சிலாங்கூரில் நீர் இருப்பு 29 நாள்களுக்கு மட்டுமே போதுமானது

damநேற்று சிலாங்கூரில்  கடும்  மழை பெய்து  அதன்  விளைவாக பல  இடங்களில்  திடீர்  வெள்ளம்  ஏற்பட்டது. இதனால்  மாநிலத்தின்  நீர்ப்  பங்கீடு  முடிவுக்கு  வரும்  என்று  நினைத்தால்  அது  தவறாகும்.

“முக்கிய  அணைக்கட்டான  சுங்கை  சிலாங்கூர்  அணையில்  நீரின்  அளவு  குறைவாகவே  உள்ளது. நீர்ப் பங்கீட்டை  நடைமுறைப்படுத்தாவிட்டால் 29  நாள்களுக்குப் பிறகு  தண்ணீர்  இருக்காது”,  என  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தார்.

“இந்நிலவரத்தை  யாரும்  தங்களுக்குச் சாதகமாக்கிக்  கொள்ளக்கூடாது.  வானிலைதான் இதற்குக்  காரணம். (அணைக்கட்டில்  நீர்மட்டம்  உயர) இன்னும்  போதுமான  மழை  இல்லை”, என்றாரவர்.