பாஸ்: மாஸ் புரிந்த பாவங்கள் அல்லாவின் சினத்திற்கு இட்டுச் சென்றது

 

PAS-MASமலேசிய விமான நிறுவனமான மாஸ் புரிந்த பாவங்கள் அல்லாவின் கோபத்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்று எம்எச்17 பேரிடரைத் தொடர்ந்து கருத்துரைத்த கெடா பாஸ் இளைஞர் தகவல் பிரிவு தலைவர் அஹமட் தார்மிஸி சுலைமான கூறுகிறார்.

மதுபானம் வழங்குதல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. மாஸ் விமான பணிப் பெண்கள் அணியும் உடை இஸ்லாத்தின் எல்லையை மீறுகிறது என்று அவர் கூறுகிறார்.

கடந்த வியாழக்கிழமை அம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த எம்எச்17 விமானம் உக்கிரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதே வேளை, தார்மிஸி இச்சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அவரின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.

பாஸ் ஓர் இஸ்லாமிய கட்சி என்ற முறையில் அரசாங்கமும் மாஸ் உயர்மட்ட நிருவாகத்தினரும் மாஸை சூழ்ந்துள்ள பிரச்சனைகளில் மிகpas-mas1 முக்கியமான பிரச்சனையின் அடிப்படையில் கவனிக்க வேண்டும், அதாவது ஆண்டவன் மற்று அவரின் படைப்பு ஆகியவையாகும் என்றாரவர்.

“மாஸ் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இந்த விமானம் ஆண்டு தோறும் குரான் வாசிப்பு போட்டி நடத்தும் நாட்டின் விமானம் என்ற உணர்வைத் தருவதில்லை”, என்று அவர் மேலும் கூறினார்.

மதுபானம் மற்றும் உடை சம்பந்தப்பட்ட இஸ்லாமிய கோட்பாடுகளை புறக்கணிப்பது குரானின் உள்ளடங்களைன் ஒரு பகுதியை அலட்சியம் செய்வதற்கு ஒப்பாகும் என்று தார்மிஸி தெரிவித்தார்.

“அரசாங்கம் அதன் எண்ணங்களையும் உணர்வுகளையும் தானே பரிசோதித்துக்கொள்ளவும் அல்லாவின் ஆசிர்வாதத்தைப் பெறவும் விரும்பினால், மதுபானம் வழங்காவிட்டால், பணியாளர்கள் இஸ்லாமிய உடை விதிகளைப் பின்பற்றினால், எத்தனை பயணிகள் மாஸ் விமானத்தில் பயணிக்க விரும்ப மாட்டார்கள் என்பதை கண்டறிவதற்காக ஓர் ஆய்வை மேற்கொள்வதைல் என்ன தவறு இருக்கிறது”, என்று அவர் வினவினார்.