வடக்கு, கிழக்கு இன்று முற்றாக முடங்கும்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இன்றைய ஹர்த்தால்…

10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகாப்பு…

பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் உள்ளிட்ட இரண்டு இலட்சம் பாதுகாப்பு படையினர் இருக்கின்றனர். இவ்வளவு தொகை பாதுகாப்புப் படையினரின் தேவை எங்கிருந்து வந்தது என்று ஈபிஆர்எல்எப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். இது ஜனநாயக விரோத செயல்…

தெருக்களில் இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் பதில் கூறாமல் இருப்பதை ஏற்க…

தெருக்களிலும், வெயிலிலும் இருக்கும் மக்களுக்கு பதில் கூறாமல் அரசாங்கம் இருப்பதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நூளை மறுதினம் (27) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு எதிராக போராடிவரும் தாய்மார்கள் வடகிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு…

லண்டன் மீதான மோகம்! முகவரை நம்பி உயிரை பறிகொடுத்த ஈழத்து…

சட்ட விரோதமான முறையில் லண்டன் செல்ல முற்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈரான் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் செம்மலை மற்றும் உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். லண்டனில் தொழில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூர் முகவர் ஒருவரின் ஊடாக குறித்த இருவரும் சென்றுள்ளனர்.…

மக்கள் அணியை உருவாக்க தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்: விக்னேஸ்வரன்

மக்கள் அணியொன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவையின் கட்டமைப்பினைப் பலப்படுத்தவதற்கு அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போதே, இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் பேரவை…

‘முருகா! நீயாவது எமக்கு நீதியை பெற்றுத்தா’ : காணாமல் ஆக்கப்பட்டோரின்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமானது இரண்டு மாதத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று தேங்காய் உடைத்து அழுது புலம்பி இறைவனிடம் நீதி கேட்டுள்ளனர். தங்களது உறவினர்கள் தொடர்பில் பதில் அளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை…

படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட கூடாது! கிளிநொச்சியில் பாரிய…

வடக்கில் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்க வேண்டாம் என வலியுறுத்தி கிளிநொச்சியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் இன்று இரண்டாம் கட்ட…

அடக்கு முறைகளுக்குள் தமிழர்கள்: டேவிட் கமரூனை பின்பற்றுவாரா மோடி

வடக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டாயம் விஜயம் மேற்கொள்ள வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ளநாட்டு யுத்தம் நிறைவடைந்த போதிலும் தமிழர்களுக்கு அவர்களின் சொந்த நிலங்கள் தற்போது வரையில் கிடைக்கப் பெறவில்லை. எனவே,இந்த பிரச்சினைகளில் இந்திய…

இலங்கை கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள்! உலக நாடுகள் பலத்த போட்டி

இலங்கையின் கடல் எல்லையில் ஜப்பானின் தலையீடுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் மேற்கொண்ட ஜப்பான் விஜயத்தின் பின்னர் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், ஜப்பான் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளில் பெரும்பாலானவை, இலங்கை கடற்கரைக்கு…

அரசிற்கு நெருக்கடி கொடுத்தால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் பதவிக்கு…

இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு சஞ்சலம் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 62ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை…

தடுமாறும் தமிழ் தலைமைகளால் தளர்வடைகின்றனரா தமிழர்கள்? புறக்கணித்த கூட்டமைப்பினர்

தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன? எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் இடம்பெற்ற கருத்துப் பகிர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த அரசியல் தலைவர்கள் சிலர் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் தேசிய வாதத்தை நிலைநிறுத்த வேண்டிய தார்மீக கடமையில் இருந்து தலைமைகள் நிலை தவறுவதாக எழும்…

யாழில் புதிய அரசமைப்பு செயலமர்வு!

புதிய அரசமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு, யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது எனப் புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். "நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்…

சிங்கள நாடாக மாறாமல் இருக்கவே வடக்கு, கிழக்கை இணைக்க கோருகிறோம்!…

முழு சிங்கள நாடாக மாற்ற முயற்சிப்பதனால் தான் வடகிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் துருக்கி நாட்டின் இலங்கைகான தூதுவர் துங்கா ஒஸ்காவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் இன்று முதலமைச்சரின் வாசஸ்தலத்தில்…

பிரமிக்க வைக்கும் விடுதலைப் புலிகளின் இயற்கை வளங்கள்! அழிக்கும் தீவிர…

கடந்த மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்டு வந்த காடுகளை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் வகையில் விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட தேக்கு மர காட்டினை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வடபகுதி எங்கும் விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை வளத்திட்டங்கள் தற்போது…

22 வருடங்களுக்கு பின் யாழில் இருந்து அகற்றப்படும் இராணுவ முகாம்?

1995 ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள இரண்டு இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் குறித்த முகாம்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அவ்விடத்தில் இருந்து அகற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1995 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளிடம் இருந்து யாழ்ப்பாணத்தினை இராணுவத்தினர்…

மே 18 அன்றும் சிங்கள ஆமிக்கு அடி கொடுத்த பிரிகேடியர்…

வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. பெரிய மரம் ஒன்று நின்றிருந்தால். அதனை நாம் பார்த்து வியப்பது உண்டு. ஆனால் அதனை தாங்கிப் பிடித்திருக்கும் வேர் எமது கண்ணுக்கு புலப்படுவதே இல்லை. அப்படி தான் தளபடி ஜெயம். மக்களை அசத்தும் மேடை பேச்சு கிடையாது, மாயாஜால…

தொடரும் போராட்டத்தினால் நெருக்கடியில் அரசாங்கம்!

காணாமல் போனோர் குறித்த விடயத்திற்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் 41 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்ற காணாமல் போனோரை சந்தித்த போது அவர் இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்... அரசாங்கத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையிலேயே காணாமல்…

மலையக மக்களை சந்திக்கும் இந்திய பிரதமர்!

ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது பெருந்தோட்டப் பகுதி மக்களையும், இந்தியப் பிரதமர் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் பழனி திராம்பரம்…

மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறந்து வைப்பு

வன்னியின் கடைசி மன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று(20) பகல் 10.00 மணிக்கு முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் கோரிக்கைக்கு அமைய, வடமாகாண…

த.தே.கூட்டமைப்பே எமது போராட்டத்திற்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும்

தனித்துவக் கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எமது போராட்டத்திற்கான வெற்றியைப் பெற்றுத் தருவதோடு அதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 59ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே…

நாங்கள் நடுத் தெருவில்! மைத்திரி விகாரையில்

நாங்கள் மாதக்கணக்கில் இப்படித்தெருவில் இருக்கும் போது ஜனாதிபதி பல ஆலயங்களுக்கும் விகாரைகளுக்கும் சென்று ஆசி வேண்டுவது எந்த பலனையும் அழிக்காது என கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான அமைப்பின் இணைப்பாளர் ஆனந்தநடராஜா லீலாவதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும், இதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்நிலையில்…

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இரா.சம்பந்தர்,மாவை.சேனாதிராசா ஆகியோரின் உரைகளிலும் நடவடிக்கைகளிலும் ஒரு மாற்றம் தெரிவதைக் காணமுடிகிறது. புங்குடுதீவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய மாவை.சேனாதிராசா அவர்கள் அரசாங்கம் ஏமாற்றினால் சர்வதேச…

இலங்கைக்குள் பிரவேசித்துள்ள விடுதலைப் புலி புலனாய்வாளர்கள்! தேடுதல் வேட்டை தீவிரம்

இலங்கைக்குள் பிரவேசித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட புலனாய்வாளர்களை தேடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரமளவில் விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியை சேர்ந்த சிரேஷ்ட புலனாய்வாளர்கள் சிலர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தற்போது தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர்…