ஜோகூர் தரைப்பாலத்தை எடுத்துவிடலாம் என்கிறார் மகாதிர்

dr mபுதிதாக  நட்புறவுப்  பாலம்  கட்டுவதாக  இருந்தால்  ஜோகூர்  கோஸ்வேயை (தரைப்பாலம்)  எடுத்துவிடலாம்  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  பரிந்துரைத்துள்ளார்.

ஜோகூர் தரைப்பாலத்தால்  ஜோகூர்  பாருவில்  சுற்றுச்சூழல்  விவகாரங்கள்,  போக்குவரத்து  நெரிசல்  உள்பட  பல  பிரச்னைகள்  ஏற்படுவதாக  அவர்  கூறினார்.

“பாலம்  கட்டுவதானால்  பிறகு  இந்தத்  தரைப்பாலம்  எதற்கு? இந்தத்  தரைப்பாலம்  நீரோட்டத்தைத்  தடுக்கிறது.

“அதனால்,  கடல்  அழுக்கடைகிறது.  பாலம்  இல்லாததால்  ஜோகூர்  பாருவில்  பெரும்  போக்குவரத்து  நெரிசல்  ஏற்படுகிறது”,  என்று  மகாதிர்  கூறினார்.