விஜய்க்கு மோடி செய்துகொடுத்த சத்தியம்!

vijay_narendramodi_001சமீபத்தில் நடந்த மோடி – விஜய் சந்திப்பு அரசியல் வட்டாரம் மற்றும் திரைத்துறையிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது

நாடு முழுவதும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்துவருகிறார் .

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரசாரம் மேற்கொள்ள வந்திருந்த மோடியை நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்தார்.

விரைவில் அரசியல் பிரவேசம் செய்யும் நோக்கத்திலேயே இந்தச் சந்திப்பு நடந்ததாக கட்சிகள் தரப்பிலும், சினிமாவில் தனது எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே என திரைத் துறையிலும் பேசப்படுகிறது.

முந்தைய படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய் இப்போது, ‘கத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மோடி எப்படியும் பிரதமராகி விடும்பட்சத்தில், இங்கு அதிகாரத்தில் இருப்பவர்களால், பெரிய அளவில் பிரச்னைகளும் இருக்காது என்று கூறி, விஜயகாந்த் தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, வரும் 2016 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, விஜய் இந்த சந்திப்பை பயன்படுத்திக்கொண்டார் எனவும் கருத்து நிலவுகிறது.

இந்நிலையில், விஜயிடம் உங்கள் எதிர்கால கனவுகளுக்கு ஆதரவாக இருப்பேன் என மோடி கூறியதாக அறியப்படுகிறது.