தேசிய தமிழ் இடை நிலைப்பள்ளி தேவையா?

ganesan arumugamகடந்த ஏறக்குறைய இரண்டு வருடங்களாக தமிழ் இடை நிலைப்பள்ளி வேண்டுமா? வேண்டாமா ? என்ற கருத்துப் போராட்டம் நமது சமுதாயத்தில் இருந்து வருகின்றது.

கருத்து தெரிவித்தால் தாம் கடுமையாக தாக்கப்படுவோம் என்ற பயந்த உணர்வும் பல அரசியல்வாதிகளிடையே காணப்படுகின்றது. இது ஒருபுறமிருக்க நான் உண்டு என் வேலை உண்டு என்ற வியாகின தத்துவமும் பலருக்கு உண்டு.

இந்த வேளையில் நான் பேசாமல் இருந்தாலும் பலரின் நகைப்புக்கு ஆளாவேன் என்பது திண்ணம்.

தமிழ்ப்பற்று அனைத்து தமிழர்களுக்கும் இருப்பது ஒரு நல்ல விசயம். தமிழ்ப்பற்றை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது ஒரு விசயம். உதாரணத்திற்கு தமிழ்ப்பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை சரியாக உணர்ந்திருக்கப் பட வேண்டிய ஒன்று.

தமிப்பள்ளிக்கு அனுப்பாமல் பல ஆயிரம் காரண காரியங்கள் சொல்வது ஒரு சாதாரண விசயமாகி விட்டது. இதை இப்பொழுது யாரும் பொருட்படுத்தவே இல்லை. அல்லது குறைவு என்று எடுத்துக் கொள்ளலாம்.

அடிப்படை உணர்வுக் கூட இல்லாமல் அதனால் நான் தமிழ்ப்பள்ளி அனுப்ப வில்லை. இதனால் நான்  தமிழ்ப்பள்ளி அனுப்ப வில்லை என்று எல்லாம் கூறும் அரசியல்வாதிகள் யாவரும் நம்மை ஏமாற்றும் தலைவர்களாக பார்க்க வேண்டுமே தவிர அவர்களுக்கு நாம் சிறிதும் கருணைக் காட்டக் கூடாது.

இந்தியர்களை நலனைக் காட்டும் மாண்புமிகு குலசேகரன் அவர்கள் கண்டிப்பாக தமது குழந்தையை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி இருப்பாரேயானால் நாம் நிச்சயமாக பாராட்டு தெரிவிக்க வேண்டும். மாண்புமிகு பினாங்கு துணை முதல்வர் தமது குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி இருப்பாரானால் கண்டிப்பாக முதற்கண் நாம் அவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

அப்படி முரண்பாடு இருக்குமாயின் நாம் கண்டும் காணாமல் இருந்து விடலாமா? இந்த தமிழை வைத்தே அரசியல் நடத்துபவர் பலர். இந்த அரசியல் நாடகத்தை வெற்றிகரமாக நடத்தும் தலைவர்களை நாம் அடையாளம் கண்டு நம்மை நாமே தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

சண்டை போடுவது; போராட்டம் செய்வது; நமது பண்பாடு அல்ல என்பதை உணர வேண்டும். நாசுக்காக சொல்லலாம். யதார்த்தமாக பேசலாம். வாதம் செய்ய வேண்டியதில்லை.

இப்பொழுது நமது குறியெல்லாம் தமிழ்ப்பள்ளிகள்  மேன்பாடு அடைய வேண்டும் என்பதே. முதலில் அடிப்படை மிகவும் பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். அடிப்படை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் காலத்தால் நாம் அடிக்கப்படுவோம். சபிக்கப்படுவோம்.

உதாரணத்திற்கு பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் நிலை மிகவும் அவலத்திற்கு உரியதாக உள்ளன. சில தமிழ்ப்பள்ளிகள் இதற்கு  எதிர்மறையாக உள்ளன. பெர்மாத்தாங் திங்கி, மாக் மண்டின் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் மற்ற பள்ளிகள்???? வால்டோர் தமிழ்ப்பள்ளி, சங்காட் தமிழ்ப்பள்ளி???/ பல ஆண்டு காலமாக வசதிகள் இல்லாமல் இருக்கும் அவல நிலையை அனைவரும் உணர்வர்.பத்துக் காவான் தமிழ்ப்பள்ளியும் இதில் அடங்கும்.

அவ்வாறு இருக்க  இப்பொழுது பல அரும் பெரும் தலைவர்கள் நமது சமுதாயத்திற்கு ஒரு தமிழ் இடை நிலைப்பள்ளி வேண்டும் என்று முழங்குவது காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. நமக்கு தமிழ் இடை நிலைப் பள்ளி தேவை. மறுப்பதற்கு எதுவுமில்லை. நானும் தமிழ் எதிராளி அல்ல. தமிழுக்கும் எனக்கும் ஒரு பகையுமில்லை. ஆனால் இப்பொழுது தமிழ் இடை நிலைப் பள்ளி தேவையில்லை என்பதே எனது கருத்து.

முதலில் தமிழ்ப்பள்ளிகளை தரமான பள்ளிகளாக கொண்டு வருவோம். அனைவரும் இதற்கு குரல் கொடுப்போம். அனைவரும் ஒத்துழைப்பு தருவோம். 100% தமிழர்களின் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றடைவதை உறுதிச் செய்வோம். பள்ளியின் வசதிகளைக் கூட்டுவோம். மேம்பாடு திட்டங்களை வெற்றியடையச் செய்வோம். பிறகு இடை நிலைப்பள்ளியைப் பற்றி சிந்திப்போம். பேசுவது,

திட்டங்களைச் தீட்டுவது பாதகம் இல்லை. இதை வைத்து அரசியல் ஆட்டம் ஆடுவது சிறந்த வழியாகாது. மேலும் இதை வைத்து பலருக்கு அழுத்தம் தருவது அறிவுப்பூர்வமான செயலாக எமக்கு தெரியவில்லை. ஆக்கபூர்வமாக சிந்திப்போம். தெளிவாக  கடமை ஆற்றுவோம்.

அன்புடன்

கணேசன் ஆறுமுகம்

பத்துக் காவான் மலேசியர் இந்தியர் காங்க்கிரஸ்

தொகுதி தலைவர்