கடலடித் தேடலில் இதுவரை பலனில்லை

bluefinநான்கு  தடவை கடலடிக்குச்  சென்று  தேடிப்  பார்த்த தானியங்கி  குட்டி  நீர்மூழ்கிக்  கப்பலான  புளுஃபின்-21(ஏயுவி)  அங்கு  எம்எச்370  விமானம்  இருப்பதற்கான  தடயங்கள்  எதையும்  காணவில்லை. இன்று  அது ஐந்தாவது  கடலடிப் பயணத்தை  மேற்கொண்டிருப்பதாக கூட்டு  ஒருங்கிணைப்பு  மையம்  தெரிவித்தது.

புளுஃபின்  மிக  மெதுவாகத்தான்  செயல்படும். இதுவரை  110 சதுர  கிலோமீட்டர்  பகுதியைத்தான்  அதனால்  தேடிப்பார்க்க  முடிந்ததாக  அம்மையம்  கூறிற்று.

இதனிடையே, கடலின்  மேற்பரப்பில், 51,870 சதுர  கிலோமீட்டர்  பகுதியில்,  42வது  நாளாக  நடக்கும்  தேடும்பணியில்  11  விமானங்களும்  12  கப்பல்களும்   ஈடுபட்டுள்ளன.