முன்னாள் சிஜே: பினாங்கில் இஸ்லாத்துக்கு ஆபத்து

cjusபினாங்கில்  முஸ்லிம்கள்  பிரச்னைகளை  எதிர்நோக்குவதாகவும்  தீர்வுகாணாவிட்டால்  நிலைலை  மோசமடையும் என்றும்  முன்னாள்  தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  எச்சரித்துள்ளார்.

இஸ்லாமிய  நடவடிக்கைகளுக்கு  நிதி ஒதுக்கீடு  பெறுவதுகூட  சிரமமாக  இருக்கிறது  என  முன்னாள்  முப்தி  ஒருவர்  குறைப்பட்டுக்  கொண்டதாக  அவர்  சொன்னார். ஏனென்றால்  மற்ற  சமய  தரப்பினரும்  தங்களுக்கும் உரிய  பங்கு  தேவை  என்கிறார்களாம்.

“இதைத்  தடுத்து  நிறுத்தாவிட்டால், அது  மலேசியா  முழுவதும்  பரவக்கூடும். இஸ்லாமிய  நிகழ்வுகளை  மற்ற  சமயங்களுடன்  சேர்ந்து   செய்ய  வேண்டிய  நிலை  உருவாகலாம்.

“அரசாங்கத்  துறைகளிலும்  வளாகங்களிலும்  தொழுகை  இடங்களை மட்டுமல்லாமல்  தேவாலயங்கள்,  குருத்துவாராக்கள்,  கோயில்கள்  ஆகியவற்றையும்  கட்டித்தர  வேண்டியிருக்கும்”  என்றாரவர்.

இதனால்,  இஸ்லாத்தின்  சிறப்பு  நிலைக்கே  அர்த்தமில்லாது  போய்விடும்  என்று  ஹமிட் கூறினார்.