கர்பாலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் சாமிவேலு

 

Karpal-Samy Velluநேற்று அதிகாலையில் சாலை விபத்தில் மரணமுற்ற நாட்டின் மூத்த அரசியல்வாதி கல்பாலுக்கு இன்று மாலை (ஏப்ரல் 18 ) முன்னாள் அமைச்சர் ச.சாமிவேலு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

தமது இறுதி மரியாதையைச் செலுத்த பினாங்கில் கர்பால் சிங்கின் இல்லத்தை சென்றடைந்த சாமிவேலுவை பினாங்கின் முதலமைச்சர் லிம் குவான் எங் வரவேற்றார்.

இரு வேறுபட்ட அரசியல் கூட்டணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தமது இரங்கலைத் தெரிவிக்கையில் சாமிவேலு, லிம்மை கட்டித் தழுவிக் கொண்டார்.

சாமிவேலுவின் முகம் அவரின் துயரத்தை வெளிப்படுத்தியது. “நாங்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் ஒன்றாக இருந்தோம்”, என்று அவர் பின்னர் கூறினார்.

“எப்போதும் மக்களின் நலனுக்காக கர்பால் பல பிரச்சனைகளை எழுப்பி வந்தார்”, என்று மஇகாவின் முன்னாள் தலைவரான சாமிவேலு மேலும் கூறினார்.

Karpal-Samy1

“கர்பாலின் மரணத்தை கேட்டபோது என்னால் அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை”, என்றாரவர்.

“நாடாளுமன்ற விவாதங்களின் போது கர்பால் வாக்குவாதம் செய்வதுண்டு. ஆனால், வழக்குரைஞரான அவர் ஒரு தலைவர், நம்பிக்கைக்குரியவரான அவர் குற்றம் குறையின்மையை நாடுபவர்.”

வழக்குரைஞராக இருந்து அரசியல்வாதியான கர்பாலை முதலில் புலி என்று வர்ணித்தவர் சாமிவேலுதான். அவரை “நீதிமன்றத்தின் புலி” என்று கூறிய சாமிவேலு தம்மை ஒரு “சிங்கம்” என்று கூறிக்கொண்டார்.

இதற்கு எதிர்வினையாற்றிய கர்பால், சாமிவேலு சிங்கமாகவும் தாம் புலியாகவும் இருக்கலாம் என்று கூறிய அவர் சுதாரித்துக் கொண்டு மலேசியாவில் சிங்கங்கள் இல்லையே என்றார்.

Karpal-Samy274 வயதான கர்பால் ஓர் இளைஞரைப் போல் உழைத்தார் என்று சாமிவேலு மேலும் கூறினார்.

கெராக்கான் துணைத் தலைவர் டாக்டர் சியா சூன் ஹய் கட்சியின் இதர தலைவர்களுடன் கர்பாலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தனர். அவர்களின் கட்சியின் மாநில தலைவர் தெங் சாங் இயோவ் மற்றும் மாநில செயலாளார் ஓ தோங் கியோங் ஆகியோரும் அடங்குவர்.

1974 ஆம் ஆண்டில் தாம் இளவயதினாராக இருக்கும் போதே கெடா சட்டமன்ற பண்டார் அலோர் சீதார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கர்பாலை தெரியும் என்றார்.

“அவரைக் கண்ட அப்போதே அவர் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர் என்று நாங்கள் தெரிந்து Karpal-Samy3கொண்டோம். அப்போது மற்றவர்களை விஞ்சி நின்ற அவர் அரசியலில் மட்டுமல்லாது சட்டத்திலும் பெரும் போர்த்திறனை விட்டுச் செல்கிறார்”, என்று முன்னாள் டெர்கா சட்டமன்ற உறுப்பினரான சியா கூறினார்.

“நாடாளுமன்றத்தில் கோப்பி அருந்துவதுண்டு”

பின்னர், பிரதமர்துறை அமைச்சர் ஷகிடான் காசிம் வந்தார். 1986 இல் அவர்கள் நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக கூறினார்.

Karpal-Samy4எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், நாங்கள் நாடாளுமன்றத்தில் கோப்பி அருந்துவதுண்டு. அவர் ஒரு நண்பர்”, என்றார் ஷகிடான்.

“நாம் வேறுபட்டிருந்தாலும் ஒன்றாக இருக்கலாம். இது ஒற்றுமைக்கும் மற்றவர்களுக்கு மரியாதை அளிப்பதற்குமான ஒரு முன்மாதிரி”, என்று அவர் மேலும் கூறினார்.

“இது போன்ற அரசியல் தொடரும் என்று நம்புவோம். கர்பால் எப்போதுமே ஒரு திறந்த மனம் Karpal-Samy6படைத்தவராக காணப்பட்டார்”, என்று ஷகிடான் வலியுறுத்திக் கூறினார்.

லிங்: கர்பால் எனது நண்பர்

கர்பாலுக்கு இறுதி மரியாதை தெரிவிக்க வந்த மசீச முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக்கை குவான் எங்கும் கிட் சியாங்கும் வரவேற்றனர்.

கர்பாலின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்த லிங், அந்த மூத்த வழக்குரைஞர் தமது நண்பர் என்று கூறினார்.

“அவர் ஒரு துடுக்குத்தனமான மாணவர். 1961 ஆம் ஆண்டில், நாங்கள் சிங்கப்பூரில் மலயா பல்கலைக்கழக மாணவர் சங்க உறுப்பினர்களாக இருந்தோம்”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்,

“தேர்வுகளில் அவர் முதல் தர மாணவராக இருந்ததில்லை. இது ஒரு சிறந்த வழக்குரைஞராவதற்கு ஒருவர் சிறந்த மாணவராக இருக்கKarpal-Samy5 வேண்டியதில்லை என்பதைக் காட்டுகிறது”, என்று அவர் மேலும் கூறினார்.

பிஎன் மற்றும் மசீச மீது கர்பால் கூறிய குறைகள் பற்றிய வினவிய போது, கர்பால் என்றுமே தனிப்பட்ட விரோதம் காட்டியதில்லை என்று லிங் கூறினார்.

“கர்பால் என்னைத் திட்டியதாகவோ, நான் கர்பாலை திட்டியதாகவோ நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? நான் டிஎபியை திட்டியதுண்டா?”, என்று அவர் வினவினார்.

அவரைத் தொடர்ந்து சுகாதார அமைச்சரும் மஇகா துணைத் தலைவருமான டாக்டர் எஸ். சுப்ரமணியம், கட்சியின் மாநில இளைஞர் பிரிவு செயலாளர் ஜே. தினகரன் மற்றும் மசீச உதவித் தலைவர் சியு மெய் ஃபன் ஆகியோரும் வந்திருந்தனர்.

 

 

 

 

 

TAGS: