3 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு.. கோட்டைப்பட்டினத்தில் சோகம்

கோட்டைப்பட்டினம்: நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 3 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கம்…

மனுதர்மத்தை, இந்துத்துவாவை ஏற்காத முற்போக்கான அறிவியல் மதம் வீரசைவம்: கர்நாடகா…

பெங்களூரு: பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வை திணிக்கும் மனுதர்மத்தையும் இந்துத்துவாவையும் ஏற்காத முற்போக்கான அறிவியல் பூர்வமான மதம்தான் லிங்காயத்துகளின் வீரசைவம் என கர்நாடகா அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி கூறியுள்ளார். கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள லிங்காயத்துகளை லிங்காயத்துகள்- வீரசைவர்கள் என தனி மதமாக…

இன்னும் எத்தனை திவ்யபாரதிகளும், வளர்மதிகளும் குபேரன்களும் தேவை இந்த அரசுக்கு?

சென்னை: மாணவர்கள் உள்ளிட்ட இளம்தலைமுறையினர் மக்கள் நலன் போராட்டங்களில் பங்கேற்கூடாது என மிரட்டும் வகையில் கைது நடவடிக்கைகள் தொடர் நிகழ்வாகிவிட்டது. தற்போது மதுரையில் மாணவராக இருந்த போது போராட்டம் நடத்தியதற்காக ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. மெரினா…

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு தனி பஸ்… முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி…

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக பெண்களுக்கான பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்த பஸ்கள் பிங்க் நிறத்தில் இருக்கும். ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருக்கும். இவற்றில் ஆண்கள் பயணம் செய்ய முடியாது. பெண்களும், குழந்தைகளும் மட்டும்…

வேலையிழப்பால் தடுமாறும் ஐ.டி. துறை: தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வழி…

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் எட்டு முதல் பத்து சதவீதத்தை ஈட்டித்தரும் தகவல் தொழில்நுட்பத் துறையில், ஆயிரக்கணக்கில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தினமும் செய்திகள் வெளியாகின்றன. தற்போது வரை இந்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள வேலை இழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை வெளியிடப்படவில்லை. இதுவரை…

மலையை அசைப்பது ஈஸி.. எங்களிடம் மோதுவது கஷ்டம்.. இந்தியாவிடம் சீனா…

பீஜிங்: சீனாவின் இறையாண்மையை யாராலும் அசைக்க முடியாது என்றும் இந்தியா தங்கள் படைகளை திரும்ப பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை…

காஷ்மீரில் ஹுரியத் பிரிவினைவாதிகள் 7 பேர் அதிரடி கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானியின் மருமகன் உள்ளிட்ட 7 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வருவதாகத் தகவல்கள் வெளியாகின. காஷ்மீரில் அமைதியின்மை ஏற்பட்டபோது பிரிவினைவாதிகள் தீவிரவாதிகளிடம்…

டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் முதலிய கோரிக்கைகளை ,மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செருப்பு, துடைப்பத்தால் அடித்துக்கொண்டும், மொட்டை…

எங்களை கொன்று விடுவதாக போன் மூலம் மிரட்டல்… ஏதாவது நடந்தால்…

திருச்சி: எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாவே பொறுப்பு என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை உடனே கைவிடவேண்டும் என்று தொலைபேசிகள் மூலமாக ஆள் வைத்து மிரட்டுவதாகவும், எங்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் எச். ராஜாவே பொறுப்பு என்றும்…

இது என்ன கூத்து? தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு

மத்தியப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலையால் மார்க்கெட்டில் தக்காளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளியின் விலை கிலோ 120 முதல் 150 ரூபாய் வரை…

ஜீவசமாதி அடைய அனுமதி கொடுங்கள்: கோரிக்கை விடுத்த ராஜீவ் காந்தி…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கோரி மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த 1991 மே 21-ம் திகதி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றம்சாட்டப்பட்டது.…

சசிகலா இனி தப்பிக்கவே முடியாது: அடித்துச் சொல்லும் டி.ஐ.ஜி ரூபா

பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறியது உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும்…

6 மாதங்களுக்குள் இஸ்லாம் மதத்தை தழுவாவிட்டால்.. கேரள எழுத்தாளருக்கு மிரட்டல்

6 மாதங்களுக்குள் இஸ்லாத்தை தழுவாவிட்டால் கை, கால்கள் துண்டிக்கப்படும் என கேரள எழுத்தாளர் கே.பி.ராமனுன்னிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெயர், முகவரி குறிப்பிடாமல் அனுப்பப்பட்ட கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து எழுத்தாளர் ராமனுன்னி தி இந்து ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, "முதலில் இது ஏதோ வெற்று மிரட்டல் என்று…

இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை.. போர் வந்தால் 10 நாட்களுக்குத்தான்…

டெல்லி: இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாகவும், போர் வந்தால் 10 நாட்களுக்குதான் ஆயுதங்கள் போதுமானதாக இருக்கும் என்றும் மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கணக்கு தணிக்கையாளர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பது வழக்கம். தற்போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ராணுவத்தில் நிலவும் ஆயுதப் பற்றாக்குறை குறித்த…

சிறையில் சகல வசதிகளுடன் ராஜபோகமாக சசிகலா: உண்மையை ஒப்புக்கொண்ட சிறை…

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சகல வசதிகளுடன் ராஜபோகமாக இருந்ததை சிறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் சசிகலாவிடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாக டிஐஜி ரூபா அண்மையில்…

இந்திய வீரர்களை கொல்வோம்: சீனா எச்சரிக்கை

இந்திய-சீனா எல்லையான டோக்லம் எல்லைப் பகுதியில் இருந்து இந்திய படைகள் திரும்பிச் செல்லா விட்டால் அவர்கள் கைது செய்வோம் அல்லது கொல்வோம் என இந்தியாவுக்கான முன்னாள் சீன தூதர் லியூ யூஃபா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சிக்கிம் மாநிலத்தின் எல்லையான டோக்லம் பகுதியில், சீன அத்துமீறலை தடுக்க, இந்திய…

பிச்சைக்காரர்களைவிட மோசமாகிவிட்டோமே.. டெல்லி போராட்டத்தில் செருப்பால் அடித்துகொண்ட தமிழக விவசாயிகள்

டெல்லி: எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, டெல்லியில் தமிழக விவசாயிகள் தலையில் செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால் தமிழக…

தொடரும் துயரம்.. ஒரே ஆண்டில் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் தற்கொலை என்பது நாடு முழுவதும் தொடர் நிகழ்வாகவே உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும்…

இந்திய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது: உயிருக்குப் போராடும் ஊழியர்கள்

இந்திய சரக்கு கப்பல் ஒன்று அந்தமான் கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதாகவும், அதில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐடிடி பாந்தர் என்ற இந்திய சரக்கு கப்பல் இன்று அந்தமான் கடற்பகுதியில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியுள்ளது. திக்லிபூரில்…

மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது ஏன்? முதல்வர்…

சென்னை: மக்களை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கல்லூரி மாணவி வளர்மதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன்…

சீனாவின் இராணுவ நடவடிக்கை! எல்லையில் ஆயுதங்களைக் குவிக்கும் இந்திய இராணுவம்

இந்தியாவிற்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் சீன இராணுவம் செயற்பட்டு வருகிறது. சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் எல்லைப் பிரச்சினைகளை அடுத்து, இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் அடிக்கடி போர் பதற்றம் ஏற்படுவது வழமை. சீனா, இந்தியப் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, வரைபடங்களை வெளியிடுவதும், அதன் பெயர்களை புதிதாக…

சசிகலா பற்றிய வீடியோ உண்மையானது தான்!- டி.ஐ.ஜி. ரூபா

சிறையில் சசிகலா கையில் பையுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ காட்சி உண்மையானது தான் என பொலிஸ் டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார். பொலிஸ் டி.ஐ.ஜி. ரூபா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சோதனை நடத்தும்படி எனக்கு யாரும் உத்தரவிடவில்லை. பெங்களூரு சிறை…

சசிகலா குறித்த காணொளிகள் பெண் காவலர் மூலம் வெளியாகியது!

பெங்களூர் சிறையில் சசிகலாவின் வீடியோ காட்சிகளை பெண் காவலர் ஒருவர் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா சிறையில் வசதிகளுடனும் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியமை குறித்து விசாரணை நடத்துவதற்காக கர்நாடக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட உளவுப் பிரிவு விசாரணைகளிலிருந்து மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா தங்கியுள்ள அறையை…