சீன என்ஜிஓ கூட்டமைப்பு பாஸின் ஹுடுட் திட்டத்துக்கு எதிர்ப்பு

hududகிளந்தானில்  ஹுடுட்  சட்டத்தை  அமல்படுத்தவும்  அதற்காக  நாடாளுமன்றத்தில்  தனி உறுப்பினர்  சட்டவரைவு  ஒன்றைக்  கொண்டுவரவும்  பாஸ்  திட்டமிட்டிருப்பதற்கு  சீன  என்ஜிஓ-களின்  கூட்டமைப்பு  ஒன்று  எதிர்ப்புத்  தெரிவித்துள்ளது.

மலேசியா  சமயச்  சார்பற்ற  நாடு  என்பதைக்  கூட்டரசு  அரசமைப்பு  தெளிவாக  எடுத்துரைக்கிறது என்றும்  அதை  1988ஆம்  ஆண்டில்  உச்ச நீதிமன்றமும்  வலியுறுத்தியது  என்றும்  அந்த  22  என்ஜிஓகளும்  ஒரு  கூட்டறிக்கையில்  தெரிவித்தன.

“அந்தச்  சட்டவரைவை  மீட்டுக்கொள்ள  வேண்டும்  எனவும்  மலேசியாவின்  பல்லின  கலாச்சாரத்துக்கும்  இங்கே உள்ள  பல  சமயங்களுக்கும்  மதிப்பளிக்க  வேண்டும் எனவும் பாஸைக்  கேட்டுக்கொள்கிறோம்”, என்று  அவை  கூறின.

ஹுடுட்  சட்டம்  முஸ்லிம்களுக்கு  மட்டும்தான்  என்றாலும்  அதனால்  முஸ்லிம்-அல்லாதார்  சிக்கல்களையும்  தேவையில்லாத  விளைவுகளையும்  எதிர்நோக்கலாம்.