கொரோனா கற்பிக்கும் பாடமும், கற்க மறுக்கும் மனிதனும்

கா. ஆறுமுகம் - அறிவியலில் அபார நடைபோடும் அமெரிக்காவை மண்டியிட வைத்துள்ளது இந்த மிக நுண்ணிய கிருமி. இதற்கான மருத்துவம் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு (2009-2010) முன்பு பரவிய பன்றிக் காய்சலை நாம் மறந்திருப்போம். அப்போது H1N1 என்று அழைக்கப்பட்ட அந்த தொற்று நோய் 214 நாடுகளுக்கு…

மலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் – பகுதி 5

சிவாலெனின் | மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி! மலேசியாவில் வாழ்ந்த, வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்தர இடத்தைத் தங்களுக்கே உரிய சிந்தனை உயிர்மங்களால் உயர்த்திப் பிடித்துள்ளவர்களில் பலரை நாம் பட்டியலிட முடியும். இன்று நம்மிடையே எத்தனையோ புதுக்கவிதைகள் ஆளுமைக் கொண்டிருந்தாலும், மரபுக் கவிதைகான தனித்துவமும் அதன்…

துருக்கி : 288 நாள் உண்ணாவிரதப் போராட்டம், இடதுசாரி பாடகி…

ஹெலின் பெலெக், துருக்கியைச் சார்ந்த, இடதுசாரி கொள்கை கொண்ட ஓர் இசைக்கலைஞர், கடந்த ஏப்ரல் 3-ம் தேதி, 288 நாள் உண்ணா விரதத்தின் இறுதியில் மரணித்துப் போனார். சுதந்திரமாகப் பாடுவதற்கு உரிமை வேண்டும் எனும் போராட்டத்தில், அந்த 28 வயது இளம்பெண் கொல்லப்பட்டார், துருக்கியின் ரெசெப் தயிப் ஏர்டோகன்…

நிர்பயா : ‘நீதி’ சாமானியர்களின் இறுதி நம்பிக்கை!

ஏறக்குறைய 7 ஆண்டுகளாக தொடர்ந்த ஒரு பாலியல் பலாத்கார வழக்கு…. விரைவு நீதிமன்றம் தண்டனை பிறப்பித்தும்…… மேல்முறையீட்டில், மாநில உச்ச நீதிமன்றம், இந்திய உயர்நீதிமன்றம் என நாடிய குற்றவாளிகளுக்கு….. இறுதியாக, இந்திய உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை வழங்கி, நிறைவேற்றியது, தூக்குக் கயிறு கொடூரர்களின் கழுத்தை நெறித்தது…. என்ன வழக்கு?…

குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் – சவால்களும் & தீர்வுகளும்

தமிழ்ப்பள்ளி ஆர்வலர், பொறியியலாளர் சுப்ரமணியன் இராகவன் - முன்னுரை  மலேசிய நாட்டில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1816-இல் பினாங்கு மாநிலத்தில் பினாங்கு ஃபிரி பள்ளியில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டாலும் 1850 முதல் தமிழ்ப்பள்ளிகள் மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. 1900-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோட்டத்…

மலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் – பகுதி 4

சிவா லெனின் | தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உண்டு. அதனால்தான், நூற்றாண்டுகள் கடந்தும் அது செழிப்பாக வாழ்கிறது. அத்தகைய தொடர்ச்சியினை முன்னெடுத்தவர்களில் நம் நாட்டின் தமிழறிஞர்களும் அந்தந்தக் காலக்கட்டத்தில் தங்களின் பெரும் பங்கை ஆற்றியுள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை. அந்த வரிசையில் வாழ்ந்தவர்கள் பலரை…

கொரோனா வைராஸால் பிரபலமான தப்லிக் ஜமாத் – வரலாறும் பின்னணியும்

பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் இந்திய முஸ்லிம் மக்களுக்கு தங்களின் அரசியல் மற்றும் மத அடையாளம் ஒடுக்கப்படுவதாக ஒரு பலத்த கருத்து இருந்தது. முஸ்லிம்கள் தங்களின் அரசியல் நலனுக்காக 1906ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கை தொடங்கினர். மேலும் இரண்டு முஸ்லிம் அமைப்புகளும் தொடங்கப்பட்டன. முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம்…

மலேசிய மண்ணில் தமிழுக்காக வாழ்ந்த அறிஞர்கள் – பகுதி 3

சிவா லெனின் | நம் நாட்டில் தமிழுக்காக தம்மை ஈகம் செய்தத் தமிழறிஞர்களின் எண்ணிக்கை ஒரு வட்டத்திற்குள் வரையறுத்திடலாகாது. தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை மொழிக்காகவும் இனத்திற்காகவும் பாடாற்றியத் தமிழறிஞர்களில் தமிழ்க்குயிலார் எனப் போற்றப்படும் ஐயா கா.கலியபெருமாளும் இறையருட்கவிஞர் எனப் புகழப்படும் ஐயா சீனி நைனா முகம்மதுவும் தனித்துவமானவர்கள்.…

ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத் சிங்!

சிவா லெனின் | இந்திய விடுதலை வரலாற்றினைப் புரட்சியாளன் ‘பகத் சிங்’-ஐ ஒதுக்கி விட்டு பதிவு செய்திட முடியாது. நாட்டின் விடுதலைக்காகப் போராடி, தனது 24-வது வயதில் தூக்கு மேடையை வீரத்தோடு முத்தமிட்ட மாவீரன்தான் பகத் சிங். மார்ச் 23, இன்று பகத் சிங்கின் நினைவு நாள். இந்தியாவின் பஞ்சாப்…

தமிழுக்காக ஈகம் செய்தத் தமிழறிஞர்கள் – பாகம் 2

சிவாலெனின் | மலேசிய மண்ணில் தமிழும் தமிழர் மரபும் தனித்துவத்தோடு இயங்கிக் கொண்டிருக்க பலர் பெரும் பங்காற்றியுள்ளனர், அவர்களில் சிலர் தங்களின் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்தவர்கள். தங்களது ஒவ்வொரு நகர்விலும் சிந்தனையிலும் தமிழின் வளர்ச்சியையும் தமிழினத்தின் வாழ்வியல் மேம்பாட்டையும் தமிழர் மரபையும் பேணி காத்த தமிழறிஞர்களில்,…

மலேசிய மண்ணில் தனித்தமிழை உயிர்ப்பித்த அறிஞர்கள்! – பாகம் 1

சிவாலெனின் | தமிழுக்குத் தொண்டு செய்வோர் இம்மண்ணில் மறைவதில்லை. அவர்கள் இல்லாவிட்டாலும் அவர்களின் தமிழ்ப்பணியை அவர்கள் வழியில் தோன்றிய தமிழுணர்வாளர்கள் தனித்துவமாக முன்னெடுப்பார்கள் என்பது இயல்பு. தமிழுக்கும் தமிழினத்திற்கும் பங்காற்றியவர்கள் பலர் இம்மண்ணில் வாழ்ந்து மறைந்துள்ளனர். அவர்களில் தனித்தமிழ் பற்றாளர்களாகவும் மொழி மற்றும் இனத்தின் உணர்வாளர்களாகவும் உயிர்ப்பித்தவர்களில் பாவலர் ச.சி.குறிஞ்சிக்குமரனாரும்…

கோவிட்-19: மருத்துவர்களின் சேவை அளப்பரியது!

இராகவன் கருப்பையா - அனைத்துலக ரீதியில் மிக அதிக அளவில் தற்போது உச்சரிக்கப்படும் ஒரு சொல்லென்றால் அது 'கொரோனா'. உலகம் முழுவதும் 8,000திற்கும் மேற்பட்டோரை பலிகொண்டுள்ள கொரோனா அல்லது கோவிட்-19 எனும் இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்த போதிலும் அந்த தொற்றுநோய் தொடர்ந்து சீரழிவுகளை ஏற்படுத்தாமல்…

ஜீவி காத்தையா – இறுதி மூச்சுவரை ஒரு தொழிற்சங்கவாதியாகவே வாழ்ந்தவர்!…

ஒரு தீவிரமான பேச்சாளர், தொழிலாளர் வர்க்கத்தின் உண்மையான பாதுகாவலர், உணர்வுமிக்க ஒரு தொழிற்சங்கவாதி. முதலாளிகளிடம் – மாபா (MAPA) - தனது கருத்தைத் தெரிவிக்க ஒரு முறை அவர் மேசை மீது நின்றார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது, இந்த மனிதரைப் பற்றிய எனது முதல் அறிமுகம் இதுதான். நான்…

ஜீவி காத்தையா காலமானார் – நாடு ஒரு வர்க்க போரட்டவாதியை…

அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூகச் செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியாக மலேசியத் தொழிலாளர்களின் மனங்களில் வீற்றிருந்த ஜீவி காத்தையா தனது 82 ஆவது அகவையில் நேற்று காலமானார். செம்பருத்தி.காம் மற்றும் மலேசியகிணி.காம் இணையப் பத்திரிக்கைகளின் தமிழ் பிரிவு ஆசிரியராகக் கடந்த 15 வருடங்களாகப் பணியாற்றிய…

இத்தாலியிலிருந்து ஒரு மரண ஓலம்! கடந்த 24 மணி நேரத்தில்…

இத்தாலியில் கடந்த ஞாயிறு வரையில் 1,809 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேளையில் 1,809 நபர்கள் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 369 நபர்கள் பலியானதாக தி ஸ்ரேட் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிலை குறித்து கிடைத்த ஒரு மடல் கவனத்தை ஈர்த்ததால்…

கூட்டணியில் புகைச்சல் – முஹிடின் அரசு நீடிக்குமா? ~இராகவன் கருப்பையா

பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்து இன்னும் 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள புகைச்சல் அரசாங்கத்தின் நிலைத்தன்மையைp பாதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்கு முன், 60 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து ஆட்சி பீடத்தில் இருந்த அம்னோ இதரப்…

ஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து! ~ இராகவன் கருப்பையா

இந்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருப்பதற்கும் பல்வேறு கோணங்களில் இருந்தும் பலவகையான அச்சுறுத்தல்கள் அன்றாடம் முளைத்த வண்ணமாக இருக்கிறது. இவ்வேளையில், அந்தச் சூழ்நிலைக்கு நாமே வழிவகுத்துவிடுவோம் போல் தெரிகிறது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் தமிழ்ப்பிரிவு மாணவர்களின் பதிவு குறைவாக உள்ளதால் கூடிய விரைவில் தமிழ் ஆசிரியர்களுக்கானப் பற்றாக்குறையை நாம்…

கோவிட் -19 ஆதிக்கம்: இனவாதம், கொள்கை மற்றும் அரசியல்! ~…

தாதியர், மருத்துவர்கள், அறிவியல்கூட பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள், நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இணைத்துகொண்ட அனைத்து மக்களுக்கும் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) நன்றி கூற விரும்புகிறது. உங்கள் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் விடாமுயற்சி பாராட்டுதலுக்கு…

ஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து

இராகவன் கருப்பையா -  இந்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ் பள்ளிகள் நிலைத்திருப்பதற்கும் பல்வேறு கோணங்களில் இருந்தும் பலவகையான அச்சுறுத்தல்கள் அன்றாடம் முளைத்த வண்ணமாக இருக்கும் இவ்வேளையில் அந்தச் சூழ்நிலைக்கு நாமே வழிவகுத்துவிடுவோம் போல் தெரிகிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் தமிழ்பிரிவு மாணவர்களின் பதிவு குறைவாக உள்ளதால் கூடிய…

முஹிடினின் அமைச்சரவை அவரைக் காக்குமா அல்லது வீழ்த்துமா?

இராகவன் கருப்பையா - நாட்டின் 8ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்னும் தமது அமைச்சரவையை அறிவிக்காதது மக்களிடையே பலதரப்பட்ட ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது. தேசிய கூட்டணி (Perikatan Nasional) என்ற இவரின் இந்த புதிய ஒருங்கிணைப்பில் தேசிய முன்னணி, பாஸ், பிளவுபட்ட பிகேஆர்…

பெண்ணுரிமை – உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராகவும் ஓங்கி…

பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்களுக்குத் துளியும் சாத்தியமில்லை. சமூகத்தில் பெண்களின் நிலையை வைத்தே சமூக முன்னேற்றத்தை நம்மால் அளவிட முடியும் என்கிறார் தொழிலாளர் வர்க்கத்தின் தோழன் காரல் மார்க்சு. ஒரு சமூகத்தில் அல்லது ஒரு நாட்டில் பெண்கள் தங்களுக்கான உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழ்கிறார்கள் என்றால், அச்சமூகமும் நாடும்…

புதிய அரசாங்கத்தில் நமது நிலை என்ன? – இராகவன் கருப்பையா

அரசியலில் நிரந்தரமான நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை என்ற கூற்றுக்குக் கடந்த ஒரு வாரக் காலமாக நாட்டில் நடந்தேறிய அரசியல் நாடகத்தைத் தவிர வேறு எதுவுமே சிறந்த உதாரணமாக இருக்க முடியாது. திடீர்த் திருப்பம், ஆச்சரியம், மர்மம், அச்சம், ஆவல், வெறுப்பு, சோகம், கோபம், மகிழ்ச்சி, அதிர்ச்சி,…

மகாதிர் மலேசியாவின் சகாப்தம்!   ~இராகவன் கருப்பையா

மலேசிய அரசியல் அரங்கில் துன் டாக்டர் மகாதிர் ஈடு இணையற்ற ஒரு சகாப்தம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நாட்டின் நீண்டகால பிரதமரும் அவரே; நாட்டின் குறுகியகால பிரதமரும் அவரே. அநேகமாக 3-வது தடவையாக நாட்டின் பிரதமராவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளவரும் அவரே. கடந்த 1981-ம் ஆண்டிலிருந்து 22…