கருப்பு பண புழக்கத்தை தடுக்க அன்னா ஹசாரேயின் புது இயக்கம்

Annaஜெய்ப்பூர் : அரசியல் கட்சிகளின் கருப்புப் பணப் புழக்கத்தை தடுக்கவும், ஊழலை ஒழிக்கவும், உண்மையான சுதந்திர போராட்டம் என்ற பெயரில், புதிய இயக்கத்தை துவங்கவுள்ளதாக, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேசியதாவது:மத்தியில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றி, வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. லோக்சபா தேர்தல் நிதி வசூல் என்ற போர்வையில் ஏராளமான கருப்புப் பணத்தை, வெள்ளையாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நம் நாடு, 1947ல் சுதந்திரம் அடைந்தது. எனினும் நமக்கும் இன்னும் உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை.’ஒத்துழையாமை இயக்க’ தினமான, ஆகஸ்ட் 9 அன்று, ‘உண்மையான சுதந்திர இயக்கம்’ என்ற புதிய இயக்கத்தை துவங்கவுள்ளேன். டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட, முக்கியமான, ஒன்பது நகரங்கள் மற்றும் 660 மாவட்டங்களில் இந்த இயக்கம் துவங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்.

இதில், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை குறித்து முழுமையான விசாரணை நடத்த வலிறுத்துவோம். லோக்பால் அமைப்பைப் போல், கருப்புப் பணப் புழக்கத்தை தடுக்க தனியான அமைப்பை ஏற்படுத்த, மத்திய அரசை வலியுறுத்துவோம். இந்த இயக்கம் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் வரை ஓயாது.இவ்வாறு, அவர் கூறினார்.

TAGS: