கர்ப்பால் சிங்

கர்ப்பால் சிங் நீ

என்றும்

ஜனநாயக கட்சியின் கிங்…karpal

 

அரசியல் அமைப்பு உன் சிம்மாசனம் …

ஆளும் கட்சிக்கு நீ சிம்ம சொப்பனம் …

 

இராமருக்கு ஒரு சொல்

ஒரு வில்

ஒரு இல்லாள்

பிரதானம்… 

ஒரு கொள்கை ஒரு கட்சி ஒரு பேச்சு

உன் மூச்சு…

 

என் தலைமை நீதிபதியும் ஒப்புக் கொள்வான்

நீ நீதி தேவதையின் தவப்புதல்வன் என்று…

 

கட்சிக்கு நீ தல…

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீ தளபதி…

நாடாளுமன்றத்தில் நீ கர்ஜிக்கும் சிங்கம்…

நீதிமன்றத்தில் நீதியின் நாயகன்…

கிட் சியாங்கிற்கு நீ நண்பன்…

 

எங்களுக்கு இனி கிடைக்குமா உன்னைப்போல் ஒரு தலைவன்!!!

 

பூபாலன் முருகேசன்