தண்டிக்கப்பட வேண்டியவர்கள் டோல் நிறுவனங்கள் ; சாலைப் பயனர்கள் அல்ல

அரசாங்கம்  அவசரத்   தடங்களைப்  பயன்படுத்தும்     சாலைப்  பயனர்களைத்   தண்டிப்பதற்குப்  பதிலாக      நெடுஞ்சாலைகளில்     போக்குவரத்து  நெரிசலைத்     தவிர்க்கத்  தவறிய  சாலைப்  பராமரிப்பு   நிறுவனங்களைத்தான்  தண்டிக்க   வேண்டும்    என்கிறார்   பாஸ்   துணைத்   தலைவர்    துவான்   இப்ராகிம்   துவான்  மான். அவசரத்   தடங்கள்   அவசர  வேளைகளில்   பயன்படுத்துவதற்காக   மட்டுமே       என்பதை  ஒப்புக்கொண்ட    துவான் …

குவான் எங் கட்சித் தேர்தல்களில் போட்டியிடலாம்- டிஏபி

டிஏபி,  கட்சித்  தேர்தல்களை   நடத்துவது  குறித்து     முடிவு   செய்ய    அடுத்த  சில   வாரங்களில்    அதன்  மத்திய    செயல்குழுக்  (சிஇசி) கூட்டத்தைக்  கூட்டவிருப்பதாக   அமைப்புச்  செயலாளர்   அந்தோனி   லோக்  கூறினார். கட்சித்      தேர்தல்    இவ்வாண்டில்  நடந்தால்    பினாங்கு  முதலமைச்சர்   லிம்   குவான்   எங்    தலைமைச்  செயலாளர்    பதவியைத்     துறக்க   வேண்டியிருக்கும்  …

பினாங்கில் திடீர் தேர்தலா? டிஏபி இன்னும் முடிவு செய்யவில்லை

டிஏபி   அதன்   தலைமைச்  செயலாளரும்  பினாங்கு   முதலமைச்சருமான  லிம் குவான்  எங்மீது  சுமத்தப்பட்டுள்ள  இரண்டு   ஊழல்  குற்றச்சாட்டுகளை  எதிர்கொள்ள   இரண்டு   வழிமுறைகளைப்  பின்பற்ற   முடிவு   செய்துள்ளது. ஒன்று,   லிம்முக்கு  எதிரான   குற்றச்சாட்டுகள்  குறித்து   மக்கள்  என்ன  நினைக்கிறார்கள்  என்பதைக்  கண்டறிய  திடீர்    தேர்தலை    நடத்துவது. இன்னொன்று,  பொதுத்  தேர்தலுக்குக்  …

பங்களா-கேட் வழக்குக் காரணமாக சீனர்கள் வாக்குகள் மீண்டும் எதிரணிக்கே செல்லும்-…

கெராக்கான்   தலைவர்   மா   சியு   கியோங்,   பினாங்கு     முதலமைச்சர்    லிம்  குவான்  எங்   பங்களா  வீடு  வாங்கியதன்மீது    வழக்குத்   தொடுக்கப்பட்டிருப்பதை    அடுத்து    சீனர்களின்   வாக்குகள்     மீண்டும்      டிஏபி  பக்கமே   திரும்பிச்  செல்லும்    என்று  நினைக்கிறார். 2015  பொதுத்    தேர்தலில்     பக்கத்தான்  ரக்யாட்டையும்    டிஏபி-யையும்     ஆதரித்த  சீன    வாக்காளர்களில்    85 …

லஹாட் டத்து கடலில் மூன்று இந்தோனேசியர்கள் கடத்தல்

நேற்றிரவு   லஹாட்   டத்து    கடலில்   மீன்பிடித்துக்    கொண்டிருந்த  மூன்று    இந்தோனேசியர்கள்     ஆயுதந்  தாங்கிய     நபர்களால்    கடத்தப்பட்டார்கள். நள்ளிரவு  நேரத்தில்   அச்சம்பவம்   நடந்ததாக   தெரிய  வருகிறது  என    பெர்னாமா  கூறிற்று. அக்கடத்தல்  சம்பவம்    தொடர்பில்  சாபா  போலீஸ்   ஆணையர்   டத்தோ   அப்துல்   ரஷிட்   ஹருன்  இன்று    பின்னேரம்     செய்தியாளர்   கூட்டம் …

‘1எம்டிபி மீதான கணக்காய்வாளர் அறிக்கையை வெளியிட்டால் சரவாக் ரிப்போர்ட் செய்த…

அரசாங்கம்  1எம்டிபிமீதான   அரசாங்கத்  தலைமைக்  கணக்காய்வாளரின்  தணிக்கை  அறிக்கையை  வெளியிட   வேண்டும்  எனக்   கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.    அப்போதுதான்  சரவாக்     ரிப்போர்ட்      செய்த   தவறு  என்னவென்பது  தெரிய  வரும்   என்கிறார்  பாஸ்   துணைத்   தலைவர்   துவான்  இப்ராகிம்  துவான்  மான். 1எம்டிபி   இரகசிய   ஆவணம்  என்றும்   அதன்  உள்ளடக்கத்தைத்  தப்பும்தவறுமாக    சரவாக்…

“டூயிட் ராயா” கேலிச் சித்திரத்திற்காக இஙா மீது தேசநிந்தனை விசாரணை

  ஹரிராயா கொண்டாட்டத்தின் போது டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரான இஙா கோர் மிங் அவரது முகநூலில் குழந்தைகளும் விருந்தினர்களும் "டூயிட் ரயா" பண உறைகளைப் பெறுவது போலவும் அவற்றை இலஞ்சம் பெறுவதற்கு ஒப்பிட்ட கேலிச் சித்திரம் பதிவு செய்ததற்காக தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார் என்று போலீஸ் படைத்…

ஸாகிர் நாய்க் குறித்து சமயங்களுக்கிடையிலான அமைப்புக்கு எதிராக பெர்காசா போலீஸ்…

  பங்களாதேசம், டாக்காவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்கலில் இஸ்லாமிய போதகர் டாக்டர் ஸாகிர் நாய்க்கை தொடர்புபடுத்தியதற்காக மலேசிய புத்த சமயம், கிறிஸ்த்துவ சமயம், இந்து சமயம், சீக்கிய சமயம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் ஆலோசனை மன்றத்திற்கு (எம்சிசிபிசிஎச்எஸ்டி) எதிராக மலாய் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான பெர்காசா போலீஸ் புகார்…

1எம்டிபி தணிக்கை அறிக்கை சூழ்ந்துள்ள இரகசியம் வெளிவர ஆட்சியாளர் மன்றமே…

1எம்டிபி மீதான தேசிய கணக்காய்வரின் தணிக்கையை சுற்றியிருக்கும் இரகசியத்தை வெளிக்கொணர ஆட்சியாளர்களின் மன்றம் தலையிட வேண்டும். அதுதான் மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை. கோலதிரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா காமாருல் பாரின் ஷா ராஜா அஹமட் இவ்வாறு கூறுகிறார், ஏனென்றால் அனைத்து அரசாங்க அமைப்புகளையும் கீழறுப்பு செய்து அரசாங்கம்…

1எம்டிபி மீதான ஏஜியின் அறிக்கையை மறைக்க முயல்வதை பேரரசர் தடுக்க…

  சரவாக் ரிபோர்ட் 1எம்டிபி மீதான தேசிய கணக்காய்வரின் தணிக்கை அறிக்கையின் பல பகுதிகளைக் கசிய விட்டிருப்பதைத் தொடர்ந்து கருத்துரைத்த சட்டப் பேராசிரியர் அசிஸ் பாரி, அந்த ஆவணத்தை மக்களிடமிருந்து தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் அரசாங்கத்திற்கு அளிக்கவில்லை என்று கூறினார். அதிகாரத்துவ இரகசியச் சட்டம் (ஒஎஎஸ்)…

சரவாக் ரிப்போர்ட் ஓஎஸ்ஏ ஆவணங்களை வெளியிட்டிருப்பதை போலீஸ் விசாரணை செய்ய…

சரவாக்  ரிப்போர்ட்  1எம்டிபி  விசாரணையுடன்  சம்பந்தப்பட்ட  முக்கிய  ஆவணங்கள்  சிலவற்றைக்  கசிய  விட்டிருப்பது  குறித்து  போலீஸ்  விசாரணை  செய்ய  வேண்டும்  எனத்  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்  கூறினார். “சரவாக்  ரிப்போர்ட்  அதிகாரத்துவ  இரகசிய  சட்டத்தின்கீழ்  வரும்  ஒரு  ஆவணம்   தன்  வசமிருப்பதாக  அறிவித்திருப்பதை  போலீஸ் …

பேங்க் நெகராவின் ‘இன்னொரு கடிதத்தை’ வெளியிட்டிருக்கிறது சரசாக் ரிப்போர்ட்

லண்டனைத்  தளமாகக்  கொண்டு  இரகசிய  தகவல்களை  அம்பலப்படுத்தி  வரும்  சர்வாக்  ரிப்போர்ட்   இப்போது  1எம்டிபி  தொடர்பான  மேலும்  ஒரு  முக்கிய   ஆவணத்தை  வெளிட்டிருப்பதாகக்  கூறிக்  கொள்கிறது. அது  பேங்க்  நெகாரா  துணை  ஆளுனர்  எழுதிய  இரண்டாவது  கடிதம்  என்று  அது  கூறிக்கொண்டது. பேங்க்  நெகாராவிலிருந்து  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)வுக்கு  அனுப்பப்பட்ட …

ஆய்வாளர்கள்: மலேசியாவில் மேலும் ஐஎஸ் தாக்குதல்கள் நிகழலாம்

மலேசியா  மேலும்  பல  ஐஎஸ்  தாக்குதல்களை  எதிர்கொள்ள  தன்னைத்  தயார்ப்படுத்திக்  கொள்ள  வேண்டும்  என   ஆய்வாளர்கள்  எச்சரிப்பதாக  போர்பஸ்  ஏடு  ஒரு  ஆய்வுக்  கட்டுரையில்  கூறியுள்ளது. தீவிரவாத  ஐஎஸ்ஸுக்கு  மலேசியாவின்  மிதவாத  இஸ்லாமும்  அது  அந்தப்  பயங்கரவாத  அமைப்பின்  வன்முறை   அணுகுமுறைகளைக்  கண்டனம்  செய்வதும்  பிடிக்கவில்லை  என அல்பேனியில் …

1எம்டிபி தணிக்கை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஆட்சியாளர்கள் உத்தரவிட வேண்டும்:…

நேற்று  சரவாக்  ரிப்போர்ட்    அரசாங்கத்  தலைமைக்  கணக்காய்வாளரின்  1எம்டிபி  கணக்கு அறிக்கையை  வெட்ட  வெளிச்சமாக்கி  இருப்பதால்   பேரரசரும்  சுல்தான்களும் அவ்வறிக்கையை பாதுகாக்கும்  இரகசியக்  காப்புத்  தன்மையை  அகற்றி  அதைப்  பகிரங்கமாக  வெளியிட  உத்தரவிட  வேண்டும்  என  வலியுறுத்தப்பட்டுள்ளது. பேரரசரும்  மாநில  சுல்தான்களும்  தலைமைக்  கணக்காய்வாளர்   அலுவலகம்  (1எம்டிபிமீது) ஒரு …

மலேசியாவில் கவனம் தேவை: அமெரிக்கத் தூதரகம் அதன் மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்கார்கள்  மலேசியாவில்  பயணம்   செய்கையில்  கவனமாக  இருக்க  வேண்டும்  என்று  கோலாலும்பூரில்  உள்ள  அமெரிக்கத்  தூதரகம்  எச்சரித்துள்ளது. பூச்சோங்  இரவு  விடுதியில்  நிகழ்ந்த  குண்டுவெடிப்புக்கும் ஐஎஸ்ஸுக்கும்  தொடர்புண்டு  என  மலேசிய  அதிகாரிகள் உறுதிப்படுத்தி  இருப்பதையும்  வங்காள  தேசம்,  துருக்கி,  ஈராக்,  சவூதி  அராபியா,  இந்தோனேசியா  ஆகிய  நாடுகளில்  அண்மையில் …

தைவான் ரயிலில் குண்டு வெடிப்பு: 25பேர் காயமடைந்தனர்

நேற்று தைவான் தலைநகரில்  பயணிகள்  ரயில்  வண்டி  ஒன்றில்  நிகழ்ந்த வெடிப்பு  ஒன்றில்  25 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில்  குழாய்க்  குண்டு  என்று  ஐயுறப்படும்  ஒன்றினால்  நிகழ்ந்த  அந்த  வெடிப்பினால்  தைபே  சோங்ஷான்  நிலையமே  அதிர்ந்ததாக சம்பவத்தை  நேரில்  கண்டவர்கள்  தெரிவித்தனர். வெடிப்பு  நிகழ்வதற்கு   முன்பு  ஒரு  நபர் …

1எம்டிபி மீதான தேசிய கணக்காய்வாளரின் அறிக்கையை சரவாக் ரிப்போர்ட் வெளியிட்டது

  லண்டனை தளமாகக் கொண்ட சரவாக் ரிபோர்ட் 1எம்டிபி மீதான மலேசிய தேசிய கணக்காய்வாளரின் (ஏஜி) பல பகுதிகளை வெளியிட்டுள்ளது. அவரின் அறிக்கை அதிகாரப்பூர்வமான இரகசியச் சட்டத்தின் (ஒஎஸ்எ) கீழ் இரகசியமானது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1எம்டிபி மீதான ஏஜியின் அறிக்கையின் பல பகுதிகளையும் அவை சார்ந்த பல ஆவணங்களையும்…

நான் பயங்கரவாததை ஆதரிப்பது இல்லை, ஸாகிர் நாய்க் கூறுகிறார்

  தமது பேச்சுக்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுவதை இஸ்லாமிய போதகர் ஸாகிர் நாய்க் மறுத்துள்ளார். மேலும், அவருக்கு எதிரான விசாரணை எதனையும் வரவேற்பதாக கூறுகிறார். பங்களாதேசம், டாக்காவில் 20 பிணைக்கைதிகளைக் கொலை செய்த பயங்கரவாதிகளில் இருவர் மும்பாயை தளமாக கொண்டிருக்கும் ஸாகிரின் சமூக ஊடகத்தை பின்பற்றுபவர்கள் என்ற…

ஹரிராயா நல்வாழ்த்துகள்

செம்பருத்தி. கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும்  அதன் ஹரிராயா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஐஎஸ் உருவாக உதவியவர்களே நீங்கள்தானே: அரசியல்வாதிகளையும் உலாமாக்களையும் சாடுகிறார் மரினா

ஐஎஸ்  பயங்கரவாதிகள்  உருவாகக்  காரணமானவர்களே  இப்போது  பயங்கரவாதக்  கும்பல்களோடு  சேராதீர்கள்  என்று  அறிவுரை  கூறுகிறார்கள்  எனச்  சமூக  ஆர்வலர்  மரினா  மகாதிர்  சாடினார். முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  மகளான  மரினா  டிவிட்டரில்  இவ்வாறு  கூறினார். ஐஎஸ்ஸில்   சேராதிருத்தல்  என்பது  ஆயுதம்  ஏந்தாமலிருப்பது  மட்டுமல்ல. ஐஎஸ்  தீவிரவாதிகள்போல் …

ஆய்வாளர்: முடிவெடுக்காத நிலையில் உள்ள 30 விழுக்காட்டு வாக்காளர்களைக் கவர்வதே…

சிலாங்கூரில் 30 விழுக்காட்டு  வாக்காளர்கள்-  இவர்களில்  மிகப்  பலர்  இளைஞர்கள்-  யாருக்கு வாக்களிப்பது  என்பதை  முடிவு  செய்யாமலிருப்பவர்கள்.  இவர்களை  பிகேஆர்  பக்கம்  வளைத்துப்போடுவதே சிலாங்கூர்  மந்திரி  புசார்  முகம்மட்  அஸ்மின்  அலியை  எதிர்நோக்கும்  மிகப்  பெரிய  சவாலாகும்  என்று  அரசியல்  ஆய்வாளர் பேராசிரியர்  ஹம்டான்  ஒஸ்மான்  கூறுகிறார். பக்கத்தான் …

ஐஎஸ்ஸை விட்டு ஒதுங்கி இருங்கள்: முஸ்லிம்களுக்கு பாஸ் அறிவுரை

முஸ்லிம்கள்  ஐஎஸ்ஸை  விட்டும்  மற்ற  பயங்கரவாதக்  கும்பல்களை  விட்டும்  ஒதுங்கி  இருக்க  வேண்டும்  என  பாஸ்  வலியுறுத்தியது. அவர்களின்  செயல்கள்  இஸ்லாத்துக்கு  எதிரானவை. இவ்வாறு  கூறிய  கட்சித்  துணைத்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான்  எந்தச்  சமயமும்  தீவிரவாதத்தை  ஆதரிப்பதில்லை  என்றார். “சமயத்துக்காகவும்  இஸ்லாத்தை  அமல்படுத்தவும்  போராடும் …

குவான் எங்குக்கு எதிராக அபாண்டி வழக்கை நடத்துவதே மு்றையானதாகும்- ஷாபி

பினாங்கு முதலமைச்சருக்கு  எதிராக  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி)  முகம்மட்  அபாண்டி  அலியே  வாதாடுவதுதான்  மரியாதைக்குரியது,  முறையானது  என்கிறார்  மூத்த  வழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி  அப்துல்லா. முக்கிய  பெருமக்கள்,  குறிப்பாக  அமைச்சர்கள்  சம்பந்தப்பட்ட  வழக்குகளில்   நாட்டின்  சட்டத்துறைத்  தலைவரே  வழக்கை  நடத்துவதுதான்  முறையாகும்  என்றாரவர். “இது  முதலமைச்சர்  லீ  குவான் …