நாடாளுமன்றத்தில் கர்பாலின் இறுதிப் பேச்சு

karமக்களவையில்  அனல் கக்கும்  உரைகளுக்குப்  பேர் பெற்றவர் காலஞ்சென்ற  கர்பால்  சிங். கருத்துக்களும்  ஆணித்தரமாக  இருக்கும்; குரலும்  கம்பீரமாக இருக்கும்.  இதனாலேயே ‘ஜெலுத்தோங்  புலி’  என்றும்  அவர்  அழைக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில்  அவர்  கடைசியாக  பேசிய  பேச்சிலும்  அந்தப்  ‘புலியின்  உருமலை’க்  கேட்க  முடிந்தது.

“இரண்டாவது  தடவையாக  அவையில்  நீதிபதிகளின்  நடத்தை  பற்றிக்  கேள்வி  எழுப்பட்டுள்ளது. நானும் (முன்பு) முன்னாள்  தலைமை  நீதிபதி  ஸாக்கி அஸ்மிக்கு  எதிராக  ஒரு  தீர்மானம்  கொண்டு  வந்தேன். ஒன்றும்  நடக்கவில்லை.  ஏன்?

“எதற்காக  இந்த  அவை  நீதிபதிகளுக்குப்  பயப்படுகிறது?  நீதிபதிகளின்  நடத்தைப்  பற்றி  விவாதிக்க  அஞ்சுவது  ஏன்?”.

நாடாளுமன்ற  பதிவேட்டில்  ஏப்ரல்  10-இல்  அவர்  பேசியதாக பதிவாகியுள்ள  இறுதி  வார்த்தைகள்.

முறையீட்டு  நீதிமன்ற நீதிபதிகளின்  நடத்தைமீது  தீர்மானம்  கொண்டு  வந்த  பிகேஆரின்  கோம்பாக்  எம்பி  அஸ்மின்  அலியையும்  பாஸின்  செப்பாங்  எம்பி  ஹனிபா   மைடினையும்  நாடாளுமன்றத்திலிருந்து  வெளியேற்ற  அவைத் தலைவர்  முடிவெடுத்தபோது  கர்பால்  பேசிய  பேச்சு  அது.