அன்வார்: என்னைச் சந்திக்காதிருக்க ஒபாமாவுக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டிருக்கிறது

obamaஎதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம், அமெரிக்க  அதிபர்  பராக்  ஒபாமாவுக்கு  அவரது மலேசிய  வருமையின்போது  தம்மைச்  சந்திக்க  வேண்டாம்  என்று  நெருக்குதல்  கொடுக்கப்பட்டிருக்கலாம்  என  நினைக்கிறார்.

“அமெரிக்க  அதிபர்  அடுத்த  வாரம் பசிபிக்-வட்டார  பங்காளித்துவ  ஒப்பந்தத்தில் (டிபிபிஏ) கையொப்பமிடுவதற்காக  மலேசியா  வரும்போது என்னைச் சந்திக்க  வேண்டாமென்று  பிரதமர்  நஜிப் (அப்துல் ரசாக்)  அவருக்கு  நெருக்குதல்  கொடுத்திருப்பார்  என  நினைக்கிறேன்..

“நஜிப்  டிபிபிஏ–இல்  கையெழுத்திட  ஒப்புக்கொண்டிருக்கிறார்”,  என்று  அன்வார்  கூறினார்.

மலேசிய- அமெரிக்க  நல்லுறவை  பக்காத்தான்  ரக்யாட்  என்றும்  ஆதரிப்பதாக  அன்வார்  கூறினார்.

“இரு  நாடுகளுக்குமிடையில்  வர்த்தகத்தையும்  முதலீடுகளையும்  ஆதரிக்கிறோம்.  ஆனால், டிபிபிஏ-ஐ  ஆதரிக்கவில்லை”.

அதில் உள்ள  சில  விதிகள்  உள்ளூர்   தொழில்களுக்குப்  பாதகமானவை  என்றாரவர்.