மகாதிர்: குறைகூறலுக்கு இடமளியுங்கள், இல்லையேல் விளைவு விபரீதமாக இருக்கும்

mahதலைவர்கள்  குறைகூறல்களுக்குக்  காது  கொடுக்க  வேண்டும். தவறினால்  வன்முறைகளை  எதிர்நோக்கக்  கூடும்,  அரசாங்கம்  கவிழ்க்கப்படும்  அபாயமும்  ஏற்படலாம்  என்று  எச்சரிக்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

‘ஆட்சியில்  இருப்பவர்களுக்கு’  என்ற  தலைப்பில்  தம்  வலைப்பதிவில்  பதிவிட்டிருக்கும்  ஒரு  கட்டுரையில்,  தலைவர்கள்  ஆலோசகர்களை   மட்டுமே  நம்பி  இருப்பது  ஆபத்தானது  என்றவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம்  பிரதமராக  இருந்தபோது,  எதிரணியினர்  கருத்துக்களுக்குச்  செவிசாய்த்ததில்லை  என்பதையும்  அவர்  ஒப்புக்கொண்டார். ஏனென்றால்,  அரசாங்கத்தை  எதிர்ப்பதே  அவர்களின்  இயல்பு.

“ஆனால், மூன்றாம்  தரப்புகளின்  கருத்துக்கள்  உண்மையானவையாக  கவனத்துக்கு  உரியவையாக  இருக்கும்”,  என்றாரவர்.