இராணுவ மயப்படுத்தல்கள் அதிகரித்துள்ளன! வடக்கின் ஆளுனராக சிவிலியன் ஒருவரை நியமிக்கவும்!– மனோ கணேசன்

manoGaneshanநாட்டில் இராணுவ மயப்படுத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கின் ஆளுனராக இரண்டாவது தடவையாகவும் இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கில் லயனல் பெர்னாண்டோ என்ற சிங்கள ஆளுனர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியீட்டலாம் என்ற கருத்து நிலவியது. அவ்வாறான ஓர் சிவிலியன் ஒருவரை ஆளுனராக நியமிக்கவும்.

நாட்டின் சகல நிறுவனங்களிலும் இன்று இராணுவ அதிகாரிகள் பதவி வகிக்கின்றனர். இதற்குத்தான் நாம் இராணுவ மயமாக்கல் என்கின்றோம்.

அடுத்த தடவை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது ஐரோப்பா, ஆபிரிக்கா மட்டுமன்றி மத்திய கிழக்கு நாடுகளினதும் ஒத்துழைப்பை இலங்கை இழக்க நேரிடும்.

தென் ஆபிரிக்க துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்த போது இடம்பெற்ற சம்பவங்களினால் ஆபிரிக்க நாடுகளின் உதவியை இழக்க நேரிடும்.

அளுத்கம பேருவளை சம்பவங்களினால் மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பை இழக்க நேரிடும்.

அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் காணப்படும் குறைபாடுகளே வெளிநாடுகளின் ஒத்துழைப்பை இழக்கக் காரணம்.

வெளிவிவகார அமைச்சர் இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

வடக்கின் ஆளுனராக சிவிலியன் ஒருவரை அரசாங்கம் உடனடியாக நியமிக்க வேண்டுமென மனோ கணேசன் கோரியுள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: