எம்ஐஇஆர்: பிரிம் தீர்வைக் கொண்டுவரவில்லை; பணவீக்கத்தைத்தான் தூண்டி விடுகிறது

brimஅரசாங்கம்  ஏழை-பணக்காரர்  இடைவெளியைக்  குறைக்க  பண உதவி  செய்வதை   நிறுத்த  வேண்டும்  என  மலேசிய  பொருளாதார  ஆய்வுக்  கழகம்(எம்ஐஇஆர்)  வலியுறுத்தியுள்ளது.

பந்துவான்  ரக்யாட்  1மலேசியா (பிரிம்) பணவீக்கத்தைத்தான்  உண்டாக்கும்  என்கிறார்  எம்ஐஇஆர்  செயல்முறை  இயக்குனர்  சக்கரியா  அப்துல்  ரஷிட்.

“நம்  உற்பத்தித்திறன்  கூடுகிறது…….வருமானம்  கூடுவதில்லை….என்பதே  ஒரு  பொருத்தமற்ற  நிலையாகும்”,  என்று  அந்த  எம்ஐஇஆரின்  பொருளாதார  நிபுணர்  அக்கழகத்தின்  காலாண்டு  விளக்கக்கூட்டத்தில்  கூறினார்.

“பிரிம்  ஒரு  தற்காலிக உதவியாக  இருக்குமே  தவிர  நிரந்தர  தீர்வல்ல”.

மலேசியப்  பொருளாதாரம்  சிறப்பாக  இருப்பதுபோல்  தெரியலாம்.  ஆனால்,  உள்ளுக்குள்   நுணுகி  ஆராய்ந்தால்தான்  பிரச்னைகள்  புலப்படும்  என்றாரவர்.

நாட்டின்  தொழிலாளார்பலத்தில்  மூன்றில்  ஒரு  பகுதியினர்  வெளிநாட்டுத்  தொழிலாளர்கள். உற்பத்தித்திறன்  பெருக்கத்துக்கு  இவர்களே  பெரும்பகுதி  காரணமாவர்.  அதேபோல்,  சம்பளம்  குறைவாக  இருப்பதற்கும்  இவர்களே  காரணமாக  இருக்கிறார்கள் என்றாரவர்.