சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பம்!- பிரித்தானியா

william_hagueஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கும் முகமான சாட்சியப்பதிவு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இந்த தகவலை பிரித்தானிய வெளியுறவு அமைசசர் வில்லியம் ஹேக் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் விசாரணையை பொறுத்தவரை, அதில், அனைத்து துறைசார்ந்தவர்களும் தகவல் மற்றும் சாட்சியப்பதிவு தொடர்பில் தெரிவுச்செய்யப்படுவர் என்று வில்லியம் ஹேக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நவநீதம்பிள்ளை வாய்மூல அறிக்கையை எதிர்வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைப்பார்.

இதன் பின்னர் 2015ம் ஆண்டு மார்ச்சில் முழு அறிக்கையை அவர் சமர்ப்பிப்பார் என்றும் வில்லியம் ஹேக் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் பிரித்தானிய அரசாங்கம், நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக ஹேக் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 27ம் திகதியன்று இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரும் அமெரிக்க யோசனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

TAGS: