1எம்டிபி குறித்து ஆஸி வங்கி அதிகாரியிடம் விசாரணை

ஆஸ்திரேலிய  நாடாளுமன்ற  விசாரணைக்  குழு அந்நாட்டு வங்கி  அதிகாரி  ஒருவரிடம்   அவருடைய  வங்கிக்கு  1எம்டிபி  ஊழலுடன்  தொடர்புண்டா   எனத்  துருவித்  துருவி  விசாரித்துள்ளது.. யுஎஸ்$1பில்லியனுக்குமேல்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  AmBank  வங்கிக்கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டது  பற்றி  அறிவாரா  என்று ANZ Bank துணைத்  தலைவர்  கிரேஹேம்  ஹோட்ஜசிடம்  வினவப்பட்டது.…

கேஜெ: வெளிநாட்டில் கணக்கு வைத்துக்கொள்வது குற்றமல்ல

பலர்  தொழில்  காரணங்களுக்காக  வெளிநாட்டு  வங்கிகளில்  கணக்கு  வைத்துக்  கொண்டிருக்கலாம்  அதைக்  குற்றமென்று  சொல்ல  முடியாது  என  இளைஞர்,  விளையாட்டு   அமைச்சர்  கைரி  ஜமாலுடின்  கூறினார். “நிறைய  தகவல்கள்  கசிந்துள்ளன. முழுவதும்  இன்னும்   தெரியவில்லை. மெஸ்ஸியின்  பெயர்கூட  உள்ளது. “இதனாலேயே (கணக்கு  வைத்திருப்பதால்) ஒருவர்  குற்றவாளி  ஆகிவிட  மாட்டார்.…

‘பனாமா பேப்பர்ஸ்’மீது உலக நாடுகளின் கவனம்

உலகம் முழுவதும் அரசியல் பெரும்புள்ளிகள்,   பிரபலங்கள், பெரும்  பணக்காரர்கள்  பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்து எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுதான் 'பனாமா பேப்பர்ஸ்'. பனாமா  பேப்பர்ஸ்  அம்பலப்படுத்தியுள்ள  பிரபலங்களின்  பட்டியலில்  ரஷ்ய அதிபர்…

இணையச் சேவை எல்லா இடங்களிலும் கிடைக்க வேண்டும், அதற்குத்தான் முக்கியத்துவம்

இணையச்  சேவையில்  வேகத்தைவிட  அது  நாடு  முழுக்கக்  கிடைக்க  வேண்டும்  என்பதற்கே  அரசாங்கம்  முன்னுரிமை  கொடுப்பதாக  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்  கூறினார். “ஆசியான்  நாடுகள்  இணையச்  சேவையின்  வேகத்தில்   கவனம்  செலுத்தி  வரும்  வேளையில்  மலேசியா  அது  பரவலாகக்  கிடைக்க  வேண்டும்  என்பதற்குத்தான்  முன்னுரிமை …

மகாதிர்: தேர்தல் முறைப்படி நடந்தால் பிஎன் தோற்றுப்போகும்

அடுத்த  பொதுத்  தேர்தல்  முறைப்படி  நடத்தப்படுமானால்   பிரதமர்  அப்துல்  ரசாக்  தலைமையிலான  ஆளும்  கட்சி  தோற்றுப்போகலாம்  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறினார். “தேர்தல்  நியாயமாக,   வாக்குப் பெட்டிகளில்  தில்லுமுல்லு  போன்றவை   இல்லாமல்  நடத்தப்பட்டால் பிஎன்  தோற்கும்  என்றே  நினைக்கிறேன்”, என  மகாதிர்  கூறியதாக  சிங்கப்பூரின் …

நஜிப் பதவி விலக இளைஞர்கள் கோரிக்கை

பணம்  பில்லியன்  கணக்கில்  அவருடைய  கணக்கில்  மாற்றிவிடப்பட்டதாக  செய்திகள்  வந்து  கொண்டிருப்பதால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலகுவதே  நல்லது  என   இளைஞர்  அமைப்புகள்  கோரிக்கை  விடுத்துள்ளன. “நேர்மையையும்  பொறுப்புடைமையையும்  காட்டும்  வகையில்   நஜிப்  பதவி  விலக  வேண்டும்  என  விரும்புகிறோம்”, என  அவ்விளைஞர்கள்  ஓர்  அறிக்கையில் …

1எம்டிபி தொடக்கத்திலிருந்தே நிலையற்றிருந்தது: அமைச்சர் ஒப்புக்கொள்கிறார்

குறைந்த  மூலதனமும்  கூடுதல்  கடன்களும்  1எம்டிபி  தொடக்கத்திலிருந்து  நிலையற்றிருந்தற்குக்  காரணம்  என்கிறார் பிரதமர்துறை  அமைச்சர்  அப்துல்  வாஹிட்  ஒமார். குறைவான  மூலதனத்துடன்  தொடங்கப்பட்ட  நிறுவனம்  அது  என்றாரவர். “அதனால்  நிறைய  கடன்  வாங்கப்பட்டது.  இப்போது  நிர்வாக  வாரியம்  அதைச்  சீரமைக்கும்  பணியை  மேற்கொண்டிருக்கிறது”, என்று  அமைச்சர்  அமெரிக்க  ஒலிபரப்பு …

பனாமா ஆவணங்களில் நஜிப் மகனின் பெயரும் உள்ளது

பனாமாவில்  உள்ள  வழக்குரைஞர்  நிறுவனத்திலிருந்து  கசிந்த  ஆவணங்களில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  புதல்வர்களில்  ஒருவரான  முகம்மட்  நசிப்புடின்  முகம்மட் நஜிப்பின்  பெயரும்  இடம்பெற்றுள்ளது. பிரிட்டனின்  வெர்ஜின்  தீவுகளில்  உள்ள  இரண்டு  நிறுவனங்களில்,  ஜே  மரியோட் (Jay Marriot)  இண்டர்நேசனலிலும்(பிவிஐ),  பிசிஜே இண்டர்நேசனல்  வெண்ட்சர்  லிமிட்டட்டிலும்  அவர்  இயக்குனராக …

டிஎபி எம்பியின் உறவினர் கடத்தப்பட்டார்

டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் எலிஸ் லாவ் கியோங் யிஎங்கின் உறவினர் லாவ் ஜுங் ஹியன் நேற்றிரவு சாபா, செம்போர்னா கடற்பகுதியிலிருந்து கடத்தப்பட்ட நான்கு மலேசியர்களில் ஒருவராவார். பாதிக்கப்பட்டவர்களில் இருவர், வோங் டெக் பெங் மற்றும் வோங் டெக் சீ ஆகியோரும் லவ்வின் உறவினர்களாவர். அவர்கள் சிபுவை சேர்ந்தவர்கள். நான்காவது…

அமானா சரவாக்கில் 13 இடங்களில் களமிறங்கும்

எதிர்வரும்  சரவாக்  சட்டமன்ற  தேர்தலில்  13  தொகுதிகளில்  போட்டியிடப்போவதாக  அமானா  அறிவித்துள்ளது. இதன்  தொடர்பில்  பக்கத்தான்  ஹராபான்  பங்காளிக்  கட்சிகளுடன்  கலந்துபேசி  முடிவெடுத்து  விட்டதாக  அமானா   துணைத்  தலைவர்  சலாஹுடின்  ஆயுப்    தெரிவித்தார். “13 இடங்களிலும்  போட்டியிடுவதற்கான  ஏற்பாடுகளைச்  செய்யத்  தொடங்கி  விட்டோம்.  வேட்பாளர்களும்  அடையாளம்  காணப்பட்டு  விட்டனர்.…

கூட்டம் குறைந்திருந்தது பாஸின் பலத்தை உணர்த்தவில்லையா? கேட்கிறார் துவான் இப்ராகிம்

முந்தைய  பேரணிகளுடன்  ஒப்பிடும்போது  நேற்றைய  ஜிஎஸ்டி(பொருள், சேவை  வரி)- எதிர்ப்புப்  பேரணியில்  கூட்டம்  குறைவு  என்பது  பாஸின்  பலத்தைக்  காண்பிப்பதாக  அக்கட்சி  கூறியது. “கூட்டத்தினர்  எண்ணிக்கை  என்று  பார்த்தால்  அது (பேரணி)  தோல்விதான். பாஸும்  அதில்  இணைந்திருந்தால்  கூட்டம்  இன்னும்  பெரிதாக  இருந்திருக்கும்”, என  பாஸ்  துணைத்  தலைவர் …

‘மகாதிர் நஜிப்பைப் பதவியிலிருந்து அகற்ற நினைப்பது சரி, ஆனால் அதற்கான…

அம்னோ   மூத்த  தலைவர்  தெங்கு  ரசாலி  ஹம்சா,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்  பதவியிலிருந்து  அகற்றும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  திட்டத்தை   எதிர்க்கவில்லை. ஆனால்,  அது  அரசமைப்புக்கு  ஏற்புடையதல்ல  என்றாரவர். “மகாதிரின்  விருப்பத்தை  நான்  எதிர்க்கவில்லை.  ஆனால்,  அது  நடவாது.  ஏனென்றால்,  அரசமைப்பு  அதற்கு  இடம்தராது”,…

‘திரெங்கானு அம்னோவில் நெருக்கடி’, முன்னாள் எம்பி

திரெங்கானு  மந்திரி  புசார்  அஹ்மட்  ரசிப்  அப்துல்  ரஹ்மான் எந்த  நேரத்திலும்   பதவியிலிருந்து  தூக்கப்படலாம்  என  முன்னாள்  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்  கூறிக்  கொண்டிருக்கிறார். திரெங்கானு  சுல்தான்   மிசான்  சைனல்  அபிடினைச்  சந்தித்து  மந்திரி  புசாரை  அகற்றுமாறு  அவரைக்  கேட்டுக்கொள்ள  வேண்டும்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல் …

ஜிஎஸ்டி-ஏதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர் தடுப்புக் காவலில்

ஜிஎஸ்டி- எதிர்ப்புப்  பேரணியில்  கலந்துகொண்ட  முகம்மட்  ஸப்ரான்  முகம்மட்  ஸுக்டி  தேச  நிந்தனைச்  சட்டம்  பிரிவு 4(1)(C)இன்கீழ்  விசாரணைக்காக  தடுத்து  வைக்கப்பட்டிருக்கிறார். நேற்று  கோலாலும்பூரில்    பிற்பகல்  மணி  சுமார்  3.30-க்கு  பொருள்,  சேவை  வரியை  எதிர்த்து  நடைபெற்ற  பேரணியில் கலந்து  கொண்ட  ஸப்ரான்  போலீஸ்  கார்  ஒன்றில்  பிரதமர் …

மகாதீர்: ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டாம் என்று நஜிப்பை கேட்டுக்கொண்டேன், அவர்…

  இன்று சுட்டெரிக்கும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எதிர்ப்பு கூட்டத்திற்கு திடீரென்று வருகையளித்த முன்னாள் பிரதமர் மகாதீர், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டாம் என்று தாமே பிரதமர் நஜிப்பை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் நஜிப் அதற்கு இணங்காமல் அவரது திட்டத்தை…

“செடிக்” இந்தியர்களுக்கான மாரா அமைப்பாக மாற்றப்பட வேண்டும்

-மு. குலசேகரன், ஏப்ரல் 2, 2016. மாரா பூமிபுத்ராக்களுக்கென 1ஆம் தேதி மார்ச் 1966ல் புறநகர் வட்டார மேம்பாடு அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு இன்று 10 லட்சம் பூமிபுத்ரா வணிகர்களை உருவாக்கியுள்ளது .மேலும் அதன் வழி 12 லட்சம் பட்டதாரி மாணவர்கள்  உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மலாய்க்காரர்களையும் பிற…

எட்மண்ட் போன் ஆசியான் மனித உரிமைகள் அமைப்பில் மலேசியப் பிரதிநிதி

  எட்மண்ட் போன் தாய் சூன் ஆசியான் மனித உரிமைகள் அமைப்பில் 2016-2018 தவணைக்கான மலேசியாவின் புதிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பதாக மலேசிய அரசாங்கம் இன்று அறிவித்தது. இந்த அமைப்பில் மலேசியாவின் முதல் பிரதிநிதியாக இருந்தவர் ஷாப்பி அப்துல்ல. இவர் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில்…

டிஏபி மகஜர் தொடர்பில் அலி திஞ்சுமீது போலீஸ் விசாரணை

நேற்று  டிஏபி  அலுவலகம்  சென்று  ஒரு  மகஜர்  வழங்கிய  அலி  திஞ்சுமீதும்  அவரின்  சிவப்புச்  சட்டை  இயக்கத்தின்மீதும்,  ஜாரிங்கான்  மலாயு  மலேசியா(ஜேஎம்எம்)மீதும்   போலீஸ்  விசாரணை  செய்யும். அலி  திஞ்சு,  இயற்பெயர்  முகம்மட்  அலி   பஹாரோம்,  தன்  பரிவாரங்களுடன்  கூட்டமாக   டிஏபி  தலைமைச்   செயலாளர்  லிம்  குவான்  எங்  ரிம2.8…

துப்பாக்கிக்காரன் அலோர் ஸ்டார் சிறைச்சாலையை நோக்கி 10 தடவை சுட்டான்

நேற்றிரவு   மணி  10.30  அளவில், துப்பாக்கிக்காரன்  ஒருவன்  அலோர்  ஸ்டார்  சிறைச்சாலையை  நோக்கி  10  தடவை  சுட்டிருக்கிறான். சிறை  வார்டன்  முகம்மட்  பிட்ரி  அப்துல்  ஸமான்,31,  காவல்  அறையில்  தான்  மட்டுமே  கடமையில்  இருந்ததாகவும்  அப்போது  இருவர்   மோட்டார்  சைக்கிளில்  வந்ததாகவும்  தெரிவித்தார். “அவர்களில்  ஒருவன்  மோட்டார்  சைக்கிளைவிட்டு …

1எம்டிபி விசாரணைக்காக அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் மலேசியா வருகை

அமெரிக்க  நீதித்துறை  அதிகாரிகள்  1எம்டிபி  விசாரணை  தொடர்பில்  தனிப்பட்ட  சிலரைச்  சந்திப்பதற்கு   மலேசியா  வந்திருக்கிறார்களாம்.  பெயர்  குறிப்பிடப்படாத  வட்டாரங்களை  மேற்கோள்காட்டி  ராய்ட்டர்ஸ்  செய்தி  இவ்வாறு  அறிவித்துள்ளது. செய்தியை  உறுதிப்படுத்திக்கொள்ள  மலேசியாகினி  அமெரிக்க  நீதித்துறையைத்  தொடர்பு  கொண்டுள்ளது. 1எம்டிபி  ஊழல்  குறித்து  சுவிட்சர்லாந்து,  பிரிட்டன்,  அமெரிக்கா,  லக்ஸ்ம்பர்க்,  சிங்கப்பூர்,  ஹாங்காங் …

இசைக் கச்சேரியில் டாக்டர் மகாதிர்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்  பதவியிலிருந்து  அகற்றுவதை  முதன்மை  நோக்கமாகக்  கொண்டு   செயல்பட்டுவரும்  முன்னாள்  பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்  நேற்றிரவு  அதற்கு  இடைவேளை  விட்டு  புகழ்பெற்ற  பியானோ  கலைஞர்  ரிச்சர்ட்  கிளேடெர்மனின்  பியானோ  கச்சேரிக்குச்  சென்றிருந்தார். இஸ்தானா  புடாயாவில்  நடைபெற்ற  இசை  நிகழ்ச்சிக்குச்  சென்றிருந்த   மகாதிருடன்  அவரின் …

நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை ஏற்றம் காண்கிறது

    இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் ரோன் 95 மற்றும் ரோன் 97 ஒரு லீட்டருக்கு 10 சென் விலை ஏற்றம் காண்கிறது. இதனால் ரோன்95 ஒரு லீட்டருக்கு ரிம1.70க்கும், ரோன்97 ஒரு லீட்டருக்கு ரிம2.05க்கும் விற்கப்படும். டீசல் விலை 20 சென் அதிகரிக்கிறது. ஒரு லீட்டர் டீசல்…

புரோட்டோன் தலைவர் பதவியிலிருந்து விலகினார் மகாதிர்

முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட்  புரோட்டோன்  ஹொல்டிங்ஸ்  தலைவர்  பதவியிலிருந்து  விலகினார். இச்செய்தி  மகாதிரின்  வலைப்பக்கத்தில்  வெளியிடப்பட்டிருந்த  ஊடக  அறிக்கை  இதைத்  தெரிவித்தது.     அவரது  பதவிவிலகல்  கடிதம்  டிஆர்பி-ஹைகோம்  பெர்ஹாட்  நிர்வாக  இயக்குனர்  சைட்  பைசல்  அல்பாருக்கு  நேற்றே  அனுப்பப்பட்டு  விட்டதாகவும் அது  கூறிற்று. இதுபோக,  மகாதிர் …