நஜிப்புக்கு அவரின் அரசியல் வைரிகளும் பாராட்டு

pm naலிம்  கிட்  சியாங்கும்  அன்வார்  இப்ராகிமும்  எம்எச் 17  விவகாரத்தை  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்  கையாளும்  விதத்தைப்  பாராட்டியுள்ளனர்.

மலேசிய  வழக்குரைஞர்  மன்றத்தின்  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசனும்  டிவிட்டரில்  பிரதமரைப்  பாராட்டினார்.

கறுப்புப் பெட்டிகளைப் பெறும்  முயற்சியில்  நஜிப் வெற்றி  பெற்றதற்காக  லிம்  பாராட்டுத்  தெரிவித்துக்  கொண்டார்.

“ஜூலை  17-இல்,  ஈவிரக்கமின்றி  298  பயணிகளையும்  பணியாளர்களையும் கொன்றவர்களை  நீதிமுன்  நிறுத்துவதில்  மலேசியர்கள்  நஜிப்பும்  அரசாங்கத்துக்கும்  முழு  ஆதரவு  கொடுக்க  வேண்டும்”  என்றவர்  கேட்டுக்கொண்டார்.