அம்பாங் தமிழ்ப பள்ளி திடல் மீது சாலை: முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பத்தரிக்கை செய்தி

அம்பாங் தொகுதி பிகேஆர் கட்சிக்கு பொன் ரங்கன் போட்டி
தமிழ்ப பள்ளி திடல் மீது சாலை முதல்வர் கவனத்திற்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அம்பாங் தமிழ்ப பள்ளி திடல் மீது  அமைய உள்ள ஆறு வழி மேற்சாலை மற்றும் டோல் சாவடி கட்டுமானம் தொடர்பாக மாநில முதல்வர் காலிட் இப்ராஹிம் கவனதிற்கு கொண்டு  சென்றுள்ளதாக அம்பாங் தொகுதி பி கே ஆர் கட்சி தேர்தலுக்கு போட்டியிடும்  அம்பாங் பொன் ரங்கன் தமது அறிக்கையில் கூறி உள்ளார்.

முன்பு பாரிசன் காலத்தில் முடிவு செய்யப்பட்ட இந்த சுகே(SUKE ) சுங்கை பிசி உளுகிளான் விரிவாக்க திட்டம் மற்றும் அம்பாங் தமிழ்பபள்ளி அருகில் அமைய உள்ள டோல் சாவடி அம்பாங் மக்களுக்கு பெரும் சுமையாக அமைவதோடு 60 ஆண்டுக்கால் தமிழ்ப்பள்ளி அழகை சுற்று சூழலை வாகன நெருக்கடியால் பள்ளிக்கு பாதிப்பை தரும் என்று கூறுகிறார். இது தொடர்பாக பிரதமர் துறை தமிழ்ப்பள்ளி இயக்குநர் முனைவர் ராஜேந்திரன் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த 2009 நடந்த அம்பாங் இந்தியர்களுடனான சாலை மீதான மாபெரும் எதிர்ப்பு கூட்டத்தில் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கொடுத்த தமது வாக்குறுதியை காப்பாற்ற தவறி விட்டார். இதுபோலவே பெ ஆ சங்கம் தந்த அப்பள்ளி அதிக படி நிலப்பிரச்சனையும் இதுவரை தீர்ந்த பாடில்லை.

சிலாங்கூர் மாநில ஆச்சிப்பீடத்தில்  மற்றும் நாடாளுமன்ற அமர்வில்   உள்ள அம்பாங்  நாடாளுமன்ற தொகுதி அந்தஸ்தை வைத்துள்ள சுரைடா இதுவரை எதையும் சாதித்ததாக தெரியவில்லை.இவரின் தலைமைத்துவத்தை எதிர்த்து மும்முனை போட்டி நிலவுகிறது. அம்பாங் பொன் ரங்கன் மற்றும் ஹலீம் இருவரும்  களம் இறங்க பல காரணங்கள் உண்டு என்கிறார்கள்.

பிகெஆர் ஒரு பல்லின உரிமைக கட்சி அடிப்படையில் நாடு முழுக்க தொகுதி கிளைகளில் இந்தியர்கள் இந்த முறை போட்டி இட தயாராகி உள்ள வேளையில் இது கட்சிக்கும் இனத்துக்கும் ஒரு ஆரோக்கியமான பலத்தை குறிப்பா இந்தியர்கள் மத்தியில் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த தேர்தலில் நம்மவர்கள் வாக்கால் வெற்றிபெற்றவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கட்சியில் நம்மமை உயர்த்தவில்லை,அரசு அரசு சாரா பதவிகளிலும் நமக்கு ஏமாற்றமே! குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பாங் MPAJ எனும் நகராண்மை கழக இரண்டு இந்தியர்கள் பதவி நிரப்ப படாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை தந்து வருகிறது. முழுக்கு அரசியல் மட்டும் நடத்துவதால் மக்கள் பிரச்சனையை கவனிக்க நேரமில்லாத தலைவர்களால் நமக்கு நட்டமே மிஞ்சி நிற்கிறது.குறிப்பாக அம்பாங் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வெறுப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதுபோலவே அம்பாங் தமிழ்பப பள்ளி நிலம் கெடுபிடி /பள்ளி திடல் மீது தோல் சாலை, தசெக்  பெர்மாய் கிராம மக்களின் வாழ்வாதாரம். அன்னியர் வணிக ஆக்கிரமிப்பு சிக்கல் போன்றவை தலை தூக்கி உள்ளது.

பழையது பழையதாக இருக்க மிக மோசமாக போக நாம் இனி இடம் தரலாகாது. அரசியலில் ஏமாறுவதும் எமாற்றபடுவதும் நம் தலை விதி என்று போக முடியாது. நம் உரிமை வெல்ல இந்தியர்கள் தமிழர்கள் வளப்பத்திற்கு  மாற்றம் முக்கியம் என்ன பொன் ரங்கன் கூறுகிறார் .
பிகே ஆர் அம்பாங் தொகுதியின் தேர்தல் எதிர்வரும் 11/5/2014 அம்பாங் பண்டார் பாரு ஸ்ரீ நீளம் திடல் மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெரும்.மேலும் விபரம் பெற தலைவர் திரு பொன் ரங்கன்  016 6944223016 6944223  துணைததலைவர் திரு கிருஷ்ணன் அப்பு உதவித்தலைவர் திரு சுப்பையா அல்லது திரு ராமன் 0162777576 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.