இறந்துபோனவர்கள் மற்ற சமயத்தாராக இருந்தாலும் முஸ்லிம்கள் மரியாதை காண்பிக்க வேண்டும்

jamilபிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹரோம்,  இறந்துபோனவர்கள்  மற்ற  சமயத்தாராக  இருந்தாலும்  அவர்களுக்கு  முஸ்லிம்கள்  மரியாதை  காண்பிக்க  வேண்டும்  என  அறிவுறுத்தியுள்ளார்.

“மனிதர்கள்  என்ற  முறையில்  நாம் ஒருவரை  மற்றவர்  மதிக்க  வேண்டும்…….இறப்பு போன்ற  விவகாரங்களில்  ஒருவருக்கொருவர்  மரியாதை  கொடுப்பது  நல்லுறவைக்  கட்டிக்காக்க  உதவுகிறது”,  என்றாரவர்.

கர்பால்  சிங்கின்  இறப்பின்போது  பிஎன்னின்  லங்காவி  எம்பி  நவாவி  அஹ்மட்டும்  முன்னாள்  ஷா  ஆலம்  பிஎன்  வேட்பாளர்  சுல்கிப்ளி  நூர்டினும்  தரக்குறைவாக   கருத்துக்கள்  வெளியிட்டிருந்தது  குறித்து  கருத்துக்  கேட்கப்பட்டதற்கு  ஜமில்  இவ்வாறு  கூறினார்.

ஆனால்,  அவர்கள்  என்ன  சொன்னார்கள்  என்பது தமக்குத்  தெரியாது  என்பதால்  அது  பற்றிக்  கருத்துரைக்க  அவர்  மறுத்தார்.

நவாவி,  தாம்  பதிவிட்ட  கருத்துக்களுக்காக  மன்னிப்பு  கேட்டுக்கொண்டார். சுல்கிப்ளி- பலரும் தம்  கருத்துக்களைக்  கண்டித்ததை  அடுத்து- கர்பாலைப்  புகழ்ந்து  பேசலானார்.