‘பினாங்கில் இஸ்லாத்துக்கு ஆபத்து என முன்னாள் சிஜே பிதற்றுகிறார்’

malikபினாங்கில் இஸ்லாமிய  விவகாரங்களுக்குப்  பொறுப்பாக உள்ள  ஆட்சிக்குழு  உறுப்பினர்  அப்துல்  மாலிக்  காசிம், அந்த வடக்கத்தி  மாநிலத்தில்  இஸ்லாத்துக்கு  ஆபத்து  என்று  கூறிக்கொண்டிருக்கும்  முன்னாள்  தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  முகம்மட்டை  விளாசித்  தள்ளியுள்ளார்.

முன்னாள்  தலைமை  நீதிபதியின்  கூற்று  “அர்த்தமற்றது,  ஆதாரமற்றது,  செவிவழி  கேட்டதை வைத்துப்  பேசப்பட்ட  பேச்சு” என்று  மாலிக்  சாடினார்.

நாட்டின்  தலைமை  நீதிபதியாக  இருந்த  ஒருவர் ஆதாரமின்றி  இவ்வாறு  பேசக்கூடாது  என்றாரவர்.

“பினாங்கில்  இஸ்லாத்துக்கு  ஆபத்து  என்பதற்கு  ஹமிட்  ஆதாரம்  காண்பிக்க  முடியுமா. நாங்கள்  இஸ்லாமிய  அமைப்புகளுக்கு  போதுமான  நிதி  ஒதுக்கீடு  செய்வதில்லை  என்பதை  நிரூபிக்க  முடியுமா”,  என  மாலிக்  சவால்  விடுத்தார்.