இளவயது மலாய்க்காரர்கள் டிஏபி-இல் சேர்வதால் கடுப்பானது இஸ்மா

dapமேலும் ஒரு  மலாய்ப்  பெண்  டிஏபி-இல்  சேர்ந்திருப்பது  கண்டு  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)  கொதித்துப்  போயுள்ளது.

அது,  இளம்  மலாய்க்காரர்களை  எளிதில் “ஏமாற்றுவதில்”  டிஏபி  வெற்றிகண்டு  வருவதைக்  காண்பிப்பதாக  இஸ்மாவின்  உதவித்  தலைவர்  அப்துல்  ரஹ்மான்  மாட் டாலி  கூறினார்.

அவர், ஷபுரா  ஒத்மான்  அண்மையில்  டிஏபி  உறுப்பினரானது  பற்றிக்  கருத்துரைத்தபோது  இவ்வாறு  கூறினார்.

இளவயது  மலாய்க்காரர்களுக்கு அவர்களின்  வரலாறு, இஸ்லாம்,  கூட்டரசு  அரசமைப்பில்  உள்ள  சமுதாய  ஒப்பந்தம்  பற்றியெல்லாம்  தெரியாது.

“தெரிந்திருந்தால்  அவர்கள்  டிஏபி-இல்  சேர  மாட்டார்கள்”, என  ரஹ்மான்  கூறினார்.

“இப்பெண்களை  அங்குமிங்கும்  அழைத்துச்  சென்று  மலாய்க்காரர்களுடனும்  இஸ்லாத்துடனும்  தங்கள்  கட்சி  தோழமை  உணர்வு  கொண்டிருப்பதாக  டிஏபி  தலைவர்கள்    காண்பித்துக்கொள்வார்கள்.

“இவையெல்லாம் இன்றைய  இளம்  மலாய்க்காரர்கள்  அவர்களின்  அடையாளத்தை  இழந்து  வருவதற்கான  அறிகுறிகள்”, என்றாரவர்.