ஏவுகணையைப் பாய்ச்சியவர் யார்? கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்

missileசெயற்கைக்  கோள்  படங்கள்,  எம்எச்17-ஐ  சுட்டுவீழ்த்திய  ஏவுகணை  புகையைக்  கக்கியவாறு தரையிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்து  செல்வதைக்  காண்பிக்கின்றன. அகச்சிவப்பு  உணரிகள்  விமானம்  வெடித்தைப்  பதிவு  செய்துள்ளன.

இவற்றை வைத்து  ஏவுகணையைப்  பாய்ச்சியவர்கள் யார், ஏன்  பாய்ச்சினார்கள், எங்கிருந்து  பாய்ச்சினார்கள்  முதலிய  விவரங்களைக்  கண்டறியும்  முயற்சியில்  அமெரிக்க  ஆய்வாளர்கள்  ஈடுபட்டுள்ளனர்.

அந்த  ஆய்வின்  முடிவுகளை வைத்துதான் அனைத்துலக  சமூகம்,  விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட  சம்பவத்துக்கு எதிரான அதன்  அடுத்த  கட்ட  நடவடிக்கைகளைத்  தீர்மானிக்கும்.

இதனிடையே,  ஐநாவுக்கான  அமெரிக்கத்  தூதர்  சமந்தா  பவர்   “தரையிலிருந்து  விண்ணுக்குப் பாயும்  எஸ்ஏ-11 ரக  ஏவுகணைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரிவினைவாதிகள்  வசமுள்ள  கிழக்கு யுக்ரேய்ன்  பகுதியிலிருந்து  பாய்ச்சப்பட்டிருக்கிறது”  என்பதுதான்  அமெரிக்காவின் கணிப்பு  எனக்  கூறியுள்ளார்.