ஜாயிஸைத் தவிர்க்க பைபிள் கழகம் இடம் மாறுகிறது

bsmமலேசிய  பைபிள்  கழகம் (பிஎஸ்எம்),  சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறை(ஜாயிஸ்)யின்  பிடியிலிருந்து  விலகி  இருக்கும்  நோக்கில்  கோலாலும்பூருக்கு  இடம்  மாறிச்  செல்கிறது.

ஜனவரி  2-இல், பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  அதன்  கட்டிடத்திலிருந்து  ஜாயிஸ். 320 மலாய்,  இபான்  மொழி  பைபிள்   பிரதிகளைப்  பறிமுதல்  செய்தது.  அவை  இன்னும்  திருப்பிக்  கொடுக்கப்படவில்லை.

இடம்  மாறினால்  ஜாயிஸின்  தொல்லை  இருக்காது  என்று  அது  எண்ணுகிறது.

“இடமாற்றம்  தவிர்த்து  மற்றதெல்லாம்  வழக்கம்போலத்தான்.  இனி,  பைபிள்களை  கிள்ளான்  துறைமுகம்வழி  இறக்குமதி  செய்யப்போவதில்லை.. மலாய்மொழி  பைபிள்கள்  அதை  வாசிப்பவர்கள்  நிறைய  உள்ள  பகுதிகளுக்கே (சாபா, சரவாக்)  நேரடியாக  அனுப்பப்படும்”, என  பிஎஸ்எம்  தலைவர்  லீ  மின்  சூன்  கூறினார்.