மதத்துக்கு ஆதரவு அதிகம் என்கிறது ஆய்வு

religionமதம், சமூகத்தில் ஒரு பயனுள்ள பங்காற்றுவதாக உலகில் 65 நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் கருதுவதாக அப்பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வொன்று, கூறுகிறது.

வின் மற்றும் கேலப் ஆகிய இரு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய ஆய்வில், சுமார் 66,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த ஆய்வில், நாடு என்ற அளவில் இந்தோனேசியாவில்தான் மதத்துக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. பிரதேசம் என்ற அளவில் பார்த்தால், ஆப்ரிக்காதான் மதத்துக்கு ஆதரவு அதிகம் தரும் பிரதேசமாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.

வளர்ந்த நாடுகளில் அமெரிக்காவில்தான் மதத்துக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது.

சில மேற்கு ஐரோப்பிய நாடுகள் இந்தப் பட்டியிலில் மிகவும் கீழே இருந்தன. அதாவது இந்த நாடுகளில் மதத்துக்கு ஆதரவு மிகவும் குறைவு.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் மத்தியில், கல்வியறிவு அதிகமாக இருந்தால், அவர்கள் மதத்தைப் பற்றி அவ்வளவு சாதகமாக இல்லை என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில், கடவுள் மறுப்பாளர்களில்கூட,பத்தில் நான்கு பேர், மதம் தங்கள் நாடுகளில் ஒரு ஆக்கபூர்வமான பங்கையே ஆற்றுவதாகக் கூறினர். -BBC