சிலாங்கூர் MB பதவிக்கு அஸ்மின் /வான் இருவருக்கும் தகுதி இல்லை.

selangorஅடிப்படையில் சிலாங்கூர் PKR அநாகரீக குழப்படி தேர்தலில் அதிகாரமற்ற PKR துணை தலைவர் YB அஸ்மின் பதவியும் , சட்ட மன்றத்தில்  புதிதாய் இணைந்துள்ள YB வான் அசிசா இவர்கள் இருவரில் ஒருவர் சிலாங்கூர் மாநில MB பதவியால்  நிர்வாக சிககல் தீர்ந்து விடும் என்று சொல்வது முட்டாள் தனமாகும்.

PKR கட்சியில் கொல்லைப்புற பதவியில் குளறுபடி தேர்தல் முடிவில் இன்று துணை தலைவராக உள்ள அச்மீனின் கல்வி தகுதி என்ன வென்று யாருக்கும் தெரியவில்லை.

காரணம் முன்பு ஒரு பல்லு புடுங்கி டாக்டர் MB யாக இருந்து மாநிலத்தை நட்டமாக்கி  மாநில மக்களின் பற்களையும் சேதப்படுத்திய அனுபவம் நமக்கு உண்டு.

PKR தேசிய தலைவி க்கா ஒரு சிறந்த டாக்டர், சிறந்த குடும்ப தலைவி என்பதில் சந்தேகமில்லை. அன்வரின் நிதி மற்றும் நிர்வாக
ஆளுமையில் இவரின் MB பதவி பரிதவிக்கும் நிலையில் அவர் சோதனைகள்  தாங்க முடியாமல் தவிப்பார் எனபது நமது பயம்மாக உள்ளது. அன்வார் துணையுடன் சமாளித்தாலும் நடுவண் அரசு போராட்டம் தொடரும்.

1azminஅதுபோலவே அச்மின் அவர் அரசியல் சானக்கியராக இருப்பார். ஆனால் மாநில மற்றும் நடுவண் அரசு நிர்வாக கெடுபிடியில் தாக்குபிடிக்க முடியால்ம்ல் திணறுவார். அல்லது மாநிலமுன்னால் BN நிர்வாக ஜாம்பவான்கள் அழுத்தம் இவரை கதி கலக்கிடும் எனலாம்.

அரசியல் ரீதியில் PKR மாநில அளவில் க்ஹாலிட் அணி அஸ்மின் அணி என்ற இரு துருவங்களின் பிணியும் மற்றும் BN அதிகாரிகள் நிர்வாக பயணங்கள் இரு தண்டவாளங்கள் பிரிந்தே ஓடும் நிலையில் மக்கள் அல்லோலம் படுவர். பாகாதான் அரசியல் நிலை தன்மை ஆடிக்கொண்டேதான் இருக்கும் எனலாம்.

மாநில நீர் பிரச்னை / பைபிள் / சாலை / ஷ்யரியா /இன அடிப்படை வாழ்வாதார சிக்கல்கள் மேலும் சிதையுண்டு மொத்தத்தில் பாகாதான் அரசு கோணல் மாணலாக போகும் அபாயம் உண்டு.

இன்று பாகாதான் ஆட்சியில் நடுவண் போராட்ட சூழலில் TSK விட ஒரு சிறந்த MB யை அடையாளம் காண்பது முடியாது. ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு. Better work with a known devil then a unknown ghost. என்பார்கள். தெரியாத பேயுடன் இருப்பதை காட்டிலும் தெரிந்த பிசாசுன் வேலை செய்யலாம் என்பது பாகாதான் மக்கள் கூட்டணிக்கு மிகபபொருந்தும்.

பொதுவாகவே அச்மினை DAP யும் pas ம் விரும்பவில்லை என்பது நாட்டு மக்களின் அரசியல் கணிப்பு. PKR தலைமை தலைவரும் இதே பார்வையில்தான் உள்ளார் என்பதும் நிதர்சனம். ஆனால் மூன்று மாதத்திற்கு முன்பு இருந்த அன்வாரின் நிலை இன்று மாறி உள்ளது
வியப்புதான்? அரசியல் மாற்றம் அரசு விவேகம் என்பதை அடிக்கடி குழப்பி மக்களை வெறுப்பு ஏத்தினால் அது ஒரு கட்டத்தில் நிலை குத்தி
போகும் அல்லது வீசிய அம்பு அரசியல் காற்றில் திரும்ப குத்தும்.

azminஇதில் அன்வார் மட்டும் தன அரசியல் அரசு ஆசைக்கு மீசைக்கும் அர்த்தங்கள் பல கூறினாலும் இது ஒப்புக்கு ஒட்டி வைக்கும் மீசையாக விழுவது திண்ணம். ஒத்தி ஒத்தி வளர்க்க இது சொந்த சுதந்திரம் அல்ல?மக்கள் ஜனநாயகம்.

வான் அக்காவை பொறுத்த மட்டில் PKR தலைமையில் அன்வார் ,வான் அதற்குபின்னால் நுருல் என்ற குடும்ப அரசியல் பாகாதானின் ஆமை வீடாக அமினா பார்வையில் மக்கள் வேப்பிலை தனமாக கசந்துள்ளனர்.

காஜாங் திட்டமும் தோல்வியும் PKR வியூகத்தில் பல குழப்பங்களை தாண்டி மாநில MB யில் நின்று …இன்று பாகாதான் உறவில் பரிதாபம் வர மூல காரணம் யார் என்று அறிவுதிர் PR அரசியல் வாதிகளுக்கு தெரியும். மாற்றம் என்பதை குழப்பிக்கொண்டே இருதால் அரசியல் ஒரு குழப்ப நிலை அடைந்து தலைவர்களை மக்கள் மாக்கள் கொட்டைகளில்
கட்டிப போட்டுவிடுவார்கள்.

மக்களை மயக்க அரசியல் விவேகம் வேறு , நிர்வாக விவேகம் சட்ட அடிப்படையில் ஆளப்படுதல் இரண்டும் வெவ்வேறு தத்துவத்தை , தர்மத்தை கையாளும்.

நியாயமாக யோசித்தால் TSK சரி இல்லை என்பது காரணமானால் புதியவர் எப்படி சரியானவர் என்று …………….கேக்கலாம். களைத்து விடுவோம் ……புதியவரை பார்ப்போம் என்று …………சொன்னால். என்னவாகும்?

அங்க சுத்தி, இங்க சுத்தி  நொண்டி நொண்டி குதிரைகளை நம்பி ஓடுவதை விட்டு TSK தவணை வரை விட்டு விட்டு அடுத்த நடுவண் போராட்டத்தில் வெற்றி பெற வியூகம் செய்தால் பாகாதான் மக்கள் கூட்டணி உருப்படும்.

– Pon Rangan