்களில், 7 விழுக்காட்டினர் மட்டுமே தொழிற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்

3-ஆம் படிவம் முடித்த மாணவர்களில் 7 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சியை (தி.வி.இ.தி.) மேற்கொள்வதாக, இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. தி.வி.இ.தி. மற்றும் தொழிற்சார் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில்,நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருவதாக துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன்…

சரவணனுக்கு எதிராக தமிழ் மலர் அவதூறு வழக்கு: ரிம50 மில்லியன்…

  இளைஞர் மற்றும் விளையாட்டுகள் துறை துணை அமைச்சர் எம். சரவணனுக்கு எதிராக தமிழ் மலர் நாளிதழ் அவதுறு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நாளிதழின் உரிமையாளர் சிட்டி டீம் மீடியா செண்ட். பெர்ஹாட் அந்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்தது. தமிழ் மலர் "போலியான…