ஹுடுட் திட்டத்துக்கு ‘அறுவை-சிகிச்சை துணைபோவதா?’ ஒத்து வராது என்கிறார்கள் மருத்துவர்கள்

tharmaகிளந்தான்  அரசு,  ஹுடுச்  சட்டத்தைச்  செயல்படுத்த  முடிந்தால்  அறுவை  சிகிச்சை  நிபுணர்களைக்  கொண்டு  உறுப்புகள்  வெட்டி  எடுக்கும்  தண்டனை  நிறைவேற்றப்படும்  என்று  அறிவித்திருப்பதைக்  கேட்டு  மலேசிய  மருத்துவர்  சங்கம் (எம்எம்ஏ)  அதிர்ச்சி  அடைந்துள்ளது.

ஹுடுட்  சட்டத்தின்படி  குற்றவாளிகள்  என்று  தீர்ப்பளிக்கப்பட்டவர்களின்  உடலுறுப்புகளை  வெட்டி  எடுப்பது “மருத்துவ  நெறிகளுக்கும் நடைமுறைகளுக்கும்  எதிரானது”  என எம்எம்ஏ  தலைவர்  டாக்டர்  என்.கே.எஸ். தர்மசீலன்  தெரிவித்தார்.

பிரம்படி  தண்டனைக்குச்  சாட்சிகளாக  இருக்கக்கூடாது  பிரம்படி  அல்லது  சவுக்கடி  கொடுக்கலாம்  எனச்  சான்றிதழ்  கொடுக்கக்கூடாது  என்று உலக  சுகாதார  நிறுவனம் மருத்துவர்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது  என்று  குறிப்பிட்ட  தர்மசீலன் உறுப்புகளை வெட்டி எடுத்தல்   அதைவிட  “மோசமானது”  என்றார்.