இராமசாமி ‘மலேசிய உணர்வற்றவர்’: கெராக்கான் சாடல்

tanகெராக்கான்  இளைஞர்  பகுதி,  அதன்  தலைவர்  மா  சியு கியோங்  இந்து  அறவாரியத்  தலைவராக  நியமிக்கப்பட்டிருப்பதைக்  குறைகூறிய  பினாங்கு  துணை  முதல்வர் II பி.இராமசாமியை “மலேசிய  உணர்வற்றவர்”  எனச்  சாடியுள்ளது.

மலேசியாவில்  இனம்  பார்ப்பது பொருத்தமற்ற  வேலை  என  அதன்  தலைவர்  டான்  கெங்  லியாங் கூறினார். ஒரு  மலேசியரால்  மற்றொரு  மலேசியரின்  நலனை  இன, சமய  வேறுபாடின்றிக்  கவனித்துக்கொள்ள முடியும் என்றாரவர்.

“ஒரு  இனத்தைச்  சேர்ந்த  அமைச்சர்தான்  அந்த  இனத்தைக்  கவனித்துக்  கொள்ள  வேண்டும்  என்ற  நினைப்பு  மலேசியர் என்ற  உணர்வைக்  காண்பிக்கவில்லை.

“பல்லின  நன்மைக்காக  பாடுபடுவதாகக்  கூறிக்கொள்ளும்  டிஏபி-யிடமிருந்து இப்படிப்பட்ட  கருத்தா?”, என்றவர்  குறிப்பிட்டார்.

“அப்படியானால், சீனரான  முதலமைச்சர்  குவான்  எங்,  சீனர்  சமூகத்தை  மட்டும்தான்  கவனித்துக்கொள்கிறார்  என்கிறாரா  இராமசாமி?”, என்றும்  டான்  வினவினார்.