காஜாங் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமலநாதன் மீண்டும் ஒரு கைகூஜா!

Kamal Tamil school

உலு லங்காட் மாவட்ட ரீதியிலான நீலாம் வாசிப்புத் திட்ட நிகழ்வுக்குப் பிறகு N 25 காஜாங் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தனது பள்ளி மாணவர்கள் தொடர்பான நிகழ்வில் கமலநாதன் தமது அரசியல் பிரச்சாரத்தை நேரிடையாகவே நடத்தினார்.

நேற்று முந்தினம் நடந்த அந்நிகழ்வில் நமது இரண்டாவது கல்வி துணையமைச்சர் கமலநாதன் சொன்னது இதுதான். நீங்கள் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கப்போகிறீர்களா அல்லது கணவனின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்களா என்கிற அறிவார்ந்த கேள்வியை அவர் கேட்டிருந்தார்.

முன்பொரு முறை தனது கணவருக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தது போல் மீண்டும் வான் அஜிஸா பதவி துறக்க மாட்டார் என்பது எந்த வகையில நிச்சயம் என அக்கறையான கேள்வி ஒன்றை வைத்திருந்தார் என்கிறார் அதில் கலந்து கொண்ட செம்பருதித்தியின் கட்டுரையாளர் தமிழினி.

kamal kissingகமலநாதனின் கணிப்பு இதுதான். ஒருவேளை அன்வார் கூட்டரசு நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டில் வெற்றி பெற்று அவர் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஐந்தாண்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பி விட்டால் மீண்டும் வான் அஜிஸா பதவி துறப்பதற்கான சாத்தியத்தைக் கோடி காட்டியிருந்தார்.

அவரின் இந்த அரசியல் சாணக்கியத்தை எண்ணி தான் உண்மையிலேயே வியந்து விட்டேன், என்ற தமிழினி, இந்தியர்கள் சார்ந்த அடிப்படை கல்வி விடயத்தில் அவர் சாணக்கியம் இல்லாமல் அம்னோவுக்கு அடிபணிந்து கூஜா தூக்கும் வகையில் தொடர்ந்து செயல் படுவது ஒருவகை துரோகம் என்கிறார். கற்ற சுறுசுறுப்பான திறமைகள் கொண்ட கமலநாதன் சோரம் போன வகையில் செயல் படுவது ஏமாற்றத்தை அளிக்கிறது என்கிறார்.

Najib tamilஉதாரணமாக. கமலநாதன், 2014-ஆம் ஆண்டு எத்தனை இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயில்கின்றனர்? 2012-2013 தமிழ்ப்பள்ளிகளுக்கென ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில்  எத்தனை தமிழ்ப்பள்ளிகள் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன? எத்தனை தமிழ்ப்பள்ளிகளுக்கு துணைக்கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன? அதற்கு மொத்தமாக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்த முழுமையான அறிக்கையினை உங்களால் வெளியிட முடியுமா? என்கிறார் தமிழினி.

மேலும், 3 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அவற்றின் எத்தனை பள்ளிகள் கட்டப்பட்டு விட்டன என்பதை ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தி துணை கல்வி அமைச்சர் என்கிற முறையில் வெளியிட முடியுமா? இதைத் தவிர 2014 பட்ஜெட்டில் 93 தேசிய வகைப் பள்ளிகளில் புதிய பாலர்ப்பள்ளிகள் நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் எத்தனை பாலர்ப்பள்ளிகள் தமிழ்ப்பள்ளிகளில் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன? கடந்தாண்டு தீபாவளி காலக்கட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளில் கட்டிடம் கட்டுவதற்கு கடிதங்கள் வழங்கினீர்களே? இப்போதைய நிலை என்ன? என வினவுகிறார்.