ஹிஷாம்: நிபுணர்களுக்காக ‘சல்லிக்காசு’ செலவில்லை

hishamஎம்எச்370-இன்  தேடும்பணி  ஒருங்கிணைக்கப்படும்  பெர்த்  நகருக்குச்  செல்லத்  திட்டமிடுவதாக  இடைக்காலப்  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  டிவிட்டரில்  அறிவித்துள்ளார்.

“அது  பற்றி (கூட்டு  ஒருங்கிணைப்பு  மையத்  தலைவர்)  ஆங்குஸ்  ஹூஸ்டனுடன்  பேசிக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை   புளுபின்  மிச்சமுள்ள  20 விழுக்காட்டு  தேடலையும்  முடித்த  பிறகு  செல்லக்கூடும்”, என்றாரவர்.

மேலும்,  காணாமல்போன  எம்எச்370-யைத்  தேடும்பணியில்  உதவும்  நிபுணர்களுக்காக  “சல்லிக்காசு:”  கூட  செலவிடவில்லை  என்றும்  அமைச்சர்  டிவிட்டரில்  கூறி  இருந்தார். எல்லாருமே தன்னார்வத்துடன்  உதவுகிறார்கள்.