வறுமையைப் புறக்கணிப்பது இளம் பூமிபுத்ராக்களுக்கு ஆபத்தாக முடியும்

nurulஅரசாங்கத்தின்  உதவித்தொகையைச்  சீரமைக்கும்  திட்டத்தால்  பரம  எழைகள்- குறிப்பாக  இளம்  பூமிபுத்ராக்கள்-  1970  ஆண்டுகளின்    வாழ்க்கைத்தரத்துக்குப்  பின்தள்ளப்படுவார்கள்  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  நுருல்  இஸ்ஸா  எச்சரித்துள்ளார்.

வறுமையை  மட்டுப்படுத்தும்  அரசாங்க  நடவடிக்கைகள்  இலக்கு  தவறிவிட்டன, அதனால்  குடும்பங்களின்  கடனளவு  தேசிய  வருமானத்தை விடவும்  1.4மடக்கு  அதிகமாகவுள்ளது  என்றாரவர்.

“அதாவது  மாதம்  ரிம700- இது  வறுமையின்  அடையாளம்- வருமானம்  பெறுவோர்கூட  பணவீக்கத்தையும்   வீடு  வாங்குதல்,  வாடகை  கொடுத்தல்,  போக்குவரத்து  மற்றும்  இதர  இன்றியமையாப்  பொருள்களுக்கான  செலவுகளையும்  சமாளிக்க  முடியாமல்  பெரிய  அளவில் கடன்  வாங்குகிறார்கள்”, என்று  நூருல்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.

கடந்த மாதம்  வெளியிடப்பட்ட  மலாயாப்  பல்கலைக்கழக  பேராசிரியர்  பத்திமா  கரியின்  அறிக்கை,  உதவித்  தொகைகள்  மீட்டுக்கொள்ளப்பட்டால்  பூமிபுத்ராக்களின்  எதிர்காலம்  மிகவும்  மந்தமாகி  விடும்  என்று  எச்சரித்திருப்பதையும்  அவர்  சுட்டிக்காட்டினார்.