மனிதன் மனிதனாக வாழ வழி காட்டும் வழி காட்டி நூல் திருக்குறள்

tirukuralமனிதன் தான் சார்ந்துள்ள மத போதனை நூல்களுக்கு அப்பால் மனிதன் மனிதனாக வாழ வழி காட்டும் வழி காட்டி நூல் திருக்குறள். இந்த நூல் தமிழ் மொழியில் படைக்கப் பெற்றதற்கு உலக தமிழர்கள் அனவரும் திருக்குறள் படைப்பாளர் திருவள்ளுவருக்கு நன்றி கூறுவோம்.

திருக்குறள் சுமார் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் திருக்குறளை  வாசித்து பயன் பெற வேண்டும் என்று திருக்குறள் தொடர்பான தகவலை தொகுத்துள்ளேன்.

1330 குறளையும் ஒரு நாளுக்கு ஒரு குறள் என்று வாசித்தால், முழுமையாக வாசித்து முடிய 3.6 ஆண்டுகளாகும் (3 ஆண்டுகள் 235 நாட்கள்)

1330 குறளையும் ஒரு நாளுக்கு இரண்டு குறள்கள் என்று வாசித்தால், முழுமையாக வாசித்து முடிய 1.8 ஆண்டுகளாகும் (1 ஆண்டு 300 நாட்கள்)

1330 குறளையும் ஒரு நாளுக்கு பத்து குறள்கள் என்று வாசித்தால், முழுமையாக வாசித்து முடிய  133 நாட்களாகும்.

1330 குறளையும் வாசிக்க தொடங்காவிட்டால், முழுமையாக வாசிக்கும் முன் ஆயுள் முடிந்து விடும்.

பகுதி 1
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள்.

பகுதி 2
திருக்குறள் வாசிப்போம் – திருக்குறளை தமிழ் / ஆங்கிலத்தில் விளக்கத்துடன் வாசிக்கலாம். தமிழில் மு.வரததாசனார் / சாலமன் பாப்பையா அவர்களின் எளிய விளக்கத்துடன்.

பகுதி 3
திருக்குறள் வாசிப்போம் – திருக்குறளை தமிழ் / ஆங்கிலத்தில் விளக்கத்துடன் வாசிக்கலாம்.

பகுதி 1
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 38 கட்டுரைகள் அவற்றில் 18 கட்டுரைகளின் தலைப்பையும் அதன் குறுகிய இணையதள இணைப்பையும் பதிந்துள்ளேன்.

திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது. பொருண்மைச் சிறப்பு சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. – நா.தனராசன்

1.இன்றைய தேவை: அறவியல் நோக்கிலான வள்ளுவம் – அ.அறிவுநம்பி – http://goo.gl/jvK1tp
2.இக்கால உலகின் மத நல்லிணக்கத்திற்குத் திருக்குறள் தேவை – இ.எம்.இராமச்சந்திரன் – http://goo.gl/aoFscy
3.வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன் – http://goo.gl/IsNJhM
4.வளமான இல்லறத்திற்கு வள்ளுவர் தரும் காமத்துப்பால் – ஜெ.கெ.வாசுகி – http://goo.gl/g9YjI6
5.திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள் – ந.முருகேச பாண்டியன் – http://goo.gl/eHREep
6.இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் – தா.டைட்டஸ் ஸ்மித் – http://goo.gl/LmJWXD
7.வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும் – சி.அழகர் – http://goo.gl/NbYTTz
8.இக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை சமுதாய நோக்கு – சி.கே.இரவிசங்கர் – http://goo.gl/98aAmQ
9.வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம் – நாராயண துரைக்கண்ணு – http://goo.gl/2lMT06
10.சமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு – பி.டி.கிங்ஸ்டன் –
http://goo.gl/DmeJJl 
11.திருவள்ளுவர் கண்ட இல்லறச் சமூகம் – கா.காந்தி – http://goo.gl/ga5Hpm
12.வள்ளுவ இல்லறம் – இரா.முருகன் – http://goo.gl/OEQNjt
13.நல்லாண்மை என்பது இல்லாண்மையே – ஆ.இலலிதா சுந்தரம் –
http://goo.gl/tCAsv1 
14.வள்ளுவத்தில் இல்லறம் – கே.எஸ்.இராமநாதன் – http://goo.gl/azjhXA
15.வள்ளுவரின் பொருள் ஆதாரக் கோட்பாடுகள் – ப.யசோதா –
http://goo.gl/u8zQYr 
16.திருக்குறள் கூறும் வருவாய் முறைகள் – இரா.செல்வராஜ்               – http://goo.gl/rltfpH 
17.திருவள்ளுவரின் பொருளாதாரச் சிந்தனைகள் – நா.ஜானகிராமன்   -http://goo.gl/BpmgMY
18.திருவள்ளுவர் கூறும் பொருளாதாரம் – செ.ஹேமலதா                     – http://goo.gl/Zy7yCc 

மேலும் வாசிக்க
திருக்குறள் (38) –   http://goo.gl/hy5wx2
இணையதளம் – http://thoguppukal.wordpress.com/ 

பகுதி 2

திருக்குறள் வாசிப்போம் – கீழ் உள்ள இணையத்தளத்தின் திருக்குறளை தமிழ் / ஆங்கிலத்தில் விளக்கத்துடன் வாசிக்கலாம். தமிழில் மு.வரததாசனார் / சாலமன் பாப்பையா அவர்களின் எளிய விளக்கத்துடன்.
http://www.tamillexicon.com/thirukkural/araththuppaal/ 

திருக்குறள் / Thirukkural
திருக்குறள் என்பது மானிட வாழ்வியல் சார்ந்த இலக்கியமாகும். இது வள்ளுவர் எனும் புலவரால் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் இயற்றப்பட்டதாகும். திருக்குறளுக்கு உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களும் உண்டு.

கடவுள் வாழ்த்து / The Praise of God / Katavul Vaazhththu
குறள் #1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

Couplet 1
A, as its first of letters, every speech maintains;
The “Primal Deity” is first through all the world’s domains.

Explanation
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.

Transliteration
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku.

மு.வரததாசனார் உரை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பகுதி 3

திருக்குறள் வாசிப்போம் – கீழ் உள்ள இணையத்தளத்தின் திருக்குறளை தமிழ் / ஆங்கிலத்தில் விளக்கத்துடன் வாசிக்கலாம்.
http://www.gokulnath.com/thirukurals/1 

ஆக்கம்
போகராஜா குமாரசாமி