இவரா எம்எச் 17மீது ஏவுகணையைப் பாய்ச்சிவர்?

igorஎம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்தியவர்  என்ற  சந்தேகத்துக்கு  உரியவராக  இருப்பவர்  இகோர் கீர்கின். இவர், சுயமாக  பிரகடனம்  செய்துகொள்ளப்பட்டிருக்கும்  டொனெட்ஸ்க்  மக்கள்  குடியரசின்  தற்காப்பு  அமைச்சராவார்.

முன்னாள்  உளவுத்துறை  அதிகாரியான  இவருக்கு  ஸ்ட்ரெல்கோவ்- சுட்டுத்தள்ளுபவர்-  என்ற  பட்டப்பெயரும்  உண்டு  என  சிட்னி  மோர்னிங்  ஹெரால்ட்  கூறுகிறது. உத்தரவுக்குக்  கீழ்ப்படியாத  சொந்தப்  படையினரையே  சுட்டுத்தள்ளி  விடுவாராம்.

ரஷ்ய  சமூக  வலைத்தளத்தில்  வெளிவந்த  ஒரு  செய்திதான் அனைவரின்  கவனத்தையும்  அவர்  பக்கம்  திரும்பியது. “நாங்கள்தான்  எச்சரித்திருந்தோமே- எங்கள்  வானத்தில்  பறக்க  வேண்டாமென்று”. இச்செய்தியை  பதிவிட்டவர்  கீர்கின்  என்று  கூறப்பட்டது.

சுட்டு  வீழ்த்தப்பட்டது  ஒரு  சிவில்  விமானம்  என்பதும்  அது    யுக்ரேய்னின்  சிவில்  இராணுவ  விமானம்  அல்ல  என்பதும்  உறுதியான  பின்னர்  அப்பதிவு  அகற்றப்பட்டது.