தெய்வச் சிலைகள் குறித்து முன்னாள்-நீதிபதி சொன்ன இனவாத கருத்துக்கு மஇகா கண்டனம்

batuமேல்முறையீட்டு  நீதிமன்றத்தின்  முன்னாள்  நீதிபதி  முகம்மட்  நூர்  அப்துல்லா  மீண்டும்  கண்டனத்துக்கு  இலக்கானார்.   இம்முறை  இந்து,  புத்த   சிலைகள்  பொது  இடங்களில் வைக்கப்பட்டிருப்பது  இஸ்லாத்துக்கு  விரோதமானது  என்று  கூறியதற்காக  அவருக்குக்  கண்டனம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. .

 

“பத்து  மலை  கோயிலிலும்   பினாங்கு  புத்த  ஆலயத்திலும்  வைக்கப்பட்டுள்ள  “பெரிய”  சிலைகள்,  சிலை  வணக்கம்  கூடாது  என்று  சொல்லும்  இஸ்லாமிய  போதனைகளுக்கு  விரோதமானவை  என்று மேல்முறையீட்டு  நீதிமன்றத்தின்  முன்னாள்  நீதிபதி  முகம்மட்  நூர்  அப்துல்லா  கூறியது அவமானத்துக்குரிய  செயல்  என  மஇகா  இளைஞர்  பகுதி  கருதுகிறது.

“மலேசியர்களின்  இணக்கநிலையில்   குறுக்கிடும்  ‘இனவாத’  கருத்துக்கள்  சொல்வதை  அவர்  நிறுத்திக்   கொள்ள  வேண்டும்  என  மஇகா  இளைஞர்  பகுதி  எச்சரிக்கிறது”, என அப்பகுதித்  தலைவர்  சி.சிவராஜா  கூறினார்.

சிவராஜா,  நேற்று  மலாய்  மெயில்  இணையத்தளத்தில்  வெளியிடப்பட்டிருந்த  ஒரு  கட்டுரை  குறித்து  கருத்துரைத்தபோது இவ்வாறு  கூறினார்.