மோடி பதவியேற்ற பின் 19 முறை அத்துமீறல்: பாகிஸ்தானுக்கு அருண் ஜெட்லி கடும் எச்சரிக்கை

  மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பாகிஸ்தானின் அத்துமீறல்களை பட்டியலிட்டு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,

கடந்த 16 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாடுகோடு பகுதியில், போர் நிறுத்தத்தை 54 முறை பாகிஸ்தான் மீறி உள்ளது.

மோடி பதவி ஏற்றுக் கொண்ட போது  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அழைத்துப் பேசினார். அப்போது இரு நாடுகளும் நட்புறவுடன் இருப்பதும், எல்லை கட்டுப்பாடு கோட்டுப்பகுதியின் புனிதத் தன்மையை பாதுகாப்பதும், இப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதும் மிக முக்கியம் என்று பிரதமர் மோடி அவரிடம் வலியுறுத்தினார்

ஆனால் கடந்த மே மாதம் 26 ந்தேதி முதல் ஜூலை 17 ந்தேதி வரை 19 முறை துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம், போர் நிறுத்த விதிமுறைகளை மீறி தாக்குதல்களை நடத்தினால், நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். தக்க பதிலடி கொடுப்போம். எனவே பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்கவேண்டும் என்றார்.

TAGS: