இஸ்லாமியராக மாறினார் யுவன் சங்கர் ராஜா

yuvanஏ.ஆர்.ரஹ்மானை போன்று பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜா, இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரே, ஆம் நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

‘அரவிந்தன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். சமீபத்தில் அவர் இசையமைப்பில் வெளிவந்த ‘பிரியாணி’ படம் தான் அவரது 100வது படமாகும். அப்பாவை போன்று இவரும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில் முதல் மனைவியுடன் விவாகரத்து, பிறகு அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் மனக்கசப்பு என்று ஏகப்பட்ட மனக்குழப்பத்தில் இருந்தார் யுவன். இதற்கிடையே அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக ஏற்கனவே தவகல்கள் வெளியான நிலையில் இப்போது அவரே தான் மதம் மாறியதை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் , கூறியிருப்பதாவது: நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை . எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! ( இறைவனுக்கு நன்றி !) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார்.

யுவன் மதம் மாறிய பின்னணி…

யுவன் மதம் மாறிய பின்னணி பற்றி அவரது நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது நமக்கு கிடைத்த சில தகவல்கள் இதோ…

கசந்த இல்லற வாழ்வு

சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் இல்லற வாழ்வு யுவனுக்கு சோகமாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். 2005ம் ஆண்டு தனது நீண்டகால தோழியான சுஜாயா என்ற பெண்ணை மணந்து கொண்டார் யுவன். ஆனால் இந்த வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் தான் நீடித்தது. 2007ம் ஆண்டே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு 2011ம் ஆண்டு ஷில்பா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களது திருமண வாழ்வு நன்றாக சென்று கொண்டு இருந்தது. இப்போது அந்த திருமண உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பெண் இப்போது தனது அம்மாவுடன் லண்டன் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே யுவனின் தாயாரும் மரணம் அடைய மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் சினிமாவில் கூட முன்பு போல் அவரால் சரியாக பாடல்களை கூட கொடுக்க முடியாமல் போனது.

மூன்றாவது திருமணத்திற்காக மதம் மாற்றம்?

இந்தநிலையில் யுவன், சமீபத்தில் சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் எதிர்ப்பு!

யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமக்கும், நமது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்துள்ளார்.

வீட்டை விட்டு இளையராஜா வெளியேற்றம்?

எவ்வளவு சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் ஒருகட்டத்தில் இளையராஜா வெறுப்படைந்து தி.நகரில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சிலகாலம் தனது மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பிறகு யுவன் வந்து பேச, தான் மட்டும் வரமாட்டேன் என்று சொல்லி கார்த்திக்கையும் தன்னோடு அழைத்து வந்து பிறகு எல்லோரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இதேப்போன்று இளையராஜா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் கொழு வைத்து பிரபல பின்னணி பாடகர்களை எல்லாம் அழைத்து தன் வீட்டில் பாட வைப்பார். ஆனால் சென்றாண்டு கொழு நடத்த கூடாது என்று யுவன் தெரிவித்துள்ளார். பின்பு கொழுவை தவிர்க்கும் நோக்கோடு அவசரமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இளையராஜா போனில் சத்தம் போட பிறகு அவசரஅவசரமாக மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

குரான் பரிசளித்த அமீர்?

யுவன் மதம் மாறிய பின்னர், அவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பிரபல இயக்குநர் அமீர் பரிசளித்துள்ளதாகவும், தற்போது அந்த குரானை தான் யுவன் தினமும் படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. யுவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகவே இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறாராம். அவர்கள் மத வழக்கப்படி தினமும் 5 வேளை தொழுகை செய்துவதையும் கடைபிடித்து வருகிறாராம்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • amaithi maarkam wrote on 10 February, 2014, 14:44

  அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) எல்லா புகழும் இறைவனுக்கு.  இறைவன் இவர் பாவங்களை மன்னித்து, ஈமான் (நம்பிக்கை)யையும் இறை அச்சத்தையும் இவருக்கு அதிக படுத்த இறைவன் இடத்தில் பிரார்த்திப்போம்.  

 • subra wrote on 10 February, 2014, 15:07

  மனத்தில் வேண்டும் தெளிவு, மதத்தில் இல்லை .
  தந்தையின் ஜனனி ஜனனி பாடல் தெய்வீகம் நிறைந்ததே ..!

 • romeo tango wrote on 10 February, 2014, 15:23

  ஹா ஹா ஹா
  மதம் மாறிய உடனேயே இவனைப்போன்றவன்கள் திடீர் என்று மிகவும் சமய வழி ஆசாமிகளாகிவிடுகின்றனர். இவெனெல்லாம் திருக்குறள் படித்திருந்தால் புரியும் . இந்து சமயத்தில் எவ்வளவோ சாங்கியம் சம்பரதாயம் நான் ஏற்றுக்கொள்ளவில்லை- இருந்தும் என்றுமே சமயம் மாற மாட்டேன். எனக்கு யாரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல விட மாட்டேன் . இவனைப்போன்ற ஜென்மங்கள் சுய மரியாதை என்பதையே என்ன என்று தெரியாதவன்கள்–அத்துடன் அந்த “சிப்பிக்காக” மதம் மாறும் பெரிய அறிவாளிகள். மனதிடம் இல்லாத பிறவிகள்.

 • ipoh tamilan wrote on 10 February, 2014, 15:27

  இச்செய்தி உண்மை என்றால் …..
  விரைவில் இவருக்கு…….
  மலேசிய குடியுரிமைக் 
  கிடைக்குமா ???

 • tamil biththan wrote on 10 February, 2014, 15:59

  மதத்திற்கும் விவரத்திற்கும் என்ன நைனா ,சம்பந்தம் மதம் மாறினால் உன் அப்பன் அப்துல்லாஹ்வாக மாறவேண்டும் ,
  நல்ல காலம் உங்க அப்பன் இந்த பாடலை பாடவில்லை
  பறவையை கண்டான் விமானம் படைத்தான் ,எதனை கண்டான் மதங்களை படைத்தான் , பார்த்தியா நைனா மதம்
  மனிதனை பிரிக்கும் ,மனித நேயம் மனிதனை இணைக்கும் ,உன் அப்பனையும் உன்னையும் மதம் பிரித்து பிரித்து வித்தே ,அந்த முஸ்லிம் பெண்ணை நீ கலியாணம் செய்ய
  நினைத்தால் ஏன் அவளை இந்து மதத்தில் சேரவேண்டியது
  தானே ,முடியாது என்று முஸ்லிம்கள் கூறுவார்கள் ,அப்படி
  யானால் இந்துவான உன் அப்பன் இளைய ராஜா எப்படி சம்மதிப்பார் , என்னடா யுவன் ஏன் இந்து பெண்கள் நல்ல பெண்கள் இல்லையா , உன் தாயும் இந்திய பெண் தானே ,
  ஏதோ இரண்டு பெண்கள் உனக்கு மோசம் செய்ததால்
  ஒட்டு மொத்த இந்து பெண்களை நீ புற கணிக்கலாமா ,
  ஒட்டுமொத்த இந்திய பெண்களுக்கு சூடு சொரணை இருந்தா யுவன் படலையும் ,இசையையும் புறகணிக்க
  வேண்டும் செய்வார்களா நமது தமிழ் பெண்கள் ,நைனா

 • amaithi maarkam wrote on 10 February, 2014, 16:30

  romeo  tango  திருக்குறளில் கூட இறைவன் ஒருவன் என்று தெளிவாக உள்ளது. 

 • isai wrote on 10 February, 2014, 16:49

  இசை கடவுள் என்று அழைக்கப்படும் இளையராஜாவின் மகன் யுவன் இறைவன் உருவ மற்றவன் என்று எற்றுக் கொண்டு விட்டார். உங்கள் செய்தியில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் நம்ப தகுந்த தகவலாக தெரியவில்லை, குறிப்பாக திருமணம் மற்றும் அமீர் பற்றிய தகவல்கள். இந்த தகவல்கள் எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை. குறிப்பாக இந்திய ஊடகங்களில்.        

 • tamil muslim wrote on 10 February, 2014, 17:27

  தினமலர்(*…)  செய்தியை அப்படியே அச்சு பிசகாமல் கோப்பி அடித்ததற்கு மிக்க நன்றி.  

 • என்ன எழவோ wrote on 10 February, 2014, 18:49

  உன்னை நீ மாத்திக்காத வரைக்கும் , நீ எத்தனை மதம் மாறினாலும் என்றுமே ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியாது…” நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை . எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர்.” உன் அப்பன் ஒரு தாய் மூகாம்பிகை பக்தன். உன் அப்பாவுடைய இசையை கேட்டாலே மனதிற்கு பெரிய நிம்மதி கிடக்கும். அதவுட்டுபுட்டு மூன்றாவது பொம்பளைக்கு ஆசைபட்டு அடுத்த மதம் மாறி எதுக்குடா தமிழ் மதத்த கேவலபடுத்துற ??? 

 • jan wrote on 10 February, 2014, 20:04

  மலேசியா குடிஉரிமை என்ன dato பட்டம் கிடைக்கும்  

 • CHAKARAVARTHY wrote on 10 February, 2014, 20:06

  எல்லாப் புகழும் இறைவனுக்கே!  என்றால் இனிமேலாவது வாழ்க்கை சுகமாக இருக்கும். எல்லாப் புகழும் எனக்கே என்றால் தலை கனத்துக் கொண்டே தான் இருக்கும். வாழ்த்துக்கள்!

 • vishnu wrote on 10 February, 2014, 22:15

  இதில் அப்படி என்ன விசேசம் இருக்கு ???? இவனுக்கு இப்போதே 3 பொண்டாடி .. ஒரு பொண்டடியும் வச்சு வாழ துப்பு இல்லை ….புதுசா ஒரு மதம் இது எத்தனை நாள் ????மனத்தில் வேண்டும் தெளிவு, மதத்தில் இல்லை தெளிவு……இந்தநிலையில் யுவன், சமீபத்தில் (சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.) ஒரு பெண்ணுக்க ஒரு மதத்தை மாத்துகிறவன் மதி இழந்த முட்டாள்…..

 • தமிழ்ப் பித்தன் wrote on 10 February, 2014, 22:19

  சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரியாத இப்படிப்பட்ட அறிவாளில் எந்த மதத்தை தழுவினாலும் நிம்மதியாக வாழ முடியாது. பணம் பத்தும் செய்யும். ஆனால் இப்படிபட்டவர்கள் பதினொன்றும் செய்வார்கள். அடுத்து எந்த மதம்? இந்துக்கள் இப்படிப்பட்டவர்கள் இசை அமைக்கும் பாடல்களுக்கு ஆதரவு தரக்கூடாது.

 • pattakatti bairavan wrote on 10 February, 2014, 22:20

  சுப்ரா அருமையாக சொன்னிர்கள்.

 • தமிழர் நந்தா wrote on 10 February, 2014, 23:29

  இந்த பெண்ணையும் பிடிக்க வில்லையென்றால் ? கிறிஸ்துவ பெண்ணை மனம் முடித்து, மீண்டும் மதம் மாறிவிடுவாரா ?

 • ஆசாமி wrote on 10 February, 2014, 23:43

  அப்படி பார்த்தால் AR RAHMAN இசையும் புறக்கணிக்கணும்.

 • tamilanda wrote on 11 February, 2014, 0:05

  இளையராஜாவும் ரஜினியும் கூட  இஸ்லாத்திற்கு மாறினால்   ஆச்சிரியபடுவதற்க்கு ஓன்று மில்லை. அண்மைய தகவல் படி தமிழகத்தை சேர்ந்த  ஒரு முக்கிய அரசியல் வாதி  தனது ஆதரவாளர்களுடன் இஸ்லாத்தில் இணைய இருப்பதாக தகவல் கசிந்து கொண்டு இருக்கிறது, பொருத்து இருந்து பாப்போம்.             கோபபடுவதை நிறுத்திவிட்டு, மாற்று மதத்தினர் ஏன் கூட்டம் கூட்டமாக அதுவும் மாற்று மதத்தினர் அதிகம் வாழும் நாட்டில் ஏன் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்.   

 • nermai wrote on 11 February, 2014, 0:33

  சுப்ரமணிய சுவாமி மகள் திருமணம் செய்தது ஒரு முஸ்லிமை, சிவசேனா பால்தாக்கரே பேத்தி திருமணம் செய்தது ஒரு முஸ்லிமை..பார்பனன் மற்றும் இஸ்லாத்திற்கு மாறலாம், மத்த ஜாதிக்காரன் மாறினால், இந்த பார்பனன் மாரினவர்களை அசிங்க படுத்துவார்கள்.

 • ALAI OSAI wrote on 11 February, 2014, 7:20

  இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பிராமண பார் பானர்,அவரது வாரிசுகள்,எத்தனை மதம் இருக்குதோ அத்தனையிலும் ஆயிக்கியம்!

 • Theni wrote on 11 February, 2014, 9:18

  MOHAN Mohan, யுவன் சங்கர் மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த வந்தபொழுது புதுப் பெண்ணை பொருத்தம் பார்க்க அந்த மாமா ஏற்பாடு செய்ததினால் இந்த அப்பா வரவில்லை போலும். நாடகம் நன்றாகவே அரங்கேற்றம் ஆயிற்று. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியைப் பார்க்கப் போன மலேசிய இந்தியர்களுக்கு நாமம். வாழ்க இளையராஜா!.

 • nageswaran wrote on 11 February, 2014, 10:45

  எல்லாதிற்கும் நன்றி ஒம் ஸ்ரீ கன்னிச்ரியெ நமஹ என்றல் என்ன அர்த்தம்? (அர்தம் தெரிந்தவர்கள் மட்டும் பதில் சொல்லவவும்.

 • muthu wrote on 11 February, 2014, 10:50

  எல்லாம் மதமும் நல்ல மதம் தான் .மனிதர்கள் தன தாயின் வயிற்றில் இறுக்கும் போதே மதத்தை பின்பற்றுகிறார்கள் ..சாகும் வரையிலும் அதைத்தான் பின்பற்றவேண்டும். உங்களுக்கு நடந்த 2 திருமண வாழ்க்கை தோல்விகண்டதட்கு மதம் காரணமா அல்லது நீங்கள் காரனமா.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் .ஒரு கணவனின் கடமை என்ன ? மனைவியின் கடமை என்ன ? அம்மா ,அப்பாவின் கடைமைதான் என்ன என்று உணருங்கள்,,,நீண்ட நாள் தோழியாக இருந்த ஒரு பெண்ணை மனம் முடித்து 2 ஆண்டில் விவாகரத்து, பிறகு மற்றொரு திருமணம் மருபடியும் விவாகரத்து .இப்பொழுது 3வது.இதிலும் பிரச்னை ஏற்பட்டால் 4வதாக கிறிஸ்துவ பணக்கார பெண்ணை தேடுவீர்களா .முதலில் உங்களை சரி படுத்துங்கள் மற்றவை தானாகவே சுகமாக அமையும்.இன்று நாம் ஒரு விஷ்யத்தை சரி ஞாயம் என்று நினைத்து ஒரு முடிவெடுக்கிறோம் ,ஆனால் ,அதே விஷயம் அடுத்த ஆண்டுகளில் தவறானவை என்று உணருகிறோம் . வாழ்க்கை என்பது கொஞ்சம் சந்தோசம்,துர்க்கம்,வேதனை,வலி, ஏமாற்றம் போன்ற அனுபவம் பெற்றுக்கொள்கிற ஓர் உன்னத பயணம் .

 • muthu wrote on 11 February, 2014, 11:00

  மனம் மாறினால் மாற்றம் கிடைக்காது ..உன் என்னத்தை மாற்று..மதம் உன்னை வலி நடத்தவில்லை ,,,,நீதான் உன்னை வழிநடத்துகிறாய்………உணரும்,,,,,,,,,,,.

 • thamizhan mlsaravanan wrote on 11 February, 2014, 12:10

  உலகத்தில் எவனாவது மதம் மாறினால் மலாயா காரனுக்கு சந்தோசம் aஉடனே  அவனை  மலைகரனகிவடுவான் அப்படின யுவன் இங்கே  சிடிசன் ஆகலாமே ..வோட்டே போடலாமே .முடிஞ்சா  உம்னொவில் சேர்ந்துஒரு எம்பி  ஆகலாமே .முதலில்  உமது  அப்பா அம்மா வைமதிக்க கற்றுக்கொள் .ஏன்  நீ ஹிந்துவாக  இருந்து சமாளிக்க முடியாதா .ஹிந்து  மதம்  தத்துவம் நிறைத்த து .விஞ்யானபடி  நிருபணம்  ஆனது .தாய் தந்தை யை  மதிப்பவன் இட்தை செய்யமாட்டான் . 

 • Theni wrote on 11 February, 2014, 12:22

  குடும்ப வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு காதலில் முறிவு ஏற்பட்டு மதம் மாறினேன் என்பது முட்டாள்தனம். ஒரு மதத்தைப் பின் பற்றுபவர் அம்மதத்தின் இறை நெறிகளை அறிந்து அதன் வழி நிற்பின் அது அவரவரின் சொந்த விருப்பு வெறுப்பு. இதில் நாம் தலையிட நமக்கு உரிமை கொடுத்தது யார்? ஒருவருக்கு பொய்யானா தகவல்களை கொடுத்து, பிற மதத்தைப் புறஞ் சொல்லி மதம் மாற்றினால் அது பொதுப் பிரச்சனை. அப்பொழுது நாம் களத்தில் இறங்கலாம். யுவன் சங்கரே சாதியத்தில் அடிபட்டு அதன் வெறுப்பில் மதம் மாறியிருந்தால் அதற்கு அவர் பொறுப்பல்ல. இதற்கு இந்த பாழாய்ப்போன தமிழர்களின் சமூகவியல் சாதியக் கட்டமைப்பே காரணம். இப்ப படித்தவன்/படிக்காதவன் எவனாவது நான் உயர் குலத்தோர், ஆகையால் நான் சாதியத்தோடுதான் இருப்பேன் என்று வழக்காடினால் அந்த சாதியத்தோடு நீர் ஒழிந்து போ. மனிதனாக வாழ விரும்பும் தமிழர்களை அழிக்க விரும்பாதே. இல்லையேல், அவ்வாறு வழக்காடும் ஒவ்வொருவரும் தமிழர் துரோகி என்று முத்திரை குத்த வேண்டிய கட்டாயத்துக்கு இட்டுச் செல்லாதீர்.

 • CHAKARAVARTHY wrote on 11 February, 2014, 13:28

  தமிழ் நாட்டுத் தமிழனைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பெரியார் தாசன் பல தடவை மதம் மாறியவர். இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருந்தால் புதிதாக ஏதாவது ஒரு மதம் மாறியிருப்பார்! மதம் மாறுவதில் அங்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.  யுவனின் நிலை வேறு. அவர்  மனம் மாற வேண்டும். அது வரை பொறுமை தேவை!

 • sachin wrote on 11 February, 2014, 14:10

  இந்த விவகாரம் முழுக்க முழுக்க யுவன் சங்கரோட பெர்சனல் விஷயம். என்ன கேவலமா கமெண்ட் அடிக்கிறிங்க?.. பொண்ணுக்காக மதம் மாரிட்ட்டர்னு எப்படி நம்புரிங்க? நானே நெறைய மதம் மாரினவங்கல்ல்ட பேசி இருக்கிறேன் ….. நிறைய வதந்திதான் இருக்கிறது மேலே உள்ள கமெண்ட் போல..
  அய்யா தயவு செய்து பாவம் அவர் மனசு புண் படுகிற மாதிரி எதுவும் சொல்லாதிங்க.  இந்து மதம் அதைதான் சொல்லுகிறது…

 • romeo tango wrote on 11 February, 2014, 14:14

  amaithi markam – நீங்கள் என்ன சொல்கின்றனர் ? நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானா? திருக்குறளில் இல்லாதது வேறு எதிலும் கிடையாது. திருக்குறள் வேத நூல் மதத்திற்கு அப்பாற்பட்டது . நீங்கள் திருக்குறளை போற்றி இருக்க வேண்டும் –ஏனெனில் நீங்கள் தமிழன். திருக்குறளில் இறைவனை பற்றி திருவள்ளுவர் கூறினார்- ஆனால் எந்த இறைவனின் பெயரிலும் அட்டூழியம் செய்வதற்கில்லை. இந்து சமயத்தில் உள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதையும் நீங்கள் ஏற்கதேவை இல்லை – திருக்குறளையே நமது வாழ்க்கைக்கு இறை வழிக்கு போதும் . நான் இந்து வாக பிறந்தாலும் நான் என்றுமே பகுத்தறிவுக்கு ஒவ்வாததை ஏற்கமாட்டேன் — என் நாம் இஸ்லாத்தை ஏற்கவேண்டும்? ஒரு பெண்ணுக்காக மதம் மாறுவது முற்றிலும் மட்ட ரகம். சுய மரியாதை இருக்கவேண்டும். ஆரியன் நம்மை அடிமை யாக்கி மிகுந்த தாழ்ந்த நிலைக்கு தள்ளிவிட்டான்கள்- நாம் அதை எர்கத்தெவை இல்லை. நாம் தமிழராக திருக்குறளை அடிப்படையாக கொண்டு வாழ முடியும். அத்துடன் அவ்வையார் கூறிய எவ்வளவோ நாம் நம்மின் வாழ்வில் கடைபிடிக்க முடியும். இன்னும் எவ்வளவோ. மதம் மாறுவது அந்நாளில் ஜாதி தீண்டாமை காரணமாகத்தான் -அதிலும் முகலாயர்கள் இந்தியாவை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததினாலும் தேவையை முன்னிட்டு மதம் மாறினார்கள். இப்போது அது தேவை இல்லை.

 • cthevi wrote on 11 February, 2014, 15:54

  இந்து மத கொள்கை படி “ஒருவனுக்கு ஒருத்தி” இப்போ சங்கர் செந்திருகிர மதப்படி ஒருவர் நால்வர். இதை வைத்தே அவரின் வருங்கலாம் விக பிரமாதமாக இருக்கு. இருக்க வேண்டும் என வாழ்த்துவோம்! இப்படி கட்டுபாடான மதத்திலிருந்தே ‘கிழிக்க’ முடியாதவர்… அதிலே பொய் கிள்ளிக போறாராம். கிலிகட்டும். கிலிகட்டும். “சுப்ரா” வின் கருத்தை நானும் மனசார ஆதரிக்கிறேன்! 

 • கலை  wrote on 11 February, 2014, 17:11

  ஒருலட்சத்து எழுபது ஆயிரம் மக்கள் மூன்றுமாதத்தில் கொல்லபட்டார்களேஇந்து ஆன்தராகாரனுக்கு இந்து மலையாளிக்கு ஏன் உலக இந்துக்களுக்கு இரக்கம் வரவில்லை ???  
  ஒருத்தன் இஸ்லாமிய மதத்துக்கு மாறினத்துக்கு அடிச்சிகிறிர்கள்…
  சவ்கிட் தெருவை தமிழ் பெண் கூட்டி சுத்தம் செய்கிறார் ….. தமிழனுக்கு சொந்தமான  திரையரங்கில் அன்னியர் வேலை செய்கிறார் …  தெலுங்கர்கள் அவர்கள் சங்கம் மூலம் தன சமுகத்தில் யார்யாருக்கு என்ன தேவை என்று பதிவு செய்து வைத்துள்ளார்கள் .. தங்கள் இனம்சார்ந்தவர்கள் செய்யும் இடங்களில் வேலை பெற்றுகொடுகிறார்கள்… இதேபோன்று அரசாங்க வேலை கல்வி , அனைத்தும் … கிம்ம இந்திய முஸ்லிம் கட்சி இவர்களும் தன சார்ந்த சமுகத்துக்கு சிறப்பாக செய்கிறார்கள் … இவர்கள் எல்லோரும் பாராட்ட படவேண்டியவர்கள் … முட்டாள் தமிழன் தான் பெரியமனசுகார்ன் போல் நடந்துக்குவான் ,, தற்பெருமையும் பேசிக்குவான் .. சொந்த இனத்தின் வைற்றிலடிப்பான் … ஆளாளுக்கு தலைவனாவதட்கெ ஆளுக்கு இரண்டு சங்கம் வைப்பான் தன்னை தானே தலைவனேம்பான்… இனத்துக்கு சல்லிகாசு பிரஜொசனமில்லை … …. உலக தமிழன பாதுகாக்க போறாங்களாம் !!!!!!!!!!!!!!!!! நம் அருகிலுள்ள எத்தன தமிழனுக்கு உதவிருபானுன்க ???
   ஏழை இளைஞ்சர்களுக்கு கல்விகிடைக்க நல்ல வேலை கிடைக்க ஒரு சங்க தலைவன் குறைந்தது பத்துபெருக்காவது உதவுங்கள் இந்த தமிழ் சமுகம் வாழ்கையில் வளம்பெறும்…. 

 • panjali wrote on 11 February, 2014, 17:30

  ஒரு சுயநலக்காரன், சுயநலகரனாகவே இருப்பான் . எதையும் வெற்றி கொள்ள முடியாது.

 • papa wrote on 11 February, 2014, 17:33

  மத நேயம் மனித நேயத்தை சாப்பிட்டு கொண்டிருக்கிறது

 • papa wrote on 11 February, 2014, 17:41

  ஒரு சுய நலகாரன், சுய நலகாரனகவெ சிந்திப்பான். அவனால் எதையும் வெற்றி கொள்ளமுடியாது.

 • irfanulla wrote on 11 February, 2014, 18:01

  என்ன விளையாட்டு இது? ஒரு நாளைக்கு எத்தனை கட்டாய மதம் மாற்றம் நடக்கிறது இந்நாட்டில்? என் அவர்களை பற்றி யாரும் பேச வில்லை? அடிப்படை காரணம் நாம்; மற்றவர்கள் அல்ல,நம் பிள்ளைகளுக்கு அடிப்படை போதனையான திருக்குறளை சிறு வயதிலிருந்தே போதிக்க பட வேண்டும் இல்லையேல் அவர்களுக்கும் இந்த நிலைமைதான்.மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம்.

 • kinara Malaysia wrote on 11 February, 2014, 20:47

  யுவன் மாறிவிட்டார்.இது அவரது சொந்தப் பிரச்சனை.

  நம்மிடையே வீண் விவாதம் வேண்டாமே!

 • REYAS wrote on 11 February, 2014, 20:55

  ISLAM IS NOT A RELIGION IT IS WAY OF LIFE YUVAN KNOWS WHICH ONE IS THE CORRECT WAY IN WORLD SO HE EMBRACE ISLAM.OTHER RELIGION TELL GOD IS WOMENISER HE HAS MORE THEN ONE WIFE HE CON’T CONTROL HIS SEX FEELING LIKE HUMAN.ALL OTHER RELIGION IS FAKE

 • saminathan wrote on 12 February, 2014, 0:18

  எந்த  விதமான  காடியிலும்,கவனக்குறைவாக  பயணம்  செய்தால் டமார்தான்,,,,,,தம்பி ,இதுலையாவது நல்லபடியா  போ ,,,,இதுல  வேற மூணாவது  பெண் ,,,,,,,,,,,,,,,,2 கே  நிக்கல ,,,,,,,,,,,/////////

 • kalai wrote on 12 February, 2014, 10:09

  சாமிநாதன் 2 கே நிக்கல இதுல முன்றாவது நிக்காவா?
  செம்பருத்தி ஆசிரியர் இந்துமதத்தில் முழ்கி முக்குளித்துவிட்டார்போல்!!!! நம்ப கருத்தை வெட்டி குத்தி சேதாரபடுத்திவிட்டார்… ஆசிரியரல்லவா அப்படிதான் இருப்பார் ….
  இந்துமதம் என்றுசொல்கிற தமிழனுக்கு சைவ சமய மார்க்கமே சிறந்தது … இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வளமுடன் 

 • kalai wrote on 12 February, 2014, 10:13

  உலகத்தில் அமைதி இல்லாமல் அலைகிறவர்கள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் சுடான் லெவொனான் ,இஸ்லாம் நாடுகளுக்கு சென்றால் அமைதி கிடக்கும் !!!!!!

 • மனசாட்சி wrote on 12 February, 2014, 18:02

  பிரச்சனையை மனசில் வச்சுகிட்டு, மதம் மாறின .அப்பறம் வரா பிரச்சனைக்கு மறுபடியும் மதம் மாறுவர் போல .கலிஉலகம்…

 • romeo tango wrote on 12 February, 2014, 18:07

  reyas போன்ற வர்கள் இருக்கும் வரை இவ்வுலகில் அமைதி இருக்காது. பெண்ணுக்காக மதம் மாறிய எவனும் அறிவாளிகள் அல்ல. எவ்வழி களில் இஸ்லாத்தை பரப்பினார்கள்? நான் பழைய கதை பேச விரும்பவில்லை — ஏன் இப்போது யாவரும் ஒற்றுமையாக இருக்கக்கூடாது. இவன்கள் எல்லாம் P RAMLI யின் திரைப்படங்களை பார்த்தால் முன்னைய நிலை. 1980க்கு பிறகுதான் இவ்வளவு மோசமான நிலை.

 • sha hameed wrote on 12 February, 2014, 22:12

  1)அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,

  2)(முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது,

  3.உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். அல் குர் ஆன் ; 110

  அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை கற்பனை
  செய்து,அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர்.நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்கள்.அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும்,அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

  அல் குர் ஆன் 2;165

  உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை (அவன்) அளவற்ற அருளாளன்.நிகரற்ற அன்புடையோன்.

  அல் குர் ஆன் 2;163

 • kayee wrote on 13 February, 2014, 2:31

  அவர் ஏன் 4 திருமணம் செயறாங்க்கோ தெரியுமா இன பெருக்கம் மற்றும் முக்கியமாக பெண்ணுக்கு  அடிமை ஆகாமலிருக்க.வொற்றுமை அவர்களிடம் கட்கவேணும்.இப்போ ஒரு இஸ்லாம் ஹிந்து மதம் வந்தால் அவரை தன்ஜுங் ரம்புட்டான் அனுப்பி இருப்பார் இல்லே வுலகத்தில் காணாமல் போயிருப்பார்.புலம்பல் விரண்டா வாதம் இதுவே சிலர் வாழ்க்கை.திருக்குறளில் முதல் குரல் என் எழுது இறைவனிடம் தோன்றியது மற்றும் இறைவனை துதிகாதவர் தாயை மறந்த பிள்ளைகளுக்கு சமம்.வழி பிசகி சென்ற குலமே இறைவன் யிரை தூதர் காட்டிய வழியில் கூடி பயணம் செய்வோம்.நாம் நமக்கு நமது என்று பிடிவாதம் வேணும்.இப்படியே சுதந்திரம் பேசிட்டு இருந்தா பிள்ளைகள்கூட நம்மை மதிக்க மாட்டார்கள்.சில மதத்தில் 4திருமனம் அதையும் 123மனைவிகல் கட்டாயம் சம்மதிக்கவேனும் இல்லையேல் அவர்கள் 123யிரை துரோகி அதாவது ஷைத்தான்.தன் மகள்கள் தந்தைக்கே சொந்தம் இவ்ளோ வசதி இருக்கு ஏன் போகமாட்டார்.இன்னும் நிறைய இருக்கு சார்.திராவிடன் நாடு இல்லே மலேசிய இறைவன் மீது வைத்தல் முதல் கோட்பாடு அதை கடைபிடிப்போம்.திராவிடன் என்று ஒரு சிலரே ஜால்ரா போடுவார் ஆனால் 99.9 மக்கள் ஹிந்துவாகவே வாழ்கின்றனர்,வாழ்வார்.வுன்னை நீயே தாழ்வாக மதிப்பிட்டு கொண்டால் யார் தப்பு.முடிந்தால் நீங்கள் கூட்டமா வாழுங்கள்,சமுதாயத்தோடு வோத்து போக பலகிகொல்லுங்க்கொ மக்கள் வுங்க்கலை திரும்பி பார்க்கும்.நீதிபதி போல் பெசாதிங்க்கொ வாழ்கையில் எல்லாம் சகஜம்.முதலில் மனிதனாக வாழ கற்றுகொல் காகம் போல்.நாராயண சமர்ப்பணம்.

 • irfanulla wrote on 13 February, 2014, 6:23

  sha hameed,reyas,கட்டாய மதம் மாற்றம் உங்கள் மாத்தத்தில் எந்த அல் குர் ஆன் ? மற்றவர்களின் உரிமைகளை அபகரிக்கும்,நாசபடுத்தும் உங்கள் நிலைப்பாடு எந்த  அல் குர் ஆன் ? அரசாங்க ஒரு தலைப் பட்சமானவிதிமுறைகள்,அதிகாரிகளின் லஞ்ச அட்டுழியங்கள் எல்லாம் எந்த அல் குர் ஆன்? 

 • pattakatti bairavan wrote on 13 February, 2014, 14:44

  “எல்லாரூம் கொண்டாடுவோம் அல்லாஹ்வின் பேரை சொல்லி நல்லோரின் வாழ்வை எண்ணி “, என்று யுவன் ரீமிக்ஸ் பண்ணி படுவார். கிம்மாவில் சேர்ந்து நாகூர் கனியின் பாடல்களுக்கு புதிய மெட்டு போட்டு இஸ்லாத்தை வளர்ப்பர் யுவன். இனி இள்ளயராஜா மருமகளை காணும் சாக்கில் அடிக்கடி மலேசியா வந்து ஷோ போட்டு இஸ்லாமிய பாடல்களுக்கு முக்கியதுவம் தருவார். வாழ்க இசை ஞானி குடும்பம்.

 • Kuthu vilakku wrote on 13 February, 2014, 15:44

  எல்லா மதமும் நல்லதை சொல்கிறது, இந்து மதத்தில் ஸ்ட்ரீ தர்மம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறது, அனால் இன்று நிஜ வாழ்வில், படத்தில், நாடகத்தில் பெண் புரட்சி என்ற போர்வையில், கலாசார சீர் அழிவை பார்க்கிறோம், இந்து மத போதனை பின்பற்ற வில்லை, கண்ணி தானம் இல்லை, முதிர் கன்னியா? பிரச்னை, இன்று இந்து  திருமண பெண்ணை பார்தால், முஸ்லிம்  திருமண பெண்ணகளின்  அம்மாவை விட வயதானவராக  உள்ளார். சின்ன திரையில் பல திருமணம் புரிந்த நடிகை பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி குடுக்கிறாள், இந்த நிலை மாற வேண்டும். இந்து ஆண்களும் பெண்களும் தங்களின் வேறுபாட்டை உணர்ந்து, வேத சாரங்களை புரிந்து  நல்வழி செல்வோம். மத மாற்றம் தவிர்ப்போம். Girls marry early, look for spiritual man not bad man,learn essence of hindusim and family life not pub life, many divorce and conversion can be avoided.

 • romeo tango wrote on 13 February, 2014, 16:17

  sha hameed நீங்கள் தமிழரா? நீங்கள் உண்மையிலேயே தமிழராக இருந்தால் அல் குரான் தேவை இல்லை— திருக்குறளே நம்மவர்களுக்கு முதல். திருக்குறள் வழியை மீறி ஒன்றும் கிடையாது. ஆரியன் நம்மை முட்டாள்களாக்கி தீண்டாமை உயர் ஜாதி கீழ் ஜாதி என்று நம்மை அடிமைகளாக்கி இவ்வளவு ஆண்டுகள் நம்மை முன்னேற விடாமல் தடுத்திட்டான். இதன் காரணமாகவும் மற்றும் முகலயருக்கும் ஆங்கிலேயருக்கும் நல்ல பிள்ளைகளாக மதம் மாறினார்கள்.அது அப்போது— இப்போது இது தேவையா? பலர் பொருளாதார காரணத்தினால் மதம் மாறுகின்றனர். நம்மவர்கள் விதை தாங்கிகளாக ஏன் இருக்கின்றனர் என்று புரிய வில்லை.எட்டப்பன் புத்தி நம் ரத்தத்தில் ஓடுகின்றதா? இஸ்லாம் அம் மதத்தை அல்லாதவர்களை கீழ்த்தரமாக infidel என்று கூறுகின்றது. அதிலும் சமீபத்தில் இந்துக்களை shaitan அன்று கூறி முக நூலில் வெளியிட்டது யார்? இன்னும் எவ்வளவோ. நீங்கள் தமிழ் முஸ்லிம் ஆகா இருந்தாலும் நீங்கள் keling தான் –

 • romeo tango wrote on 13 February, 2014, 16:33

  கலை- நம் உடன் பிறப்புகள் கொன்று குவிக்கப்பட்ட போதும் சரி இப்போதும் சரி என் ரத்தம் கொதிக்கின்றது. 7 கோடி தமிழர்கள் இருந்தும் நாம் இன்னும் நியாயம் பேசிகொண்டிருக்கின்றோம். MGR தலைவர் பிரபாகரனிடமும் பாலசிங்கத்திடமும் 3 கோடி கொடுத்து உதவியிருக்கிறார் — மற்ற யாரும் ஒன்றும் செய்ய வில்லை– பக்கத்தில் 6 கோடி தமிழர்கள் இருந்து என்ன செய்தார்கள்?
  நாம் ஏன் இவ்வளவு பிளவுபட்டு இருக்கிறோம்? நாம் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கின்றோம்?

 • sha hameed wrote on 13 February, 2014, 21:50

  “எனக்கு அமைதி தேவைப் பட்டது, அதனால் அமைதி மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்…”

  இஸ்லாம் அமைதியான மார்க்கம் நான் அமைதியைத் தேடி வந்துள்ளேன்!!

  “நான் சுமார் ஒன்னறை வருடமாக இஸ்லாத்தை ஆய்வு செய்து இஸ்லாத்தை ஏற்றுள்ளேன்..”

  மூன்றாவது திருமனத்திற்குத்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்று பரப்புவது அவதூறு”

  “அல்ஹம்துலில்லாஹ் நான் இப்போது அமைதியை உணர்கிறேன்”

  நன்றி:- டெக்கான் குரோனிக்கல் (ஆங்கில பதிப்பு)

  அல்லாஹ் யாரை நேர் வழியில் செலுத்துகிறானோ அவரே நேர் வழி பெற்றவர். அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவனே நஷ்டமடைந்தவன்.குர் ஆன் 7:178

  (ஏக இறைவனை) மறுப்பவர்களே!”நீங்கள் வணங்குவதை நான்

  வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை.உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” என (முஹம்மதே) கூறுவீராக குர் ஆன்109:123456

  அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர்.(தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான் குர் ஆன் 61:8 இர்பானுல்லாஹ் நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுக்கள் மனிதத் தவறுகள்,அதற்காக நீங்கள் எப்படி குர் ஆனை குறை கூற முடியும். மனிதர்களில் (ஆட்சியாளர்கள்)உட்பட எவரும் நூறு சதவிகிதம் உண்மையாளர்களோ,நேர்மையாளர்களோ கிடையாது. ஏன் உங்கள் உண்மை பெயரை குறிப்பிடாமல் முஸ்லிம் பெயெரை குறிப்பிட்டுள்ளீர்கள் முதலில் நீங்கள் உண்மையாளராக இருங்கள். குர் ஆனை படியுங்கள் உண்மை புரியும்.

 • suvanappiriyan wrote on 13 February, 2014, 23:06

  அனுபமா சுப்ரமணியம்: உங்கள் தந்தை இந்து மத நம்பிக்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். உங்களின் இந்த மன மாற்றத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டார்?

  யுவன் சங்கர்: ஒரு மகனாக, எனது இந்த மன மாற்றத்தை முதலில் எனது அப்பாவிடம் தான் சொன்னேன். ஆம். சொன்னவுடன் அவர் முதலில் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு எனது முடிவை ஒத்துக் கொண்டு என்னையும் ஏற்றுக் கொண்டார். தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதையே அவர் விரும்பினார். எனது தங்கை பாவனாவிடமும், எனது அண்ணன் கார்த்திக்கிடமும் இதைப் பற்றி கூறினேன். அவர்கள் இருவரும் கூட என்னை நன்கு புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கும் எனது தந்தைக்குமிடையே இந்த மன மாற்றம் சம்பந்தமாக பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி சில காலமாக மீடியாவில் உலவுகிறது. அனைத்து செய்திகளும் தவறானவை. நானும் எனது குடும்ப அங்கத்தினர்களும் எப்போதும் போலவே சந்தோஷமாக இருக்கிறோம்.

  அனுபமா சுப்ரமணியம்: ஏ ஆர் ரஹ்மானை நீங்கள் பின்பற்றுவதாக சிலர் கூறுகின்றனரே!

  யுவன் சங்கர்: அவரை நான் ஏன் பின்பற்ற வேண்டும்? என்னுள் ஏற்பட்ட சில மாற்றங்கள் இந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது. அவ்வளவுதான்.

  http://suvanappiriyan.blogspot.com/2014/02/blog-post_10.html

 • Jegaveeraphandian wrote on 13 February, 2014, 23:44

  உலகத்தில் நடத்தப்படும் அட்டூழியங்களும் அநியாயங்களும் பிரிவினைகளும் சுரண்டல்களும் எல்லாம் மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலுமே நடத்தப்படுகின்றது. எல்லா உயிர்களையும் இறைவன் படைத்தான் என்று சொல்லும் மதம்தான் கபீர் என்றும் தேவனுடைய பிள்ளைகள் என்றும் தேவர்கள் என்றும் பஞ்சம சூத்திரனென்றும் சாத்தானின் பிள்ளைகள் என்றும் பறைசாற்றுகின்றன. இறைவனைப் பற்றி பேசும் வள்ளுவம் மட்டுமே மதத்தைப் பற்றி  பேசாமல் இருக்கிறது. வள்ளுவத்தையும் அறிவேன். எல்லா மதங்களையும் அறிவேன். வள்ளுவத்திற்கு ஈடானதும் எடுப்பானதும் எதுவுமே இல்லை என்பேன்!

 • kayee wrote on 14 February, 2014, 5:25

  பயன் பாட்டில் இல்லாதது இருந்தும் பயனற்றது.யிரை வழி செல்பவர்கள் எல்லாம் அயோக்கியன் என்றால் பகுத்தறிவாளர்கள் பிரிதால்பவர்கல்,அடுத்தவனை குற்றம் சொல்லுமுன் வுன் முதுகை நீயே திரும்பி பார் வாந்தி எடுதுவிடுவாய்.ஒரு பெற்றூர் ஒரு பெண்ணை நன்றாக வோளுக்கமாக வளர்த்து படிக்க வைத்து ஒரு பொருக்கி கேட்டா கொடுக்கனுமா குடுபாங்க்கலா,நீ வுன் தகுதிய நிகரா அதிகமா வுயர்திகொ,அதை விட்டு மேல் ஜாதி கீல் ஜாதி.தமிழர் வீட்டு பக்கத்தில் இன்னோர் தமிழர் வாங்க மாட்டார் வீடு.ஆரியன் மேல் ஏன் இவ்ளோ பயம்.அவனோட கடமை வருமாய வுமக்கு.எம் ஜி ஆர் அவர் ஒரு மலையாளி செய்தார் நன்மை தெவைபட்டொர்கு.இறையாண்மை அற்றூர் தலையில்லா முண்டம்.திருக்குறளில் குரல் சொல்லுது எண்/எழுத்து இறைவனிடமிருந்து தோன்றியது,யார் ஒருவர் இறைவனை போட்ரவில்லையோ அவன் த்றோகிக்கு சமம்,துரோகியே.நாராயண நாராயண.

 • Muthalvan wrote on 20 February, 2014, 4:10

  இந்த சுதந்திர உலகில் அவர் அவர் வாழ்கை முறையை தேர்வு செய்ய உரிமை இருக்கிறது . இது அவரின் தனி நபர் விருப்பம் இதை கொச்சை படுத்தி பேசுவது அநியாயம் . எந்த ஒரு மனச்சி உள்ள மனிதனுக்கும் இது புரியும் . இஸ்லாம் மார்க்கம் மலேசியாவில் இந்தியாவில் மற்றும் இருபதில்லை .. உலகம் முழுதும் அதிகமாக பின் பற்ற படும் மதம் . அதை ஒருவர் தேர்வு செய்ததில் ஒரு ஆச்சிரியமும் இல்லை. அவர் 3வது திருமணத்தை மறுத்துள்ளார். அது பொய்யான தகவல். அப்படி இருந்தால் கூட அது அவரின் உரிமை . இறைவன் ஒருவன் என்ற ஒரு இறை கொள்கையினால் அவர் ஈர்க்கப்பட்டது ஒன்றும் ஆசிரியம் இல்லை . அவரை அவரின் இஷ்ட்டம் போல வாழ விடுங்கள்!!

 • TENALI wrote on 26 February, 2014, 14:54

  இஸ்லாம் மதம் நல்ல மதம் தான்.ஆனால் யுவன் சங்கர் ராஜாவை போன்ற முட்டாள்கள் அதை மாசு படுட்திவிடக்கூடாது .எனது கடவுள் யார் என்று என்னால் முடிவு செய்ய முடியும் என்றல் நானே கடவுள்..உண்மையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பிறக்கும் போது எந்த மதத்தில் பிறந்தாரோ அதே மதத்தில் சாகும்வரை இருக்க வேண்டும்.ஏன் என்றல் உனக்கு மதத்தை முடிவு செய்த கடவுளையே நீயே மாற்றினால் அது நியாயமா ? யுவன் சங்கர் ராஜா ஒரு மா பெரும் முட்டாள்.இப்படி பட்ட முட்டாளை பெற்று வளத்த பெற்றோர்கள் தான் இந்த மத மாற்றத்திக்கு முழு பொறுப்பு.இளையராஜா தனது மகனின் பொருப்பற்ற செயலுக்காக உலக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 • al sufi wrote on 26 February, 2014, 17:32

  இஸ்லாம் நல்ல மதம் என்றால் ஏன் மூன்று இனத்திற்கும் கிடைத்த
  சம சுதந்திரத்தை முஸ்லிம்கள் மட்டும் ஏப்பம் விடுகிறார்கள்?
  அநீதிக்கு தலை வணங்குபவர்களா முஸ்லிம்கள்?

 • Jegaveeraphandian wrote on 26 February, 2014, 20:39

  தன்னாலி… நீங்கள் பெரிய புத்திசாளியாகவே இருங்கள்.அதற்காக மற்றவரை வாய்கூசாமல் மாபெரும் முட்டாள் என்று திட்டுவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? இது போதாதென்று யுவனைப் பெற்றவர்கள் உலக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பிதற்றுகிறீரே இது எந்த வகையில் நியாயம்? நீர் வாழ்க்கையில் செய்த தப்புகளுக்காக உங்கள் பெற்றோர் எத்தனை தடவை உலக மகா உத்தமர்களிடம் மன்னிப்பு கட்டனர்? முதலில் உங்கள் மதத்தைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதில் என்ன என்ன நன்மை தீமை உண்டு என்று தெரிந்துகொண்டு எழுதுங்கள். மதம் என்பது தனி மனித சுதந்திரம். எது தனக்கு பிடிக்கிறதோ அதை பின்பற்றும் உரிமையை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். என்னய்யா கொடுமை இது. உலகத்தில் எத்தனை மதங்கள் இருந்தாலும் , எல்லா மதங்களும் அந்த பரம்பொருளைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன. எந்த வீட்டலிருந்து பார்த்தாலும் சூரியன் தெரிவதைப்போல் எந்த மதத்திலிருந்து வழிபட்டாலும் அந்த ஒர் ஈசனைத்தான் நோக்கி இருக்கும். மயக்கத்திலிருந்தால் எதுவுமே தப்பாகத்தான் தெரியும்.

 • MOHAN mohan wrote on 28 February, 2014, 1:08

  யுவன் ம….யன் மூதேவி ,,AR RAHMAANAI பின் பற்றுகிறான் ,,அட போடா ம….று ,,இன்றை இந்த இ….ம் நாளே உலகம் அழிந்து கொண்டு இருக்கு ,இந்த வேளையிலே இவன் யுவன் கோழி குஞ்சியை வெட்டுகிறானாம் !! போடா!!!

 • Anonymous wrote on 1 March, 2014, 1:11

  நன்றி

 • Rasi wrote on 2 March, 2014, 0:46

  Kaliyugam

 • shankar wrote on 7 March, 2014, 12:25

  ,,,,இசை ஞ்நீ மைந்தன் ,,,,,,,,,,,,,படு வேகமாக ,,,,,,, ,,,,,,,,,மலைய மண்ணில் தன் இச்சை பயணதில் மேட்கொன்டு கல்வத்தில் சிக்கி சீவி செதுக்கிய குறியுடன் குற்றதை மறைக்க …..தான் என்னமோ ,,,,,,இந்து மதத்தை வெருதவன் போல் எல்லா மதங்களையும் கற்று உணர்தவன் போல் ,,,,,,,,,,இவனும் ஒரு மத ஞ்நீ என்று பிதற்ற………………… வரும் காலங்களிலே மலாய் பாடல் மேடை நிகழ்ச்சிகலீல் dato tan ஸ்ரீ ராஜா யுவ ஷங்கருடின் பின் அப்துல்லாஹ் ராஜா இசை ஞ்னி ,,,,,,,,,,,,,,

 • shankar wrote on 7 March, 2014, 12:26

  ஈன …….. பிறந்தவன்!!!!!!!!!!!

 • magi wrote on 9 March, 2014, 5:36

       நீ  நல்ல   வருவா   உன் அப்பன்  அம்மா   கூட்டி கொடுப்பை உண்மை

  தமிழன் உன்  பாட்டை கேக்ககுடாது நல்ல
   கருத்து  நன்று

 • MAGI wrote on 9 March, 2014, 5:56

   உன் குரல சஜிக்காலமா? நான் உண்மை
    கூறுகிறான் உன் பாட்டு வந்தா  கேட்டபது  இல்லை நீ மதம் மாறமுன்பே    ஒரு முஸ்லிம்
  இந்து வாக  மறுவர்களா ? தஜவு  அவரவ தன்மதம் தோடு நிக்க

   

   

 • shankar wrote on 10 March, 2014, 12:26

  இவன் அப்பன் என்னமோ கடவுளோட கூட்டலின்னு சொல்லிக்கிறான் ,,,,,,,,,,

 • Nigi wrote on 12 March, 2014, 19:15

  திருமூலரின் திருமந்திரத்தை படியுங்கள். மதத்திற்காக அல்ல. அறிவு தெளிவிற்காக. அதில் உள்ள அறிவியலும் ஆன்ம மேம்படும், எவரையும் நல்லவனாக்கும்.
  இன்றைக்கு அது எல்லோருக்கும் அவசியம்.

 • Theni wrote on 12 March, 2014, 20:47

  சைவ சித்தாந்தம், திருவருளின் மூலம் இறைவனை அடையும் வழியை உமக்கு அறிவிக்கும். திருநீலகண்டம்.

 • மாவே. குமார் wrote on 12 March, 2014, 22:35

  மதம், அஃது எந்த மதமாக இருந்தாலும் சரி ஒரு பிரிவினைச் சக்தியே! மதம் மனிதனின் கண்டுபிடிப்பு! கடவுள்/ஆண்டவன்/ பரம்பொருள்/ (தமிழில் அறம்) வேறு எந்தப் பெயரில் அதை அழைத்தாலும் … அந்த ஒன்றுக்கும் மதத்துக்கும் தொடர்பே இல்லை! இறைவன் (அப்படி ஒருவன் இருந்தால்!) எந்த மதத்திற்கும் கட்டுப்பட்டவனுமல்லன், அடிமையுமல்லன்! மனித நம்பிக்கைகளான சடமாகிய மதங்களில் உயிராகிய அறம் அற்றுப்போனால் அம்மதங்கள் வெறும் பிணங்களே! ஓரிறைக் கூப்பாடு என்பதே வெற்றுக்கூப்பாடு! காற்று, அதை ஒரு காற்று என்கிறோமா? நீர், அதை ஒரு நீர் என்கிறோமா? நிலம், அதை ஒரு நிலம் என்கிறோமா? வெளி, அதை ஒரு வெளி என்கிறோமா? நெருப்பு, அதை ஒரு நெருப்பு என்கிறோமா? இறைமை காலங்கடந்தது! மொழியோ காலத்தில் கிடப்பது! இதனால்தான் வள்ளுவனும் … மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறான்! அவன் தெரிந்துகொள்வது அறிவு என்று சொல்லவில்லை! காணல் என்பது காலத்தைக் கடந்தசெயல்! தெரிந்துகொள்வது என்பது காலத்தில், மொழியின் துணைகொண்டு அறிந்துகொள்வது!

 • Theni wrote on 12 March, 2014, 23:20

  ம.வே. குமார் நீங்கள் சொல்ல வருதை தெளிவாகச் சொல்லி இருக்கலாம். நாங்கள் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ள தேவை இல்லாமல் போயிருக்கும். “இறைவன், அப்படி ஒருவன் இருந்தால்” என்று கூறும் தாங்கள் நாத்திகரோ? மெய்பொருளின் விளக்கத்தைக் கொடுக்கும் நன்றாக சமைந்த “சமயத்தை” பொய் என்று வாதிடுவீர்களானால், உங்களுக்கு ஏன் கடவுள் மீது கோபம் வரவேண்டும். நீங்கள் கடவுள் மறுப்பாளர்கள் பட்டியலில் தாராளமாக சேர்ந்துக் கொள்ளுங்கள். அதற்காக ஆஸ்திகவாதிகள் பெரும்பான்மையாக இருக்கும் இப்பூவுலகில் ஓர் இறைக் கொள்கையை மறுப்பதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆணவம் இருக்கின்றதோ அதைப் போலவே அதை தூக்கி நிலை நிறுத்த எமக்கும் அருகதை உள்ளது. நீங்கள் கூறும் பஞ்சபூதங்களும், இறைவனும் ஒன்றன்று என்பதை அறிக. நீர், நெருப்பு, நிலம், காற்று ஆகாயம் என்பது அவையவப் பகுப்பு உடையன. அவை சுட்டி அறியப் படுவன. அவை சடப் பொருட்கள். உயிர் அற்றவை, அறிவு அற்றவை. அவ்வாறான சடப்பொருட்கள் தானே இயங்கா. அவற்றை இயக்க அவற்றுக்கும் மேல் ஒரு சக்தி இருக்கத்தானே வேண்டும். அந்த சக்தியே இறைவனாகும். அவன் தன்வயத்தன், எங்கும் நிறைந்திருப்பவன் (வியாபி). காலத்திற்கு அப்பாற்பட்டவன். முற்றறிவாளன், பேரின்பக் கருணையாளன் etc. etc. அந்த இறைவனுக்கு அவரர் நம்பிக்கைக்கு ஏற்ப அவரவர் மொழியில் பெயர் வைத்து போற்றுகின்றோம். இதை சைவ சித்தாந்தமும் உணர்த்துகின்றது. தமிழனாகப் பிறந்து தமிழ் நாட்டிலே இன்னிசை கலை உலகில் வளர்ந்த ஒருவருக்கு அதை அறிந்து அதன் வழி நிற்க அறிவில்லை, வக்கில்லை என்றால் என்ன செய்ய? அகச் சமயத்தை அறியாமல் புறச் சமயத்தை நோக்கி ஓடுபவன் மெய்பொருள் காணதவனே. “அறிவு” என்னும் மெய்பொருளை அறியாதவனே. அவன் கண் இருந்தும் குருடனே. அவன் முகத்தில் இருப்பவை இரண்டும் புண்ணே.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)