இந்தியாவை சிறுமைப்படுத்த பாகிஸ்தானின் போலிப்படத்தை காட்டிய விவகாரம்; ஐ.நா. கூறியது…

நியூயார்க், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி உரையாற்றுகையில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிப்பதாகவும் குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஐ.நா.சபையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சரியான பதிலடியை கொடுத்தார். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும்…

அழிவுப்பாதைக்கு வழி அமைத்துவிட்டார் அருண் ஜேட்லி: யஷ்வந்த் சின்ஹா கடும்…

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில், நாட்டின் பொருளாதாரமானது மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் பலருக்கு…

பிரதமர் வீடு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியின் வீடு முன்பாக இன்று (புதன்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் ஒன்பது பேரை காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தங்கள் போராட்டத்தின் 74-ஆவது நாளான…

தண்ணீரில் மூழ்கும் நண்பனை கவனிக்காமல் செல்பி எடுத்த கல்லூரி மாணவர்கள்

பெங்களூரு அனுமந்தநகரில் வசித்து வருபவர் கோவிந்த், ஆட்டோ டிரைவர். இவரது மகன் விஷ்வாஸ். இவர், பசவனகுடி நேஷனல் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படையில் விஷ்வாஸ் சேர்ந்திருந்தார். கடந்த 23ஆம் தேதி அந்த கல்லூரியில் உள்ள தேசிய மாணவர்…

நாட்டில் காணாமல் போன 70 ஆயிரம் குழந்தைகள் அரசு முயற்சியால்…

புதுடெல்லி, புதுடெல்லியில் இன்று நடந்த குழந்தை மற்றும் வயது வந்தோர் தொழிலாளர் கருத்தரங்கில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, 2022ம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். நாட்டில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிவதற்காக ஆபரேசன் ஸ்மைல் திட்டம் உள்துறை…

அதெப்படி இலங்கை பற்றி பேசலாம்? ஜெனிவாவில் வைகோவுடன் 35 சிங்களவர்கள்…

ஜெனிவா: ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் வைகோ இன்று இருமுறை பேசினார். அப்போது இலங்கையைச் சேர்ந்த 35 சிங்களவர்கள் வைகோவை சூழ்ந்துகொண்டு தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11ஆம் தேதி முதல், வரும் 29…

ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்…

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தது முதல் இன்றுவரை எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், அதிமுகவில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

புதிய மாநிலங்களை அமைப்பது குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க கோரிக்கை

குவஹாத்தி, இந்த விஷயம் தொடர்பாக மக்களிடையே பொது விவாதங்கள் நடத்தி தேசிய கொள்கை ஒன்றை ஏற்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. புதிய மாநிலங்கள் அமைப்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய மாநிலங்களின் ஆதரவாளர்கள் கோரியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடையே பேசும்போது புதிய மாநிலங்களுக்கான தேசிய…

“கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை பாதுகாப்போம்” அமைச்சர் கே.பாண்டியராஜன் உறுதி

சென்னை, மறைந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கீழடி அகழாய்வின் 3-ம் கட்ட பணிகள் நிறுத்தப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து…

மத்திய அரசின் காதுகளில் ஒலிக்காத நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டம்!

புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன், ஓஎன்ஜிசிக்கு எதிராக நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் அழிந்து விடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மத்திய-மாநில அரசுகள் செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள்…

ஜெயலலிதா இட்லியும் சாப்பிடல, சட்னியும் சாப்பிடல… நாங்க பொய் சொன்னோம்…

மதுரை: ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக ஒப்பு கொண்டுள்ளார். ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நல குறைபாட்டால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காண மருத்துவமனை வாயிலில் ஏராளமான கூட்டம் கூடியது. நாளுக்கு நாள் ஜெயலலிதா…

ரோஹிங்யாக்களை தடுக்க இந்திய ராணுவம் சில்லி, ஸ்டன் குண்டுகளை பயன்படுத்துகிறது…

புதுடெல்லி, மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25–ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மியான்மரில் வசித்து வரும் சிறுபான்மை முஸ்லிம்களான ரோஹிங்யாக்களுக்கு எதிராக ராணுவமும், பிற பிரிவினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.…

காஷ்மீர் பிரச்சனையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் அழைப்பை சீனா நிராகரித்தது

பெய்ஜிங், காஷ்மீர் பிரச்சனையை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்சனையில் ஐ.நா. தீர்மானத்தை பிரகடனம் செய்யவேண்டும் என்ற இஸ்லாமிய கூட்டமைப்பின் அழைப்பை சீனா நிராகரித்து உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளை நுழைய செய்தும், இங்கிருக்கும் பிரிவினைவாதிகளுக்கு பண உதவி செய்தும், பயங்கரவாதிகளுக்கு எல்லா நிலைகளிலும் உதவி…

அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரபரப்பு பரிந்துரை

அரியலூர்: மாணவி அனிதா திடீரென தற்கொலை செய்து கொண்டது ஏன்? அவரை தூண்டியது யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்துமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீட் அடிப்படையில் தான் மருத்துவ சேர்க்கை நடை பெற வேண்டும் என்று…

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளார் என சகோதரர் இக்பால் கஸ்கர்…

மும்பை, மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந்தேதி 257 பேரை கொன்று குவித்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிம் (வயது 59). அவர் மும்பை தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, அங்கு அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உதவியுடன்…

கமல்ஹாசனை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது உதயகுமார் பேட்டி

நெல்லை, நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்த உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கூடங்குளத்தில் முதலாவது மற்றும் 2–வது அணு உலைகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு கடுமையாக போராடினார்கள். 5 ஆண்டுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. எனவே…

பாசனத்திற்கு இல்லாமல் புஷ்கரம் பூஜைக்கு திறக்கப்பட்டதா காவிரி?

காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாமல், காவிரி மகாபுஷ்கரம் (காவிரி ஆற்றை வழிபடும் விழா) நிகழ்வுக்காக திறந்துவிடப்பட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளாக குறுவை சாகுபடி(ஜூன் முதல் ஜூலை வரை) இல்லாமல் சம்பா சாகுபடியை (ஆகஸ்ட் முதல்…

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இந்தியாவுடன் உறவுகளில் முன்னேற்றம் இருக்காது பாகிஸ்தான்…

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இந்தியாவுடனான உறவுகளில் எந்த முன்னேற்றம் இருக்காது என பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி தெரிவித்துள்ளார். இந்தியத் தாக்குதலை எதிர்கொள்ள குறுகிய தூரம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் அவர் பேசும்போது, இந்திய ராணுவத்தினர் மறைமுக…

கீழடி அகழாய்வுக்கு பொறுப்பாளராகஅமர்நாத் ராமகிருஷ்ணனை நியமிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ்…

சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை அருகே கீழடியில் தொல்லியல் துறை மேற்கொண்டு வந்த 3-ம் கட்ட அகழாய்வு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ, அதனுடன் தொடர்புடைய கூறுகளோ கிடைக்கவில்லை என்றும் அதன் பொறுப்பாளர் ஸ்ரீராமன் கூறியுள்ளார்.…

மியான்மர் வன்முறையில் தப்பிய இந்துக்கள் இந்தியாவில் அடைக்கலம் கிடைக்கும் என…

டாக்கா, மியான்மரில் போலீஸ் படையினர் மீது கடந்த மாதம் 25-ந் தேதி ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் (அர்சா) தாக்குதல் நடத்தி, 12 பேரை கொன்றனர். அதைத் தொடர்ந்து, ராக்கின் மாகாணத்தில் இருந்து வந்த அந்த இன மக்கள் மீது ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். அதைத் தொடர்ந்து…

தமிழ் அகதிகளை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்- உமர் அப்துல்லா…

இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மியான்மாரில் இருந்து வரும், ரொஹிங்யா முஸ்லிம் அகதிகளை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வரும் நிலையில், இதுபற்றி அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.…

பிச்சை எடுப்பது போல கர்நாடகாவிடம் காவிரி நீருக்காக கெஞ்சுகிறோம்: சுப்ரீம்கோர்ட்டில்…

டெல்லி: காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழக்கில் வாதாடிவிட்ட…

இந்தியா இயற்கைச் சீற்றங்களால் மிகவும் பாதிக்கப்படும் மூன்றாவது நாடு –…

ஐநா சபை, கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மிகவும் பாதிப்படைந்திருப்பதாகவும் அவர் கூறினார். இர்மா புயல் போன்றவை புதிய இயல்புகளாக மாறியுள்ளன. இது புவி வெப்பமடைதலையே சுட்டிக்காட்டுகின்றது என்றார் அவர். உயரும் கடல் மட்டங்களாலும், இதர பருவகால மாற்றங்களாலும் மில்லியன் கணக்கான மக்களும், பல லட்சம் கோடி மதிப்புள்ள…