மா: இந்து அறவாரியப் பொறுப்பு ‘பெருமைக்குரியது’

maதாம், இந்து  அறவாரியத்துக்குப்  பொறுப்பான  அமைச்சராக  நியமிக்கப்படிருப்பதைப்  பலர்  குறைகூறினாலும் கெராக்கான்  தலைவர்  மா சியு  கியோங்  அதைப்  பெருமையாகவே  கருதுகிறார்.

“இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும்  சேவை  செய்ய  கிடைத்த  வாய்ப்பை  எண்ணிப்  பெருமிதம்  கொள்கிறேன்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அது, கெராக்கான்  பல்லினங்களுக்கும்  பல  சமயங்களுக்கும்  ஏற்புடைய  ஒரு  கட்சி  என்பதற்கும்  சான்றாக  அமைகிறது  என மா  குறிப்பிட்டார்.